சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றம் ஏற்பாட்டில் இடம்பெற்ற சுவாமி விபுலாநந்தரின் 99வது துறவற தின விழா - 2023 05.05.2023 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
காரைதீவு விபுலாநந்தர் சதுக்கத்தில் உள்ள சுவாமி விபுலானந்தரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தலும் புஸ்பாஞ்சலியும் இடம்பெற்றது.
மற்றும் ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையிலுள்ள சுவாமியின் திருவுருவச்சிலைக்கு பூஸ்பாஞ்சலி வேதபாராயணம் தீபாராதனைகள் இடம்பெற்றதுடன்
சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றத்தில்"மன்றமுன்னாள் தலைவர்"திரு வி.ரி"சகாதேவராஜா தலைமையில்"இடம்பெர்றதுடன் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச"செயலாளர் திரு சிவ.ஜெகராஜன் கலந்து கொண்டதுடன் மன்ற உறுப்பினர்கள்,நடன மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்,
விபுலாநந்தர் சதுக்கத்திலுள்ள சுவாமி விபுலாநந்தரின் திரு வுருவச்சிலைக்கு மாலை அணிவித்தலும் பூஸ்பாஞ்சலி, வேதபாராயணம் பஜனை தீபாராதனை என்பன இடம்பெற்றது இந்நிகழ்வுக்கு சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்ற தலைவர் திரு வெ.ஜெயநாதன் தலைமை வகித்தார் அதனைத்தொடர்ந்து செயலாளர் திரு கு.ஜெயராஜி அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு முடிவடைந்தது.