சித்தருள்சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 73 ஆவது குருபூஜையும், அன்னதானமும் காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) சிறப்பாக நடைபெற உள்ளது.
ஆலய பரிபாலன சபை தலைவர் சி.நந்தேஸ்வரன் தலைமையில் நடைபெறவிருக்கின்ற அப்பாரம்பரிய நிகழ்விற்கு முன்னோடியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) குரு பூஜை தொடர்பான சித்தர் பட்டய அறிவிப்பு இடம்பெறும் .
வெள்ளிக்கிழமை (9)சுவாமிகள் முத்து சப்புறத்தில் வீதி வலம் வருவார்.
சனிக்கிழமை (10) சித்தர் ஆலயத்தில் கோமாதா பூஜை, 210 சித்தர்களுக்கான வேள்வி,அன்னதானம் மற்றும் திருவிளக்கு பூஜை என்பன நடைபெற இருக்கின்றன.
ஞாயிற்றுக்கிழமை (11)ஆயிரக்கணக்கான அடியார்கள் மத்தியில் 73வது குரு பூஜையும் அன்னதானமும் நடந்தேறஇருக்கின்றது. 12 ஆம் தேதி இடும்பன் பூஜையுடன் குருபூஜை நிறைவடையும்.