முன்மாதிரியான அறநெறி நூலக திறப்புவிழா - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

புதன், 17 நவம்பர், 2021

முன்மாதிரியான அறநெறி நூலக திறப்புவிழா

 



இந்து சமய  கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அறநெறிப் பாடசாலைகளுக்காக மாதிரி நூலகம் அமைக்கும் செயற்றிட்டத்தின்கீழ் முன்மாதிரியான அறநெறி நூலக திறப்புவிழாவானது முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் அவதரித்த இல்லத்தில் அமைந்துள்ள சுவாமி விபுலாநந்தர் ஞாபாகார்த்த மணிமண்டபத்;தில் இடம்பெற்றது. 


இந்து சமய  கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. அ. உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில், ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜீ மஹராஜ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் சிவாச்சிhரியர்களான  சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் மற்றும் சிவஸ்ரீ சாந்தரூபன் குருக்கள் ஆகியோர் கலந்துகொண்டு அருளாசி வழங்கியதுடன், கௌரவ அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. வே. ஜேகதீசன் அவர்களும், சிறப்பதிதிகளாக அம்பாரை மாவட்ட பிரதேச செயலகங்கள் மற்றும் வலயக் கல்வி அலுவலகங்களைச் சேர்ந்த உயரதிகாரிகள் மற்றும் சுவாமி விபுலாநந்தர் ஞாபாகார்த்த பணிமன்றத்தின் தலைவர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மேலும் ஆலய அறங்காவலர் ஓன்றிய தலைவர், செயலாளளர் உள்ளிட்ட பிரதிநிதிகள், சுவாமி விபுலாநந்தர் ஞாபாகார்த்த பணிமன்ற உறுப்பினர்கள், அம்பாரை மாவட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என்போர் கலந்து கொண்டிருந்தனர். ஆசியுரைகளும், அதிதிகள் உரைகளும், சிறப்புரைகளும் இடம்பெற்றதுடன், அறநெறிப் பாடசாலை நூலகங்களுக்கான பெருந்தொகையான நூல்தொகுதிகளும் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன்  இந்து சமய  கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் தென்றல் அலைவரிசையில் வழங்கிவரும் அறநெறிச் சாரம் நிகழ்ச்சியில் ஆக்கத்திறன்களை வெளிப்படுத்திய மற்றும் நேயராக பங்குபற்றி வினாக்களுக்கு விடைஎழுதிய மாணவர்களுக்கும் பெறுமதியான நூல்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்து சமய  கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இந்துசமய வளர்ச்சிக்காகவும் மாணவர்களினை நல்வழிப்படுத்தவதற்காகவும் முன்னெப்போதும் இல்லாதவாறு பெருந்தொகையான விலைமதிக்கமுடியாத புத்தகங்கள் அச்சிட்டு வெளியிடப்படுகின்றமை தொடர்பாக அதிதிகளால் திணைக்களமும் பணிப்பாளர் அவர்களும் வெகுவாக பாராட்டப்படடனர். 

மேலும் இலங்கைத்திருநாட்டில் கல்வி, சமய, கலாசார மறுமலர்ச்சியை ஏற்படுத்திய சுவாமி விபுலாநந்தரை கௌரவப்படுத்தும் வகையில் காரைதீவு மண்ணில் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்தமைக்கு காரைதீவு மண்சார்பாக எமது நன்றிகள்.    


Post Bottom Ad

Responsive Ads Here

Pages