2024 – வரவு செலவுத் திட்டம் ஒரே பார்வையில் !!! - Karaitivu.org

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

செவ்வாய், 14 நவம்பர், 2023

2024 – வரவு செலவுத் திட்டம் ஒரே பார்வையில் !!!

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சை பொறுப்பேற்றதன் பின்னர் சமர்ப்பிக்கும் இது இரண்டாவது வரவு - செலவு திட்டமாகும்.


2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகளை 2 மணித்தியாலங்கள் நின்றவாறு வாசித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  வரவு - செலவு திட்ட வரைபு உருவாக்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் நன்றி தெரிவித்து.முன்மொழிவுகளை செயற்படுத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை கோரினார்.

இந்தியாவின் சென்னையில் உள்ள IIT பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின் கீழ், கண்டி நகரில் ஒரு புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தல் : 

19 கல்விக் கல்லூரிகளை இணைத்து தேசிய கல்விப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக 2024 ஆம் ஆண்டில் 01 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் :  

2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகளை 2 மணித்தியாலங்கள் நின்றவாறு வாசித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  வரவு - செலவு திட்ட வரைபு உருவாக்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் நன்றி தெரிவித்து.முன்மொழிவுகளை செயற்படுத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை கோரினார்.

பொருளாதாரம் மீட்சியடையாமல் லெபனான் நாட்டின் நிலைக்கு செல்வதா இல்லையா என்பதை எதிர்க்கட்சியினர் தீர்மானிக்க வேண்டும். ஒருகாலத்தில் பிரித்தானியாவுக்கு கடன் வழங்கிய நாம் இன்று முழு உலக நாடுகளிடமும் கையேந்துகிறோம் :  

பொருளாதார நெருக்கடிக்கு கடினமான தீர்மானங்களை  செயற்படுத்தாவிட்டால் நாடு மீண்டும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு உதவ எவரும் முன்வரமாட்டார்கள் :  

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு  கடினமான தீர்மானங்கள் இல்லாமல் போலியான அழகான விடையேதும் கிடையாது :  

எதிர்காலத்தை சிறந்த முறையில் வெற்றிகொள்ள வேண்டுமாயின் நிலைபேறான பொருளாதார கொள்கை செயற்படுத்த வேண்டும் :  

சுற்றுலா கைத்தொழில் துறையை மேம்படுத்த 8 பில்லியன் ரூபா ஒதுக்கீடு. சிவிட் ஸ்ரீ லங்கா திட்டத்தின் பரிந்துரைகள் அடுத்த ஆண்டு முதல் செயற்படுத்தப்படும் :  

அம்பாந்தோட்டை, பிங்கிரிய, யாழ்ப்பாணம் உள்ளிட்ட தெரிவுசெய்யப்பட்ட மாவட்டங்களில் புதிய முதலீட்டு வலயங்கள் ஸ்தாபிக்கப்படும் :  

இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் எதிர்காலத்தில் விரிவுபடுத்தப்படும் : 

பொருளாதார மீட்சிக்கு மத்தியில் நடைமுறையில் உள்ள சட்டங்களில் 60 சட்டங்கள் காலத்துக்கு ஏற்றாற் போல் திருத்தம் செய்யப்படும் :  

அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் :  

2024 ஆம் ஆண்டு வரவு - செலவு திட்டத்தைப் போன்று புரட்சிகரமான வரவு - செலவு திட்டத்தை எவரும் சமர்ப்பிக்கவில்லை. எதிர்ப்பு தெரிவிக்காமல் நாட்டுக்காக ஒத்துழைப்பு வழங்குங்கள் :  

திருகோணமலை நகரம் இந்திய முதலீடுகளுடன் அபிவிருத்தி செய்யப்படும். இதற்காக ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்படும் :  

பொருளாதார நெருக்கடிக்கு தனித்து தீர்வுகாண முடியாது. அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவேன் :  

வரவு - செலவுத் திட்ட  முன்மொழிவுகள் அமுலாக்கம், செலவு தொடர்பில் மாகாண சபைகள் பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும் :  

பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு :  

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் தூய்மையான குடிநீர் பிரச்சினைக்கு 2024 ஆண்டின் முதல் காலாண்டுக்குள் நிரந்தர தீர்வு :  

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீள்குடியேற்றத்துக்காக 2000 பில்லியன் ரூபா ஒதுக்கீடு :  

நட்டமடையும் அரச நிறுவனங்களினால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே நட்டமடையும் அரச நிறுவனங்கள் நிச்சயம் மறுசீரமைக்கப்படும். குறுகிய அரசியல் நோக்கத்துக்காக எதிர்ப்பு தெரிவிப்பதை அரசியல் தரப்பினர் நாட்டுக்காக தவிர்த்துக்கொள்ள வேண்டும் :  

சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையை மேம்படுத்த அரச வங்கிகள் ஊடாக இலகு வட்டி வீதத்திலான கடனுதவி வழங்கப்படும். இதற்காக 30 பில்லியன் ரூபா ஒதுக்கீடு :  

சிறு மற்றும் பெருங்குளங்கள் தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் புனரமைக்கப்படும். வீழ்ச்சியடைந்துள்ள விவசாயத்துறையை மேம்படுத்துவது பிரதான இலக்கு : 

சகலருக்கும் ஆங்கிலம் 'திட்டத்துக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 2034 ஆம் ஆண்டு  சகலருக்கும் ஆங்கிலம் என்ற இலக்கு வெற்றிபெறும் :  

நீண்ட காலமாக இடம்பெற்றுவரும் வரி விலக்குகள் உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த வருட வரவு - செலவுத் திட்டத்தில் பல்வேறு முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், அதன் ஊடாக அரச வருமானம் அதிகரிக்கும் போது அதனை விட அதிகமான வரிச் சலுகைகளை  வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்


உயர்தர பரீட்சைக்கு தோற்றும் சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு வழங்கப்படும் :  

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாணங்களுக்கு பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த  ஒழுங்குமுறை எதிர்வரும் ஆண்டு முதல் செயற்படுத்தப்படும் :  

அரச துறையின் மாதாந்த சம்பளத்திற்காக 93 பில்லியன் ரூபா, காப்புறுதி, மருந்துகள், ஓய்வூதியம் உட்பட பொதுநல செலவுகளுக்கு 30 பில்லியன் ரூபா, கடன் வட்டி செலுத்த 220 பில்லியன் ரூபா என 03 பிரதான செலவுகளுக்காக  மாத்திரம் அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 383 பில்லியன் ரூபாவை செலவிடுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

நவீன உலகுக்கு பொருந்தும் வகையில் எதிர்காலத்தில் மேலதிகமாக 4 பல்கலைக்கழகங்கள் ஸ்தாபிக்கப்படும் :  

பழமையான கல்வி முறைமை நடைமுறையில் உள்ளது. நவீன உலகுக்கு பொருத்தமான கல்வி முறைமை 2024 ஆம் ஆண்டு அமுல்படுத்தப்படும் :  

வீதி புனரமைப்புக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் :  

மலையக பகுதியில் கிராமிய அபிவிருத்தித் திட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதற்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் :  

கொழும்பு தொடர்மாடி குடியிருப்பில் வசிப்பவர்களிடமிருந்து அறவிடப்படும் வரி 2024 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்படும். வீட்டு உரிமை முழுமையாக அவர்களுக்கு வழங்கப்படும். கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை எதிர்பார்ப்பார்களா ? :  

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ஆரம்பகட்டமாக 4 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் :  

எதிர்க்கட்சிகள் கடந்த காலங்களில் முன்வைத்த பரிந்துரைகளை வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்கியுள்ளேன். ஆகவே வரவு செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை :  

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான மாதக் கொடுப்பனவுகளுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு :  

சிரேஷ்ட பிரஜைகளுக்கான மாதக் கொடுப்பனவு 3000 ரூபாவால் அதிகரிப்பு :  

விசேட தேவையுடையவர்கள், நீரிழிவு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாத கொடுப்பனவு 2500 ரூபாவால் அதிகரிப்பு :  

2024 ஆம் ஆண்டுக்கான அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்காக 283 பில்லியன் ரூபா ஒதுக்கீடு :  

தேர்தல் வெற்றியல்ல  நாட்டின் வெற்றியே எனக்கு  முக்கியம் :  

ஓய்வூதியக்காரர்களுக்கான மாத கொடுப்பனவு 2500 ரூபாவால் அதிகரிப்பு :  

அரச சேவையாளர்களுக்கான கொடுப்பனவு 10000 ரூபாவால் அதிகரிப்பு :  

2024 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டம் தேர்தல் வரவு செலவுத் திட்டம் அல்ல, எதிர்காலத்துக்கான வரவு செலவுத் திட்டம் :  

பூச்சியமாக  வீழ்ச்சியடைந்த வெளிநாட்டு கையிருப்பு தற்போது 3.5 பில்லியன் டொலராக நிலைப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேசத்தின் நம்பிக்கையை வெற்றிக்கொண்டுள்ளோம் -  

இதுவரையான பயணத்தின் வெற்றிக்கு அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டமே காரணம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன் ஊடாக 2022 ஆம் ஆண்டைப் போன்று பொருளாதார நரகத்தில் வீழ்ந்துவிடாமல் முன்நோக்கிச் செல்வதற்கு அடித்தளமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பொருளாதார பாதிப்பினால் 30 சதவீதமாக உயர்வடைந்த வட்டி வீதம் தற்போது 15 சதவீதமாக குறைவடைந்துள்ளது -  

சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட்ட அரசியல்,பொருளாதார கொள்கை தோல்வி. நவீன யுகத்துக்கு இணையாக கொள்கைகளை வகுக்காவிட்டால் ஒருபோதும் முன்னேற முடியாது -  

நுவரெலியா மாவட்டத்தில் எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்தை உருவாக்குவோம் -  

சகல அபிவிருத்திகளையும் எதிர்த்து எதிர்காலத்தையும் கொள்ளையடிக்க வேண்டாம் - 

நட்டமடையும் அரச நிறுவனங்களை தேசிய வளம் என்று குறிப்பிட்டுக்கொண்டு ஒட்டுமொத்த சுமைகளையும் மக்கள் மீது சுமத்த முயற்சி


திய மத்திய வங்கி  சட்டத்துக்கு அமைய எண்ணம் போல் நாணயம் அச்சிட முடியாது. ஆகவே எதிர்வரும் ஆண்டு அரச வருமானத்தை 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரித்துக் கொள்ள வேண்டும். - நிதியமைச்சர்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

2023 ஆம் ஆண்டு  3415 பில்லியன் ரூபா அரச வருமானம் எதிர்பார்க்கப்பட்ட போதும், 2410 பில்லியன் ரூபா மாத்திரமே திரட்டப்பட்டுள்ளது.ஆகவே வரி வருமான எதிர்பார்ப்பு இலக்கு தோல்வி - நிதியமைச்சர்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, அரசியல் நோக்கங்களுக்காக மாயைகளைப் பரப்புவதை நிறுத்துமாறும், அரசியலை விட நாட்டைப் பற்றி சிந்தித்து நாட்டை உயர்த்துவதற்கு அனைவரும் தம்மை உண்மையாக அர்ப்பணிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

அரச சேவையாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வேண்டுமாயின் அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டும் அல்லது நாணயம் அச்சிட வேண்டும்,கடன் பெற வேண்டும்.ஒரு தரப்பினரை மாத்திரம் திருப்திப்படுத்துவது சமவுடைமை கொள்ளைக்கு எதிரானது  -நிதியமைச்சர்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

சம்பளத்தை அதிகரிக்குமாறு ஒரு தரப்பினர் போராடுகிறார்கள். அரச சேவையாளர்கள் மாத்திரமல்ல ஒட்டுமொத்த மக்களும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். அரச சேவையாளர்களுக்கு ஒரே கட்டத்தில் சம்பளத்தை அதிகரிக்க முடியாது

கற்பனைக் கதைகளால் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது எனவும், நீண்ட காலமாக அரசியல் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளின் இறுதி முடிவு, நாட்டை வங்குரோத்து அடையச் செய்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, துரதிஷ்டவசமாக நாட்டில் உள்ள சில தரப்பினர் இதனை இன்னும் புரிந்து கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

பொருளாதார மீட்சிக்கு மத்தியில் நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான நிலையை நன்கு அறிவோம். வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வது இலகுவானதொரு காரியமல்ல  

பொருளாதார மீட்சிக்காக எடுத்துள்ள தீர்மானங்கள் சரி என்பதை கடந்த கால சமூக கட்டமைப்பு நிலைவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. எமது பயணம், பாதை, சரியன கடினமானதாக இருந்தாலும் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம் - 

 தடம் புரண்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை கடந்த வருடத்தில் மீண்டும் சரியான பாதையில் தூக்கி நிறுத்த முடிந்ததாகவும், அதற்காக மக்கள் கடுமையாக உழைத்த போதும், சில தரப்பினர் நாட்டை பின்நோக்கி இழுக்க முயற்சித்ததாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

போலியான வாக்குறுதிகள், அரசியல் நிவாரணங்கள் ஆகியவற்றால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.இதனை இனியும் தொடர முடியாது - நிதியமைச்சர்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் துரிதகால திட்டங்களுக்கு அப்பாற்பட்டு நீண்டகால இலக்குகளை அடிப்படையாக கொண்டதாக எதிர்கால திட்டங்கள் அமையும் - 

எவரும் பொறுப்பேற்காத மரணப்படுக்கையில் இருந்த நாட்டையே நான் பொறுப்பேற்றேன். நாட்டை துரிதமாக மீட்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளோம் -  

அரசாங்கம் மாத்திரமல்ல அனைவரும் அரச நிதியை வீண்விரயம் செய்துள்ளோம். தவறான வாக்குறுதிகள், நிவாரணம் வழங்கல் பொருளாதார முன்னேற்றத்துக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் ரணில் விக்கிரமசிங்க சபைக்கு முன்மொழிந்தார்.

Post Bottom Ad

Responsive Ads Here

Pages