மடத்தடியில் சிறப்பாக நடைபெற்ற பாற்குட பவனி ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 9 மே, 2022

மடத்தடியில் சிறப்பாக நடைபெற்ற பாற்குட பவனி !

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மடத்தடி ஸ்ரீமீனாட்சி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகத்தை அடுத்து   ஆன்மீக கலாச்சார பவனியும் பால்குட பவனியும் இடம்பெற்றது.

காலை  காரைதீவு அட்டப்பள்ளம்  பகுதிகளிலிருந்து புறப்பட்ட ஆன்மீக கலாச்சார நடைபவனி ஏழு மணி அளவில் மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தை வந்தடைந்தன.

ஆலயத்தின் மேற்கே கும்பாபிஷேக மன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்க பீடத்தில் பவனிக்கான பால் வழங்கப்பட்டு ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஷ்வர குருக்கள் தலைமையில் அங்கிருந்து வயல்வெளி ஊடாக ஆலய தலைவர் கி.ஜெயசிறில் முன்னே பிரதான பால்குடம் சுமந்து வர பால்குட பவனி இடம்பெற்றது..

 அவர்களுக்கான பால் வழங்கப்பட்டு  சிவலிங்க பீடத்தில்  ஊர்வலம் ஆனது நேராக ஆலயத்தை அட்டப்பள்ள அறநெறி மாணவர்களின் கோலாட்டம்  காவடி சகிதம்  ஆலயத்தை வந்தடைந்தன.

 ஆலயத்தில் 10 மணியளவில் அம்மனுக்கு பால் சொரிந்தலுடன் விசேட பூஜையும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஷ்வர குருக்கள் முன்னிலையில் இடம்பெற்றது.





 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages