திருநாவுக்கரசு நாயனார் குருபூசை தின விழா ! - Karaitivu.org

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 9 மே, 2022

திருநாவுக்கரசு நாயனார் குருபூசை தின விழா !

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலம் இணைந்து நடாந்திய நாவுக்கரசு நாயனார்  குருபூசை  தின விழாவானது  திருக்கோவில் ,விநாயகபுரம், திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில்   இடம்பெற்றது. இந்நிகழ்வு சிவஶ்ரீ .நீ.அங்குச நாதகுருக்கள்  திருமுன்னிலையில்  இடம்பெற்றது. கண.இராஜரெத்தினம் பணிப்பாளர் திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்   தலைமையில் இடம்பெற்றது. பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்து சிறப்பித்தார்.திருக்கோயில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் உள்ளிட்ட பல அதிதிகள் கலந்து சிறப்பித்தார்கள்.மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர் கு. ஜெயராஜ் நிகழ்விற்கான சகல ஏற்பாடுகளையும் செய்தார்.

இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கிலான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர். நிகழ்வுகளின் இறுதியில் அன்னதானமும் இடம்பெற்றது.

 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages