காரைதீவில் மருத்துநீர் வீடு வீடாக விநியோகிக்கப்பட்டது ! - Karaitivu.org

Breaking

Tuesday, April 14, 2020

காரைதீவில் மருத்துநீர் வீடு வீடாக விநியோகிக்கப்பட்டது !

புதுவருடத்திற்கான மருத்துநீர் 12.04.2020 பி.ப 3மணி தொடக்கம் 7மணிவரைக்கிடைப்பட்ட காலப்பகுதியில் காரைதீவிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டது.அதற்காக ஆறு ஆலயங்களில் மாத்திரம் மருத்துநீர் தயாரிக்கப்பட்டது.

அதனைப்பொதிசெய்து அதனுடன்  தலையில் வைப்பதற்கு இலவமிலையும் காலில் வைக்க விளாவிலையும் புத்தாண்டுசடங்குகள் தொடர்பான சிறுகுறிப்பு அடங்கிய பிரசுரமும் 12.04.2020 சகலவீடுகளுக்கும் பிரதேசசெயலகமும் பிரதேசசபையும்  துரிதமாக இணைந்து விநியோகிக்கப்பட்டது.

நாட்டின் தற்போதைய ஊரடங்கு சட்டம் காரணமாக  மக்கள் வெளியேவரமுடியாத காரணத்தால் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment