சார்வரி புத்தாண்டு ஆண்டு 2020 பொது பலன்கள் : இராசி பலன்கள்!!! - Karaitivu.org

Breaking

Friday, April 10, 2020

சார்வரி புத்தாண்டு ஆண்டு 2020 பொது பலன்கள் : இராசி பலன்கள்!!!

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீவிகாரி வருஷம் - உத்தராயனம் - சிசிர ரிது - பங்குனி மாதம் - 31ம் தேதி - 13.04.2020 - அன்றைய தினம் திங்கட்கிழமையும் - கிருஷ்ண பக்ஷ சஷ்டியும் - மூலம் நட்சத்திரமும் - பரிக நாமயோகமும் - வணிஜை கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு மணி 7.36க்கு (உதயாதி நாழிகை: 33.39)க்கு துலா லக்னத்தில் ஸ்ரீசார்வரி வருஷம் பிறக்கிறது.

கிரக பாதசார விபரங்கள்:

லக்னம் - ஸ்வாதி 4ம் பாதம் - ராகு சாரம்
சூர்யன் - அசுபதி 1ம் பாதம் - கேது சாரம்
சந்திரன் - மூலம் 4ம் பாதம் - கேது சாரம்
செவ்வாய் - திருவோணம் 2ம் பாதம் - சந்திரன் சாரம்
புதன் - ரேவதி 2ம் பாதம் - புதன் சாரம்
குரு - உத்திராடம் 2ம் பாதம் - சூரியன் சாரம் - அதிசாரம்
சுக்கிரன் - ரோகிணி 2ம் பாதம் - சந்திரன் சாரம்
சனி - உத்திராடம் 1ம் பாதம் - சூரியன் சாரம்
ராஹு - திருவாதிரை 1ம் பாதம் - ராகு சாரம்
கேது - மூலம் 3ம் பாதம் - கேது சாரம்
கேது தசை இருப்பு: 01 வருஷம் - 04 மாதம் - 20 நாள்

சார்வரி வருஷத்தின் நவநாயகர்கள்:

ராஜா - புதன்
மந்திரி - சந்திரன்
அர்க்காதிபதி - சந்திரன்
மேகாதிபதி - சந்திரன்
ஸஸ்யாதிபதி - குரு
சேனாதிபதி - சந்திரன்
இரஸாதிபதி - சனி
தான்யாதிபதி - புதன்
நீரஸாதிபதி - குரு
பசுநாயகர் - கோபாலன்
சார்வரி வருஷ வெண்பா:
சார்வரி யாண்டதனிற் சாதிபதி னெட்டுமே
தீரம றுநோயற் றிரிவார்கள் - மாரியில்லை
பூமி விளைவில்லாமற் புத்திரரு மற்றவரும்
ஏம மின்றிச் சாவா ரியல்பு.
- இடைக்காடர் வாக்கு


பொது பலன்கள்:

இந்த சார்வரி ஆண்டை பொறுத்தவரை மிதமான மழையும் - மத்திய அரசின் நிலையான ஆட்சியும் - பல முக்கிய தலைவர்களுக்கு பல புதிய பதவி உயர்வுகளும் ஏற்படும். மாநில அரசுகளில் உட்பூசல்கள் சிக்கல்கள் குழப்பங்கள் ஏற்படலாம். இந்த ஆண்டு ஒன்பது புயல்கள் உருவாகி அதில் நான்கு புயல்கள் பலகீனம் அடைந்து மற்ற புயல்களினால் மிதமான மழை ஏற்படும். ஆறு ஏரி குளம் குட்டை கால்வாய்களில் ஓரளவு தண்ணீர் நிரம்பும். இந்த ஆண்டு புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மாதங்களில் வால் நட்சத்திரங்கள் தோன்றும். இந்த ஆண்டு அயல்நாடுகளில் மூலதனம் அதிகமாகும். ஏற்றுமதி இறக்குமதி மூலம் வருவாய் அதிகரிக்கும். இந்த ஆண்டு பூமி நிலம் வீடு மனை விலை சற்று குறையும். பெட்ரோல் டீசல் மண்ணெண்ணெய் எரிவாயு தங்கம் விலை அதிகரிக்கும்.

இந்த ஆண்டு புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மாதங்களில் ஓரளவு மழையும் - கடல் கொந்தளிப்பும் - கடல் சீற்றங்களும் ஏற்படும். ராகு பகவானுடைய சஞ்சாரத்தினால் இந்த ஆண்டு அதிகமான காற்று ஏற்படும். இதனால் கடலோர மக்களுக்கு உயிர் சேதம் பொருள் சேதம் ஏற்படும். இந்த ஆண்டு மேற்கு பகுதியில் ஏற்படக்கூடிய காற்று கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் சேதத்தை ஏற்படுத்தலாம். அயல்நாடுகளில் அமெரிக்கா ரஷ்யா வளைகுடா நாடுகளில் ஓரளவு பொருள் சேதம் ஏற்படலாம்.

இந்த ஆண்டு ராஜாவாக புதன் வருவதால் மத்திய அரசுகளில் நல்ல வருவாயும் பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட துறையில் முதலீடும் அதிகம் ஏற்படும். ராஜாவாக புதன் இருப்பதால் அரசுகளின் முயற்சியினால் கல்வித்தரம் சர்வதேச அளவில் உயரும். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நட்புறவு நீடிக்கும். மந்திரியாக சந்திரன் வருவதால் பெண்களுக்கு இந்த வருடம் நன்றாக இருக்கும். ராணுவம் சம்பந்தப்பட்ட துறைகளில் பல புதிய நவீன ஏவுகணைகள் சேர்க்கப்படும். காவல் துறை நவீனமாகும்.

கார், லாரி பஸ் இதர வாகனங்கள் நவீன மயமாக்கப்பட்டு விலை ஏறும். இந்த ஆண்டு சேனாதிபதியாக சந்திரன் வருவதால் போர் பதற்றம் தணிந்து பேச்சுவார்த்தைகளில் மூலமாக நாடுகளுக்குள் ஒற்றுமை ஏற்படும். பொதுவாக இந்த ஆண்டில் சந்திரன் பலமாக இருப்பதால் ராணுவம் காவல்துறை ஊர்க்காவல்படை இதர துறைகளில் பெண்கள் அதிகமாக சேர்க்கப்படுவார்கள்.  மேக அதிபதியாக சந்திரன் இருப்பதால் வருட வெண்பாவையும் தாண்டி ஓரளவு மழை பெற முடியும்.  அணைகள் முக்கால்வாசி நிரம்பும். காய்கறி வகைகள் - பழங்கள் - பருப்பு வகைகள் - எண்ணெய் வித்துக்கள் விலை ஏறும். சிறுதானியங்களின் உபயோகம் அதிகரிக்கும். நீரஸாதிபதியாக குரு இருப்பதால் மதுவகைகள் - தேயிலை - காப்பி  - லாகிரி வஸ்துக்கள் வகைகள் விலையில் நல்ல மாற்றம் ஏற்படும். இந்த ஆண்டு ஈரான், ஈராக், அமெரிக்கா, கொரியா ஆகிய நாடுகளில் உள்நாட்டு குழப்பங்கள் மனக்கசப்புகள் ஏற்படலாம். அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரான், ஈராக், இந்தோனேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் பூமி வெடிப்பும் நிலநடுக்கம் ஏற்படும். அமாவாசை, பவுர்ணமி காலங்களில் கடல் சீற்றம் அதிகரிக்கும். இந்த ஆண்டு மத்திய அரசு வரிகளில் மதிப்பை உயர்த்தும்.

ராஜா புதன் பலன்

கல்வி நவீன படுத்தப்படும் சர்வதேச உறவுகள் மேம்படுத்தப்படும் பொருளாதாரத்தின் விகிதத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்

மந்திரி சந்திரனின் பலன் : இந்த ஆண்டு மந்திரியாக சந்திர பகவான் வருவதால் நீர் சம்பந்தப்பட்ட பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள், பெயிண்ட் , எண்ணெய் வகைகள் ஆகியவற்றை விலை சற்று உயரும்

அதிபதி சந்திரன் பலன்  : இந்த ஆண்டு அதிபதியாக சந்திரபகவான் வருவதால் பெண்களுக்கு எல்லாத்துறையிலும் முன்னுரிமை அளிக்கப்படும் பெண்களுக்கு அதிகமாக மாநிலங்கள் தரப்படும்.

மேக அதிபதி சந்திரன் பலன் : இந்த ஆண்டு மேக அதிபதியாக சந்திர பகவான் வருவதால் நெல், கோதுமை தானியங்கள் சோளம் நவ தானியங்கள் நன்கு விளையும் .

ஸஸ்யாதிபதி குருபகவான் பலன் : இந்த ஆண்டு சஷ்டி அதிபதியாக குருபகவான் இருப்பதால் மங்கள காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடைபெறும், மேலும் மனிதர்களுக்குள் இருக்கக்கூடிய பூசல்கள் குறையும்

சேனாதிபதி சந்திரன் பலன் : சந்திரன் பலத்தால் இந்த ஆண்டு போர் பதற்றம் குறையும்
ரஸாதிபதி சனி பகவான் பலன் : துவர்ப்பு சுவையுள்ள பொருட்கள் - கசப்புச் சுவையுள்ள பொருட்கள், மருத்துவ குணமுள்ள பொருட்கள் ஆகியவை விளைச்சல் அதிகரிக்கும்

தனாதிபதி புதன் பகவான் பலன் : இந்த ஆண்டு கம்பு, கேழ்வரகு, சோளம் சிறு தானியங்கள் அதிகமாக விளையும் அதற்கேற்றார்போல் மழையும் இருக்கும்.

நீரஸாதிபதி குருபகவான் பலன் : இந்த ஆண்டு மஞ்சள் குங்குமப்பூ வாசனை கஸ்தூரி சந்தனம் போன்றவை நன்கு உற்பத்தியாகும். விலை சற்று ஏறும்.

சித்திரை மாதப் பிறப்பின் பலன் : இந்த ஆண்டு சித்திரை மாதம் திங்கட்கிழமை அன்று வருவதால் ஓரளவு மறையும். மத்திய மாநில அரசுகளின் திட்டங்களினால் மக்களுக்கு நல்ல பலன்களும் ஏற்படும். பெண்கள் சம்பந்தப்பட்ட பணிகளில் அதிகமாக ஈடுபாடு கொள்வார்கள். பெண்களை மதிப்பவர்கள் ஏற்றம் காண்பார்கள்.

மகர சங்கராந்தி பலன் : இந்த ஆண்டு வியாழக்கிழமை தை மாதம் பிறப்பதால் நல்ல மழை பெய்யும். மங்கல நிகழ்ச்சிகள் நிறைய நடக்கும்.  மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

முக்கிய பலன்கள்  : லக்னத்திற்கு ஒன்னு எட்டு உடையவரான லக்னாதிபதி சுக்கிர பகவான் லக்னத்திற்கு அட்டம ஸ்தானத்தில் ஆட்சியாக அமர்ந்திருக்கிறார். அவர் மறைந்தாலும் அவருடைய பார்வையின் மூலமாக பல நல்ல பலன்கள் ஏற்படும். முக்கியமாக அவர் தனஸ்தானத்தைப் பார்ப்பதால் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வெளிநாட்டு உறவுகள் மேன்மையடையும். அந்நிய முதலீடுகள் அதிகரிக்கும். இந்திய தொழில் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் அடையும். முக்கிய பதவியில் உள்ளவர்கள் நாடு முன்னேற சிறப்பாக பணியாற்றுவார்கள். நேர்மையுடனும் மன வலிமையுடனும் தன்னம்பிக்கையுடனும் அதிகாரிகள் செயல்படுவார்கள். உள்நாட்டில் வேலைவாய்ப்பு பெருகும்.

லக்னத்திற்கு 2, 7க்குடையவர் ஆன செவ்வாய் பகவான் இந்த இந்த ஆண்டு பிறக்கும்போது உச்சமாக இருக்கிறார். புதிய நவீன ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்படும். புதிய வகை விமானங்கள் இணைக்கப்படும். புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படும். நல்ல மழை பெய்யும். உரம் பூச்சிக்கொல்லி மருந்துகள் விலை ஏறும். மருத்துவத்துறை மிக அபரிமிதமான வளர்ச்சியை பெறும்.

லக்னத்திற்கு 3,6க்குடையவரான குரு பகவான் இந்த ஆண்டு பிறக்கும் போது அதிசாரம் நிலையில் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறார். மேலும் அவர் இந்த ஆண்டின் நீரஸாதிபதியாகவும் இருக்கிறார். கல்வி ஸ்தானத்தில் இருப்பதால் புதிய சீர்திருத்தம் கல்வியில் செய்யப்படும். மாணவ மாணவிகள் நன்றாக படிப்பார்கள். முக்கியமாக அது பெண் ராசியாக இருப்பதால் மாணவிகள் விளையாட்டிலும் சிறந்து விளங்குவார்கள். அந்நிய நாடுகளில் அதிகமாக வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புண்டு. இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பெறும். போற்றத்தக்க வகையில் இந்தியா முன்னேறும்.

லக்னத்திற்கு சுக ஸ்தான அதிபதியான பஞ்சமாதிபதியான சனி பகவான் இந்த ஆண்டு லக்னத்திற்கு தைரிய வீரிய ஸ்தானத்தில் கேதுவுடன் சம்பந்தப்பட்டிருக்கிறார். மேலும் அவர் ரஸாதிபதியாகவும் இருக்கிறார். இந்தியாவில் வடக்கில் இருக்கக்கூடிய நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். நெல் கோதுமை கம்பு சோளம் நவதானியங்கள் நன்கு விளையும். இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் நன்கு வளர்ச்சி பெறும். மேலும், அவர் விரய ஸ்தானத்தை பார்ப்பதால் எந்த ஒரு விஷயத்தையும் மிக அதிகமான உழைப்பின் மூலமாகவே செய்ய முடியும்.

