மின் துண்டிப்பு தொடர்பான கால அட்டவணை ! - Karaitivu.org

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

மின் துண்டிப்பு தொடர்பான கால அட்டவணை !

 

அம்பாறை, கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசரத் திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.

இதன்படி, நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட ஒலுவில் மற்றும் அட்டப்பளம், அம்பாறை வீதி, ஹிலால்புரம், வங்களாவடி, உடங்கா ஆகிய பகுதிகளில் இன்று (09) காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட கல்முனைப் பிரதேசம் நாளை (10) காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.

கல்முனை, நிந்தவூர், சாய்ந்தமருது ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட தரவைக் கோவில், கடற்கரைப்பள்ளி, அம்மன்கோவில், உடையார் வீதி, இஸ்லாமாபாத் வீட்டத்திட்டம், வீ.வீ. வீதி, ஒலுவில், வௌவலோடை, நிந்தவூர், தியேட்டர் வீதி, காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, கல்முனைக்குடி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (11) மாலை 04 மணி முதல் மாலை 06 மணி வரையும் மின் தடைப்படும்.

நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட ஒலுவில், அன்சாரிபள்ளிவாசல் பகுதி, மீராநகர், நிந்தவூர் மற்றும் அட்டப்பள பகுதி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (13) காலை 08.30 முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.

நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட ஒலுவில், வௌவலோடை, நிந்தவூர், தியேட்டர் வீதி, சின்னப்பாலமுனை, உதுமாபுரம், திராய்க்கேனி, அட்டாளைச்சேனை, மீலாத்நகர் ஆகிய பகுதிகளில் 17 ஆம் திகதி காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.

சம்மாந்துறை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட அம்பாறை வீதி. ஹிலால்புரம், வங்களாவடி, உடங்கா ஆகிய பகுதிகளில் 18 ஆம் திகதி காலை 08.30 முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Post Bottom Ad

Responsive Ads Here

Pages