காரைதீவு அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் சமூக சேவை அமைப்பானது தனது அடுத்த கட்ட செயற்பாடாக காரைதீவு கிராமத்தின் பாடசாலை மாணவர் சுகாதார நலன் கருதி நீர்த்திருகி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கும் செயற்த்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது, பாடசாலை அதிபர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க முதற்கட்டமாக காரைதீவு இராமகிருஸ்ண பெண்கள் பாடசாலைக்கு நீர்த்திருகி தொகுதிகள் KDPS இனால் அன்பளிப்புச் செய்யப்பட்டது. இதன் போது KDPS இன் உபதலைவர் திரு.மு.ரமணீதரன் தலைமையில் மற்றும் நிர்வாக உறுப்பினர்களுடன் பாடசாலை அதிபர் திரு.இ.ரகுபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இங்கு காலால் இயக்கும் நீர்த்திருகி கட்டமைப்பானது நற்பிட்டிமுனையைச் சேர்ந்த தரம்11 இல் கல்வி கற்று பொறியியல் பீடத்திற்கு தெரிவான ஒரு தமிழ் மாணவனை ஊக்குவிக்கும் முகமாக அவரிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Post Top Ad
Responsive Ads Here
செவ்வாய், 30 ஜூன், 2020

KDPS இனால் நீர்த்திருகித் தொகுதிகள் அன்பளிப்பு....
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*