யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆயத்திலிருந்து கடந்த மாதம் புறப்பட்ட யாழ் கதிர்காம பாதயாத்திரை குழுவினருக்கு நேற்று காரைதீவில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாதயாத்திரீகர்கள் கல்முனையில் இருந்து 57வது நாளில் காரைதீவை வந்தடைந்த போது அங்கு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கே.ஜெயசிறில் இனிப்பு வழங்கி அவர்களை வரவேற்றார்.
கடந்த 12 வருடங்களாக பாதயாத்திரைக்கு தலைமை தாங்கி சென்ற வேல்சாமி மகேஸ்வரன் அடியார்களுக்கு தீப ஆராதனை செய்து வரவேற்க யாத்திரை ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா வரவேற்புரையை நிகழ்த்தினார்.
தொடர்ந்து, பாதயாத்திரை அடியார்கள் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு வந்தடைந்து விசேட பூஜையில் கலந்து கொண்டார்கள் .
காலை சித்தானைக்குட்டி மடாலயத்திற்கு அவர்கள் விஜயம் செய்தனர்.