ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு விநியோகம் வழமைக்கு ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

புதன், 18 மே, 2022

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு விநியோகம் வழமைக்கு !

கடவுச்சீட்டுக்களை ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் விநியோகிக்கும் நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு முன்கூட்டியே திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கி வருகை தருவது கட்டாயமானதாகும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதற்காக www.immigration.gov.lk எனும் இணையத்தளத்தினூடாகவோ அல்லது 070 7101060 எனும் தொலைபேசி இலக்கத்தையோ பயன்படுத்துமாறு அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதாயின், அரச கடமை நாட்களில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages