ஊரடங்குச் சட்டம் தொடர்பான விசேட அறிவித்தல்... - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

சனி, 18 ஏப்ரல், 2020

ஊரடங்குச் சட்டம் தொடர்பான விசேட அறிவித்தல்...

கொழும்பு , கம்பஹாகளுத்துறைபுத்தளம்கண்டிகேகாலை , அம்பாறை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில்20 ஆம் திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் அன்றைய தினமே மீண்டும் இரவு 8 மணிக்குமீள பிறப்பிக்கப்படவுள்ளது.

இந்த மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 8 மணி முதல் மறு நாள் அதிகாலை 5 மணி வரைஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கண்டி , கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அலவத்துகொடை , அக்குரணை மற்றும் அக்கரைப்பற்றுஆகிய பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த 3 மாவட்டங்களினதும் ஏனைய பொலிஸ் பிரிவுகளில் ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் தினமும் காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் இரவு 8 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் கொட்டாஞ்சேனைகிராண்ட்பாஸ் , பம்பலப்பிட்டிவாழைத்தோட்டம் , மருதானைகொத்தட்டுவமுல்லேரியாவெல்லம்பிட்டிகல்கிசைதெஹிவளை மற்றும் கொஹூவலை ஆகிய பொலிஸ்பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

தவிர்ந்த ஏனைய பொலிஸ் பிரிவுகளில் ஏப்ரல் 22 ஆம் திகதி புதன்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படும்ஊரடங்கு சட்டம் இரவு 8 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படவுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் – மாரவில மற்றும் வென்னப்புவ ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் களுத்தறைமாவட்டத்தின் பண்டாரகமபேருவளைபயாகல மற்றும் அளுத்கம ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் தொடர்ந்தும்ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.


Post Bottom Ad

Responsive Ads Here

Pages