காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி இன்று ஆரம்பமானது... - Karaitivu.org

Breaking

Monday, June 1, 2020

காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி இன்று ஆரம்பமானது...

வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு  ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி சடங்கு  இன்று 01.06.2020ஆம் திகதி  மாலை  கடல்தீர்த்தம் எடுத்துவந்து கல்யாணக்கால் நடலுடன்  ஆரம்பமானது.


கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திச்சடங்குகள் யாவும் வழமைபோல் நடைபெறும். ஆனால்  தற்போது  நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா  அசாதாரண சூழ்நிலையில் அங்கப்பிரதட்சணம் மற்றும் கற்பூரச்சட்டி ஏந்துதல் போன்ற நேர்த்திகளுக்கு அனுமதி இல்லை. மேலும் பக்தர்கள் ஆலயத்துள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.இதனை கத்தில் கொண்டு எமது இணையக்குழுவினரால் அனைத்து நிகழ்வுகளும் நேரலையாக ஒளி,ஒலி பரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

படங்கள் : தனுசாந்.


No comments:

Post a Comment