லக்கினத்திற்கு பாக்கிய விரயாதிபதி புத பகவான் லக்னத்திற்கு ஆறாம் இடத்தில் சஞ்சாரம் செய்து கொண்டு இருக்கிறார். காற்றின் மூலமாக இந்த ஆண்டு அழிவு ஏற்படலாம். காற்றின் மூலமாக மேற்கு திசையிலிருந்து வைரஸ் ஒன்று பரவலாம். லக்னத்திற்கு தொழில் ஸ்தானாதிபதியான சந்திர பகவான் மூன்றாம் இடத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறார். தொழில் சம்பந்தப்பட்ட துறை நல்லபடியாக முன்னேற்றத்தை பெறும். புதிய தொழில் வேலைகளை பலபேர் தொடங்குவார்கள். நீர் சம்பந்தமான தொழில்கள் அபரிமிதமான வளர்ச்சியை பெறும். லக்னத்திற்கு லாபாதிபதியான சூரிய பகவான் லக்னத்திற்கு 7ஆம் இடத்தில் உச்ச நிலையில் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறார். உலக அளவில் அரசாங்கங்கள் பலவிதமான புதிய சட்டங்களை கொண்டு வருவார்கள்.


மேஷம்

செவ்வாய் ஆதிக்கம் பெற்ற மேஷ ராசி அன்பர்களே, இந்த ஆண்டு உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனைகளை ஏற்படுத்தும். திட, தைரிய, வீரிய ஸ்தானத்தில் ராகு, பாக்கிய ஸ்தானத்தில். குரு ஆட்சி பெற்று இருப்பதால் படிப்படியாக நல்ல விஷயங்கள் கூடி வரும். பூர்வீக சொத்து சம்மந்தமாக இருந்து வந்த குழப்பங்கள், வில்லங்கங்கள் நீங்கும். வாரிசுதாரர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படும். அதனால் நிம்மதியும். மகிழ்ச்சியும் அடைவீர்கள். ஜனவரி முதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை செவ்வாய் சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருப்பதால் செல்வாக்கு உயரும். உயர்  உச்ச பதவியில் இருப்பவர்களின் நட்பு, ஆதரவு கிடைக்கும். விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு மிகப் பெரிய வெற்றியும், அரசு சார்பாக பாராட்டும், பரிசுகளும் குவியும்.சலுகைகள், ஊக்கத் தொகை கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றத்திற்கு யோகமுண்டு. வழக்கில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். நிவாரணத் தொகையுடன் சம்பள பாக்கி கைக்கு வரும். காவல் துறையில் பணி புரிபவர்கள் கௌரவிக்கப்படுவார்கள். விருப்ப ஓய்வு பெறுவது சம்மந்தமாக குடும்பத்தினருடன் கலந்து முடிவு எடுப்பீர்கள்.

அரசியல் - கலைத்துறை  
அரசியல்வாதிகளுக்கு கட்சியில்  கை ஓங்கும். தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். கட்சித் தொண்டர்களுடன் அனுசரணையாகப் போவது நலம் தரும். உங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் தோல்வி அடைவார்கள். மேலிடத்தின் பார்வை உங்கள் மீதுபடும். மாவட்ட அளவில் பதவி, பொறுப்பு கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான காற்று வீசும். மூத்த கலைஞர்களின் ஆதரவு, சிபாரிசு கிடைக்கும். வெளிநாடுகளில் நடக்கும். நட்சத்திர கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புகழ் பெறுவீர்கள். தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு யோகம் உள்ளது.

ஆரோக்யம்  சொத்து  சுகம்
உடல் ஆரோக்யம், மனநலம் சீராக இருக்கும். மனதில் இனம் புரியாத பயம் கவலைகள் அவ்வப்போது வந்து போகும். பிப்ரவரி மாதம் முழுக்க சுக்கிரன் உச்சம் பெறுவதால் இல்லறம் இனிக்கும். பிள்ளைகளின் எதிர் காலம் கல்வி, திருமணம் பற்றி கவலைப்படுவீர்கள். புறநகர் பகுதியில் வாங்கிப் போட்ட நிலத்தை நல்ல விலைக்கு விற்பீர்கள். அதனால் கையில் பணம் புரளும். மனைவி பெயரில் பணத்தை வங்கியில் போடுவீர்கள். தங்க நகைகளில் முதலீடு செய்வீர்கள். கர்ப்பமாக  இருப்பவர்கள் உரிய கவனத்துடன் இருப்பது அவசியம். குரு நீசம் அடைந்து பார்ப்பதால் சில பிரச்னைகள் வரவாய்ப்புள்ளது. கண் சம்மந்தமாக சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது வரும். புதிய சொத்து வாங்கும் யோகம் உண்டு. தாய்ப்பத்திரம் மற்றும் வில்லங்கங்களை சரி பார்த்து வாங்குவது முக்கியம். ஏனென்றால் ராகு , கேது உங்களுக்கு படபடப்பு மறதி, கவனக் குறைவைத் தருவார்கள்.

பெண்கள்: நடக்குமா, நடக்காதா என்று ஏங்கித் தவித்த விஷயங்கள் எதிர் பாராத விதமாகக் கூடி வரும். பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளில் சேர்ப்பது சம்மந்தமாக அலைச்சல், டென்ஷன், செலவுகள் உண்டாகும். தாய், தாய்மாமன் மூலம் ஆதரவு உதவிகள் கிடைக்கும். கணவர் வழியில் வர வேண்டிய. பூர்வீக சொத்துக்கள் சம்மந்தமாக சுமுகமான முடிவுகள் ஏற்படும். கணவரின் தொழில் உச்சமடையும். உங்கள் பெயரில் புதிய தொழில் தொடங்குவார். ராகு தன ஸ்தானத்திற்கு வருவதால். வீண் செலவுகள் வரும். நகைகளை இரவல் கொடுப்பது, வாங்குவது நல்லதல்ல. மாமனார் மூலம் அலைச்சல், மருத்துவ செலவுகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் தோழிகளால் சில பிரச்னைகள் வரலாம், அவர்களுடன் நெருக்கத்தைக் குறைத்துக் கொள்வது உத்தமம். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களுக்கு யோகமானவாரிசு உருவாகும்.

உத்தியோகஸ்தர்கள்  
உத்யோகத்தில் சாதகமான சூழ்நிலைகள் இருக்கும். உங்கள் உழைப்பிற்குரிய அங்கீகாரம் கிடைக்கும். சக ஊழியர்களிடம் அலுவலக விஷயங்கள். பொதுப்பிரச்னைகள் சம்மந்தமாக விவாதம் வேண்டாம். சனிபகவானின் அமைப்பு காரணமாக உயர் அதிகாரிகள் உதவுவார்கள். வெளியூரில் தங்கி வேலை செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலைகள் வரும். இருந்தாலும் சலுகைகள், ஊக்கத் தொகை கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றத்திற்கு யோகமுண்டு. வழக்கில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். நிவாரணத் தொகையுடன் சம்பள பாக்கி கைக்கு வரும். காவல் துறையில் பணி புரிபவர்கள் கௌரவிக்கப்படுவார்கள். விருப்ப ஓய்வு பெறுவது சம்மந்தமாக குடும்பத்தினருடன் கலந்து முடிவு எடுப்பீர்கள்.

அரசியல் - கலைத்துறை  
அரசியல்வாதிகளுக்கு கட்சியில்  கை ஓங்கும். தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். கட்சித் தொண்டர்களுடன் அனுசரணையாகப் போவது நலம் தரும். உங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் தோல்வி அடைவார்கள். மேலிடத்தின் பார்வை உங்கள் மீதுபடும். மாவட்ட அளவில் பதவி, பொறுப்பு கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான காற்று வீசும். மூத்த கலைஞர்களின் ஆதரவு, சிபாரிசு கிடைக்கும். வெளிநாடுகளில் நடக்கும். நட்சத்திர கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புகழ் பெறுவீர்கள். தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு யோகம் உள்ளது.

தொழில் - வியாபாரம்- விவசாயம்
தொழில் சாதகமாக நடக்கும். ரியல் எஸ்டேட், கட்டுமானத் தொழிலில் முன்னேற்றம் உண்டு. விற்காமல் இருக்கும் ஃபிளாட்டுக்கள் ஏப்ரல் மாதத்தில்  இருந்து விற்க ஆரம்பிக்கும். வசதி படைத்த உறவினரிடம் இருந்து பண உதவி கிடைக்கும். மின்சாரம், காண்ட்ராக்ட்டுகள் கைக்கு வரும். வியாபார சம்மந்தமான கொள் முதல் பயணங்கள் லாபகரமாக அமையும். வெள்ளி, தங்க வியாபாரம் சீராக இருக்கும். இமிடேஷன் நகைகள், வாசனை திரவியங்கள் ஃபேன்ஸிஸ்டோர் வியாபாரம் கை கொடுக்கும். வெளியூரில் புதிய கிளைகள் தொடங்குவதற்கான வேலைகளை ஆரம்பிப்பீர்கள். விவசாயத்தில் விளைச்சல் அதிகரிக்கும். வேலையாட்கள் விசுவாசமாக வேலை செய்வார்கள். காய்கறிகள் பயிரிடுவதன் மூலம் லாபம் குவியும். மஞ்சள், பருத்தி, சூரிய காந்தி வகைகளால் ஆதாயம் கிடைக்கும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை சிவன் கோயிலில் அன்னதானம் செய்யலாம். முருகன் கோயிலுக்கு விளக்கேற்ற நெய், எண்ணெய் வாங்கித் தரலாம். ஏழை மாணவர் கல்விக்கு உதவலாம்.


ரிஷபம்


சுக்கிரன் ஆதிக்கம் பெற்ற ரிஷப ராசி அன்பர்களே. இந்த ஆண்டு உங்களுக்கு நிறை குறைகள், விருப்பு வெறுப்பு, வரவு, செலவு என கலவையான பலன்கள் இருக்கும். இரண்டில் ராகு, எட்டில் கேது, சனி போன்ற அமைப்புக்கள் தொடர்வதால் அலைச்சல் மூலம் அனுகூலங்கள் இருக்கும். ஏற்கனவே அஷ்டம சனி இருந்தாலும் உங்கள் ராசிக்கு யோகாதிபதி என்ற அந்தஸ்தில் இருப்பதால் சுப விரயங்களை ஏற்படுத்தி இருப்பார். தற்போது செப்டம்பர் மாதம் ராகு உங்கள் ஜென்ம ராசியிலும், கேது 7ஆம் இடத்திலும் சஞ்சரிப்பதால்  எதிலும் நிதானம், கவனம் தேவை. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். பல அனுபவங்கள் காரணமாக பக்குவம் அடைவீர்கள். பிப்பரவரி 9 வரை செவ்வாய் ஆட்சி பெற்று பார்ப்பதால் உங்கள் எண்ணங்கள், குறிக்கோள்கள் நிறைவேறும்.

பணம் - குடும்பம் - வாக்கு
ராசி நாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் இல்லறம் இனிக்கும். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு அன்பு காட்டுவார்கள். சகோதரியின் திருமணத்தை முன் நின்று நடத்துவீர்கள். புதன் மார்ச் 31 ஆம் தேதி வரை சாதகமாக இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் நின்று போன தொகை அசல் வட்டியுடன் கைக்கு வரும். வருமானத்தை உயர்த்தும் முயற்சிகள் வெற்றியடையும். மாமன் வகை உறவுகளால் மகிழ்ச்சி ஆதாயம் உண்டு. ராகு தன ஸ்தானத்தில் இருப்பதால் போட்டி பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். அவசரத் தேவைக்காக நகைகளை அடமானம் வைக்க நேரிடும். புதிய எலக்ட்ரானிக் சாதனங்கள்  வாங்குவீர்கள். நிச்சயதார்த்தம், வளைகாப்பு போன்ற சுப விசேஷங்களுக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள்.

ஆரோக்கியம் - சொத்து - சுகம்
உடல் நலம், மனநலம் நன்றாக இருக்கும். குரு பார்வை காரணமாக மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவர்கள் குண மடைந்து வீடு திரும்புவார்கள். கண் பார்வை சம்மந்தமாக கண்ணாடி அணிய வேண்டியது வரும். ரத்த அழுத்தக் குறைபாடு உள்ளவர்கள் மாதம் ஒருமுறை சரி பார்த்துக் கொள்வது நலம் தரும். மனைவி வீட்டில் இருந்து பாகப் பிரிவினை மூலம் சொத்து, நகை, பணம் வரும். வழக்கு சம்மந்தமாக சமாதான தீர்வுக்கு வாய்ப்புள்ளது. குடும்பத்துடன் பிரசித்தி பெற்ற திருத்தலங்களுக்கு சென்று தரிசிப்பீர்கள். வீடு மாற வேண்டிய கட்டாய சூழ்நிலைகள் ஏற்படும், நல்ல பகுதியில் வசதியான வீடு அமையும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பீர்கள். சொந்த ஊரில் நிலம் வாங்கும் பாக்கியம் உள்ளது. அனுபவம் மிக்க வழக்கறிஞர்களிடம் ஆவணங்களை சரி பார்ப்பது நல்லது.

பெண்கள் நிதானமாகவும், சகிப்புத்தன்மையுடனும் இருக்க வேண்டிய நேரம். ராகு, கேது அமைப்புக்களால் நிறை குறைகள் இருக்கும். உறவுப் பெண்களிடம் எல்லா விஷயங்களையும் வெளிப்படையாக பேசுவது நல்லதல்ல. மௌனம் தியானம் நல்ல பலன்களை தரும். இஷ்ட தெய்வ ஆலயத்திற்கு சென்று வழிபடுவதால் மறதி, குழப்பம் நீங்கும். செவ்வாய் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். மகன், மருமகள், பேரக்குழந்தைகளை பார்ப்பதற்காக வெளிநாடு சென்று வருவீர்கள். நெருங்கிய உறவுகளின் திருமணங்களை முன்நின்று நடத்துவீர்கள். மொய்ப் பணம், அன்பளிப்பு, விருந்து என்று செலவுகள் அதிகரிக்கும். மாமியார் உடல் நலம் காரணமாக மருத்துவ செலவுகள், அலைச்சல் மன உளைச்சல் இருக்கும். தசாபுக்தி யோகமாக இருப்பவர்கள் செப்டம்பர் மாதத்திற்குள் புதிய ஃபிளாட் வாங்கி பால் காய்ச்சும் பாக்கியம் உள்ளது. மாணவிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். கேது அமைப்பு காரணமாக உங்கள் நடவடிக்கைகள், எண்ணங்கள் திசைமாறலாம்.

உத்தியோகஸ்தர்கள்
சுக்கிரன் சாதகமான இடங்களில் இருப்பதால் செல்வாக்கு உயரும். பிப்ரவரி மாதம் முழுவதும் உச்ச பலத்துடன் இருப்பதால். உத்யோகத்தில் சாதகமான காற்று வீசும். உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. ஊக்கத் தொகை அதிகமாகும். நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் கிடைக்கும். சனி பகவான் எதிர்பாராத யோகத்தைத் தருவார். பதவி உயர்வு, புதிய பொறுப்புக்கள் கிடைக்கும். குடும்பத்தைப் பிரிந்து வெளியூரில் வேலை செய்பவர்கள் இடமாற்றம் பெற்று சொந்த ஊருக்கு வருவார்கள். அதனால் மன உளைச்சல்செலவுகள் நீங்கும். கேது 7ல் இருப்பதால் பல பிரச்னைகள் வரலாம். குறிப்பாக பணப் பொறுப்புக்களை வைத்திருப்பவர்கள் அதிக கவனத்துடன் இருப்பது அவசியம். புதிய நிறுவனத்தில் வேலையில் சேருவதற்கான உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். உங்கள் தகுதிக்கேற்ப நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.

அரசியல்  - கலைத்துறை
சூரியன், செவ்வாய் அனுகூலமான ராசிகளில் சஞ்சரிப்பதால் தயக்கம்.  அவநம்பிக்கை நீங்கும். புதிய உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். கட்சிப் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்படுவீர்கள். ராகு, கேது அமைப்பு காரணமாக அலைச்சல், சக தொண்டர்களால் செலவுகள் இருக்கும். எல்லோரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. பேச்சில் நிதானம், கவனம் தேவை உங்கள் வாக்கால் நீதிமன்றத்தில் வழக்குகளை சந்திக்க வேண்டியது வரும். கலைத்துறையினருக்கு அமோகமான நேரம். சுக்கிரன், புதன் எதிர் பாராத வெற்றிகளை தருவார்கள். கதை, வசனம்,உரையாடல்கள் எழுதுபவர்கள் புகழ் அடைவார்கள். சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு தேடிவரும்.

தொழில் - வியாபாரம் - விவசாயம்
தொழிலில் நல்ல வாய்ப்புக்கள், பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். சனி, புதன், சுக்கிரன் அருளால் முன்னேற்றமான பலன்கள் இருக்கும். வியாபாரிகள் மத்தியில் செல்வாக்கு கூடும். வணிகர் சங்கத்திற்கு தலைமை பதவிக்கு தேர்வு செய்யப்படுவீர்கள். கூட்டுத் தொழிலில் சில பிரச்னைகள் வரவாய்ப்புள்ளது. டெண்டர், காண்ட்ராக்ட் மூலம் வரவேண்டிய பணம் கைக்கு வரும் வண்டி வாங்க, தொழிலை விரிவுபடுத்த வங்கிக் கடன் கிடைக்கும். இரும்பு , எண்ணெய், பிரிண்டிங் பிரஸ், வெள்ளி, பித்தளை, ஸ்டீல்பாத்திர சாமான்கள் வியாபாரம் செழிப்படையும். பழைய கார்களை வாங்கி விற்கும் தொழிலில் நல்ல லாபம் பார்க்கலாம். பெரிய நிறுவனங்களின் பொருட்களை விற்பதற்கான ஒப்பந்தங்கள் போடுவீர்கள். அதனால் வியாபாரம் பெருகும். புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். விவசாயம் சாதகமாக இருக்கும். உங்கள் பகுதியில் விளையும் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். லாரி, டிராக்டர் வாங்க, வங்கிக் கடன் கிடைக்கும். தென்னந்தோப்பு, மாந்தோப்பு, குத்தகைக்கு எடுத்தவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பக்கத்து நிலத்துக்காரர்களுடன் சுமுகமாகப் போவது நலம் தரும். சவுக்கு மரம் வெட்டி விற்பதில் கணிசமான தொகை கிடைக்கும்.

பரிகாரம் : தினமும் 108 முறை  ராம ஜெயம் எழுதலாம்.ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரருக்கு வில்வமாலை சாத்தி வழிபடலாம். வீட்டு வேலை செய்யும் ஏழைப் பெண்களுக்கு மளிகை பொருட்களை கொடுத்து உதவலாம்.

மிதுனம்

புதன் அம்சம் பெற்ற மிதுனம் ராசி அன்பர்களே இந்த ஆண்டு உங்களுக்கு வளர்பிறை, தேய்பிறை போல் பலன்கள் அமையும். ராசியில் ராகு, ஏழில் கேது தொடர்வதால் அடிக்கடி குழப்பம் அடைவீர்கள். சனியின் அமைப்பு, பார்வை இரண்டு பஞ்சாங்கங்களில் வேறு வேறாக இருப்பதால் இரண்டையும் அனுசரித்தே பலன்கள் இருக்கும். குரு ஆட்சி பெற்று இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். நண்பர்களால் சில பிரச்னைகள் வரலாம். வீண் அரட்டை, உல்லாசப் பயணங்கள் செல்வது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் கடன் சம்மந்தமாக ஜாமீன் கொடுப்பது போன்றவை சிக்கல்களை உண்டாக்கும். எந்த விஷயத்தையும் ஒருமுறைக்கு பலமுறை நன்கு யோசித்து அதன் பிறகு முடிவு செய்வது நன்மை தரும்.

பணம் குடும்பம் - வாக்கு
ராசிநாதன் புதன், தனகாரகன் குரு உங்களுக்கு யோகத்தைத் தருவார்கள். பிப்ரவரி 9 வரை செவ்வாய் ஆட்சியாக இருப்பதால் பண வரவு சரளமாக இருக்கும். வட்டி பணம் கொஞ்சம் தாமதமானாலும் அசல் தொகை வசூலாகும். ஒட்டாமல் இருந்த உறவுகள் உங்களைப் புரிந்து கொண்டு உங்கள் உதவியை நாடி வருவார்கள். பிள்ளைகள் கல்வி வகையில் அலைச்சல், செலவுகள் ஏற்படும். வட்டி, ஷேர் மூலம் வருமானம் வரும். மாமன் வகை உறவுகளால் மகிழ்ச்சி ஆதாயம் உண்டு. வேலை, தொழிலில் ஏற்படுகின்ற டென்ஷனை குடும்பத்தில்  காட்டாமல் இருப்பது நல்லது. மகன் திருமண விஷயமாக நல்ல இடத்து சம்பந்தம் கூடி வரும். அதனால் மகிழ்ச்சியும், மன நிறையும் அடைவீர்கள்.

ஆரோக்கியம் - சொத்து - சுகம்
 உடல் நலம், மனநலம் சீராக இருக்கும். இருந்தாலும் சர்க்கரை, ரத்தக் கொதிப்பு குறைபாடு உள்ளவர்கள் பரிசோதனை செய்து கட்டுக்குள் வைப்பது அவசியம். வண்டியில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. சிறு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கர்ப்பமாக இருப்பவர்கள் நீண்ட தூர பயணத்தைத் தவிர்ப்பது நலம் தரும். ஏப்ரல் மாதம் புதன் நீசம் அடைவதால் ஒற்றைத் தலைவலி, நரம்புக் கோளாறுகள், தைராய்டு பிரச்னைகள் வரவாய்ப்புள்ளது பூர்வீக சொத்து சம்மந்தமாக சமாதானமாகப் போவது நலம் தரும். குரு பார்வையால் உங்களுக்கு நல்லது நடக்கும். வசதிக் குறைவு, வாடகை பிரச்னைகள் காரணமாக வீடு மாற வேண்டிய கட்டாய சூழ்நிலைகள் ஏற்படும்.

பெண்கள்: கன்னிப் பெண்களே! குரு பார்வை காரணமாக உங்கள் கல்யாணக் கனவுகள் நிறைவேறும் உங்கள் விருப்பப்படி நல்ல அந்தஸ்தில் இருக்கும் மாப்பிள்ளை அமைவார். சொந்த வீடு வாங்க முடியவில்லையே, கட்டமுடியவில்லையே என்ற மனக்குறை, ஏக்கம் நீங்கும். இந்த வருடம் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். 7ல் கேது இருப்பதால் கணவன், மனைவிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் இருக்கும். விட்டுக் கொடுப்பதன் மூலம் வீண் பிரச்னைகளை தவிர்க்கலாம். வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வீட்டிலும், அலுவலகத்திலும் வேலைச்சுமை இருக்கும். இதனால் மன அமைதி குறையும். ஜூன் மாதத்திற்கு மேல் நிலைமை சீராகும். தாய் வழி உறவுகளின் வீட்டு விசேஷத்தை முன்நின்று நடத்துவீர்கள். கிரைண்டர், ஃபிரிட்ஜ், மிக்ஸி போன்ற மின் சாதனங்கள் வாங்குவீர்கள்.

உத்யோகஸ்தர்கள்
உத்யோகத்தில் இடமாற்றம் காரணமாக குடும்பத்தைப் பிரிந்து வெளியூரில் தங்க வேண்டி வரும். கம்ப்யூட்டர் துறையில் இருப்பவர்களுக்கு வெளிமாநிலம், வெளிநாட்டில் கணிசமான சம்பளத்துடன் வேலை கிடைக்கும். அரசுத்துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். உங்களுக்கு பிரச்னைகள் கொடுத்த உயர் அதிகாரி மாற்றல் பெற்றுச் செல்வார். ஆசிரியர்கள் வங்கி ஊழியர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். குரு பார்வை காரணமாக உங்கள் கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும். நிலுவைத் தொகை மொத்தமாக கைக்கு கிடைக்கும். அலுவலகத்தில் தான் உண்டு. தன் வேலை உண்டு  என்று இருப்பது உத்தமம். சக ஊழியர்களுடன் வீண் பேச்சுக்கள், விமர்சனங்கள் வேண்டாம். சனிபகவானின் பார்வை காரணமாக சில சங்கடங்கள் வரலாம்.

அரசியல் - கலைத்துறை
அரசியல் களத்தில் புதிய உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். விளம்பரங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்தி தலைமையின் கவனத்தை ஈர்ப்பீர்கள்.  M.L.A , M.P க்களின் தொடர்பு கிடைக்கும். அதனால் இழந்த செல்வாக்கு மற்றும் புதிய பதவி, பொறுப்புக்கள் கிடைக்கும். கேது 7ல் இருப்பதால் யாரையும் வெளிப்படையாக பகைத்துக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். பெரிய நிறுவனங்களின் விளம்பர படத்தில் நடிக்க தேர்வு செய்யப் படுவீர்கள். வேற்று மொழிப் படங்கள் மூலம் புகழ் அடைவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் ஏப்ரல் மாதத்திற்குள் வெளி வராமல் இருக்கும் படம் ரிலீஸாகும். அதனால் கையில் பணம் புரளும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனை அடைத்து நிம்மதியடைவீர்கள்.

தொழில் - வியாபாரம் - விவசாயம்
சுய தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். கடைகளுக்கு சப்ளை செய்வதன் மூலம் நல்ல கமிஷன் கிடைக்கும். வியாபார சம்மந்தமான கொள்முதல் பயணங்கள் லாபகரமாக அமையும். ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்கள் கூடுதல் ஆதாயம் அடைவார்கள். அரசாங்க சலுகைகள் கிடைக்கும். குரு பார்வை காரணமாக கையில் பணம் புரளும். பெரிய நிறுவனங்களிடமிருந்து கடனுதவி  கிடைக்கும். அரிசி, நவதான்ய வகைகள், கடலை, மொச்சை போன்ற பயிர் வகைகள் பல சரக்கு வியாபாரம் லாபகரமாக நடக்கும். தங்கம், வெள்ளி நகைகள், இமிடேஷன் நகைகள், பிளாஸ்டிக் சாமான்கள் நல்ல லாபத்தைத் தரும். ஹோட்டல் தொழிலில் லாபம் கொழிக்கும். வேலையாட்கள் பிரச்னை தீரும். விவசாயம் கை கொடுக்கும். வாழை சாகு படியில் நல்ல லாபம் வரும். ஊடு பயிர் விவசாயம் நல்ல விளைச்சலைத் தரும். பீன்ஸ், அவரை, செள சௌ பயிரிடுவதன் மூலம் நல்ல லாபம் பார்க்கலாம். பப்பாளி, பலாப்பழம் நல்ல விளைச்சலையும் அதிகலாபத்தையும் தரும். புதிதாக தோண்டிய கிணற்றில் நல்ல தண்ணீர் ஊற்றெடுக்கும். குரு, சுக்கிரன் அருளால் புதிய தோட்டம், தோப்பு வாங்கும் பாக்கியம் உள்ளது.

பரிகாரம் : ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடலாம். சனிக்கிழமை பெருமாள் கோயிலில் புளியோதரை சாதத்தை தானமாக வழங்கலாம். முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவலாம்.

கடகம்

சந்திரனின் ஆதிக்கம் பெற்ற கடக ராசி அன்பர்களே, இந்த ஆண்டு உங்களுக்கு அமோகமான ஆண்டாக இருக்கும். உங்கள் எண்ணங்கள், திட்டங்கள் முழுமையாக வெற்றியடையும். ஆறாம் வீட்டில் கேதுவுடன். ஆட்சி பெற்ற குரு சேர்ந்து இருப்பதால் தொட்டது துலங்கும். எங்கும் எதிலும் உங்கள் கை ஓங்கும். 6ல் சனி அஷ்ட லட்சுமி யோகம் இதுவரை சனி-6ல் இருந்து சாதகமான பலன்களை கொடுத்தார். தற்போது திருக்கணித பஞ்சாங்கத்தின் படி ஏழாம் வீட்டில் ஆட்சி பலம் பெறப் போகிறார் சனியின் ஆட்சி அதிகாரம். உங்களுக்கு பக்கபலமாக  இருக்கும். குரு அதிசாரமாக மகர ராசிக்கு செல்வதால் நீச பங்கம் உண்டாகி ராஜ யோகத்தைத் தருவார்.

பணம் - குடும்பம் - வாக்கு
பாக்கிய ஸ்தானாதிபதி, தன காரகன் குரு ஆட்சி பெற்று இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் தொட்டது துலங்கும். பொருளாதாரம் உச்ச மடையும். கொடுக்கல் வாங்கல் சாதகமாக நடக்கும். பங்கு வர்த்தகம், வட்டி, வாடகை வருமானங்கள் உயரும். சொந்த பந்தங்கள் மத்தியில் பெயரும், புகழும் அடைவீர்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலைகள் நீங்கும். பிள்ளைகள் உங்களைப்  புரிந்து கொண்டு பாசம் காட்டுவார்கள்.  பிப்ரவரி மாதம் முழுவதும் சுக்கிரன் உச்சமாக இருப்பதால் உடல் நலம், மனநலம் நன்றாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். மனைவியின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வைர நவரத்தின ஆபரணங்கள் வாங்கி பரிசளிப்பீர்கள். வளைகாப்பு, பேரன், பேத்திகளுக்கு முடி இறக்கி காது குத்துதல் போன்ற விசேஷங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

ஆரோக்கியம் - சொத்து - சுகம்
உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உற்சாகமாக செயல்படுவீர்கள். ராகு 12ல் தொடர்வதால் அலைச்சல், ஓய்வில்லாத  வேலை இருக்கும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிறிய உடல் உபாதைகளை உடனுக்குடன் பார்த்து மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வது நலம் தரும். டென்ஷன் தூக்கமின்மை வந்து நீங்கும். மனைவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. பெரிய அளவில் எதுவும் இருக்காது. ஒரு சொத்தை விற்று வேறொரு சொத்து வாங்குவீர்கள். தசாபுக்தி யோகமாக இருப்பவர்கள் சொந்த வீடுகட்டி, கிரகப் பிரவேசம் செய்வார்கள். மனைவி வீட்டில் இருந்து பாகப் பிரிவினை பணம் கைக்கு வரும். பிள்ளைகள் திருமண விஷயமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிலருக்கு குடும்ப உறவுகளுக்குள்ளேயே சம்பந்தம் அமைவதற்கான யோக அம்சங்கள் உள்ளன.

பெண்கள்: வருட ஆரம்பம் முதல் சுக்கிரன் சாதகமான நிலையில் இருப்பதால் அமைதி. ஆனந்தம் இணைந்து இருக்கும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் தகுதியான வேலை கிடைக்கும். அக்கா, தங்கைகளிடையே விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மாமியார், நாத்தனார் வகையில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சந்தோஷமாக கூடி மகிழ்வீர்கள். அரசுத்துறை, வங்கியில் பணி புரிவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ராகுவின் அமைப்பு காரணமாக வயிறு, கர்ப்பப்பை, மாதவிடாய் கோளாறுகள் வந்து நீங்கும். கன்னிப் பெண்கள்  பெற்றோர்களின் பேச்சைக் கேட்பது மிக முக்கியமாகும். சனிபகவானின் பார்வை காரணமாக மனசஞ்சலம், கூடா நட்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. வடமாநிலத்தில் உள்ள புனித ஸ்தலங்களுக்கு சொந்த பந்தங்களுடன் சென்று வழிபடுவீர்கள். வெளிநாட்டில் இருக்கும். மகள் கர்ப்பம் அடைந்த இனிக்கும் செய்தி
வரும் . அதனால் அயல்நாட்டுப் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்வீர்கள்.

உத்யோகஸ்தர்கள்: ஆறாம் இடத்தில் சனி, கேது, குரு இருப்பதால் சாதகமான மாற்றங்கள் வரும். குறைந்த சம்பளத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் வரும். அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகை கைக்கு வரும். பிப்ரவரி மாதத்திற்கு மேல் வேலைச்சுமை குறையும். லோன் சம்மந்தமாக விண்ணப்பித்தவர்களுக்கு லோன் கிடைக்கும். சக ஊழியர்களுடன் அனுசரணையாகப்  போவது நலம் தரும்.  அதனால் அவர்கள் நெருக்கடியான நேரத்தில் உதவுவார்கள். பணி நிரந்தரம் சம்மந்தமாக நல்ல செய்தி உண்டு. விருப்ப ஓய்வு பெற்றவர்கள் புதிய நிறுவனத்தில் வேலைக்கு சேருவார்கள்.

அரசியல் - கலைத்துறை
அரசியலில் இருப்பவர்களுக்கு சாதகமான காற்று வீசும். எதிர் கோஷ்டியினரின் செயல்கள் தோல்வி அடையும். முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் உங்கள் அணியில் வந்து சேருவார்கள். மேல் மட்டத் தலைவர்கள், மந்திரிகளின் ஆதரவு கிடைக்கும். குரு பார்வையால் செல்வாக்கு கூடும். தொழிற்சங்கத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு அமோகமான ஆண்டாக அமையும். தொலைக்காட்சித் தொடரில் நல்ல பெயர், புகழ், பணம் வரும். விநியோகஸ்தர்கள் பலமடங்கு லாபம் அடைவார்கள். கர்நாடக இசைத்துறையில் இருப்பவர்களுக்கு அயல்நாட்டில் கச்சேரி செய்ய வாய்ப்புக்கள் கிடைக்கும். சொற்பொழிவாளர்கள், பட்டிமண்டப பேச்சாளர்கள் வெளிநாடுகளில் நிகழ்ச்சி நடத்தி புகழ் அடைவார்கள்.

தொழில் - வியாபாரம் - விவசாயம்
சுய தொழில் செய்பவர்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். எதிர் பார்த்த காண்ட்ராக்ட், ஆர்டர் கைக்கு வரும் போட்டிகள் இருந்தாலும் அதிர்ஷ்டக் காற்று உங்களுக்கு சாதகமாக வீசும். நல்ல அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். அதனால் உங்களுக்கு அலைச்சல், டென்ஷன் குறையும். குருவின் சுப பார்வை காரணமாக வியாபாரம் உச்சமடையும். புதிய ஏஜென்ஸிகள் எடுப்பீர்கள். கொள்முதல் லாபகரமாக அமையும். ஏலக்காய், கிராம்பு. காப்பிக் கொட்டை விலை ஏற்றம் இருக்கும். இருப்பு அதிகம் வைத்திருப்பவர்கள் கூடுதல் லாபம் அடைவார்கள். செங்கல், கட்டுமானப் பொருட்கள் வியாபாரம் கை கொடுக்கும். கடன் பாக்கிகள் வசூலாகும். விவசாயம் சீராக இருக்கும். பக்கத்து தோட்டக் காரருடன் ஏற்பட்ட கோபதாபங்கள் தீரும். கிணற்றில் நீர் நன்கு ஊற்றெடுக்கும். பூக்கள், காய்கறிகள் பயிரிடுபவர்கள் நல்ல லாபம் பார்ப்பார்கள். குத்தகை பணம் வசூலாகும்.பரிகாரம் : பிரதோஷத்தன்று சிவனுக்கு வில்வ மாலையும். நந்திக்கு அறுகம்புல் மாலையும் சாத்தி வழிபடலாம். சாலையோரம் வசிப்பவர்களுக்கு ஆடை, போர்வை தானம் தரலாம்.

சிம்மம்

சூரியன் ஆதிக்கம் பெற்ற சிம்ம ராசி அன்பர்களே, உங்களுக்கு யோகமான மாற்றங்கள்  , ஏற்றங்கள் வரும் ஆண்டாக அமையும். இருந்தாலும் சில அதிருப்திகளும், அலைச்சலும், நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டி வரும். கேது 5 இருப்பதால் நிறை குறைகள் இருக்கும். பலவிதமான குழப்பமான சிந்தனைகள் மனதில் தோன்றும். குரு, சனி அமைப்பு உங்களுக்கு யோகத்தைத் தரும். சொந்த பந்தங்களின் மத்தியில் புகழ் அடைவீர்கள். உயர்ந்த பதவி அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் ஆதரவு கிடைக்கும். செப்டம்பர் 9 ஆம்  தேதி முதல் கேது நான்காம் வீட்டிற்கு பெயர்ச்சி அடைவதால் அலைச்சல், இடமாற்றம் இருக்கும். வேலை வேலை என்று இருக்காமல் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

பணம்-  குடும்பம் - வாக்கு
தனகாரகன் குரு ஆட்சி பெற்று இருப்பதால் பொருளாதாரம் சீராக இருக்கும். பழைய கடன்களை அடைப்பதற்கு வழி பிறக்கும். மகனுக்கு வெளிநாட்டில்கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைக்கும். அதனால் குடும்பச் சுமை குறையும். செவ்வாய் சாதகமாக இருப்பதால் சொத்துக்களில் இருந்து வாடகை வருமானங்கள் உயரும். ஏப்ரல் மாதம் புதன் நீசம் அடைவதால் வீண் செலவுகள் உண்டாகும். தந்தைக்கு மருத்துவ செலவுகள் வந்து நீங்கும். சுக்கிரன் பிப்ரவரி மாதம் முழுவதும் உச்சமாக இருப்பதால் தடைபட்டு வந்த சுப விசேஷங்கள் கூடி வரும். வீடு கிரகப்பிரவேசம் செய்வதற்கான முகூர்த்த தேதியை முடிவு செய்வீர்கள். நெருங்கிய உறவுகள் உதவிகரமாக இருப்பார்கள்.

ஆரோக்கியம் - சொத்து - சுகம்
உடல் நலம், மன நலம் சீராக இருக்கும். அவரவர்கள் வயதிற்கேற்ப உடல் உபாதைகள் இருக்கும். பெரிய அளவில் மருத்துவ சிகிச்சைகள், செலவுகள் வருவதற்கு வாய்ப்பில்லை சனி, கேது அமைப்பு காரணமாக மன உளைச்சல் அதன் காரணமாக  B.P சம்பந்தப்பட்ட குறைபாடுகள்  வரலாம். கழுத்து வலி மூட்டு வலி வந்து நீங்கும். பூர்வீக சொத்து சம்மந்தமாக நல்ல முடிவுகள் ஏற்படும். பழைய வீட்டை இடித்து புதிய  வீடு கட்டும் யோகம் உள்ளது. வழக்கு சம்மந்தமாக சமாதான தீர்வுக்கு வாய்ப்புள்ளது. சமாதானமாகப் போவதால் இருதரப்பினருக்கும் அலைச்சல், செலவுகள் நீங்கும். உங்களுக்கு சேர வேண்டிய நிலமோ, பணமோ, கைக்கு கிடைக்கும்.

பெண்கள்: குரு பார்வை காரணமாக மன உளைச்சல், மறதி, கோபதாபங்கள் நீங்கும். தாய் வீட்டில் இருந்து வர வேண்டிய பாகப்பிரிவினை சொத்து சம்மந்தமாக நல்ல தகவல் வரும். கணவன், மனைவிக்கிடையே சின்னச் சின்ன வாக்கு வாதங்கள், கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் காரணமாக கவலைப்படுவீர்கள். மாணவிகள் மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. வளைகாப்பு, மஞ்சள் நீராட்டு விழா போன்றவற்றிற்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். குடும்பத்துடன் பிரசித்தி பெற்ற பரிகார ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுவீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு தோழிகளால் சில சங்கடங்கள் வரலாம். நகை இரவல் கொடுப்பது, வாங்குவதை தவிர்ப்பது நலம் தரும்.

உத்யோகஸ்தர்கள்: சனி அமைப்பு காரணமாக உங்கள் எண்ணங்கள்,  ஏக்கங்கள் எல்லாம் நிறைவேறும். புதிய வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்தபடி நல்ல சம்பளத்தில் வேலை அமையும். அரசு ஊழியர்களுக்கு சாதகமான மாற்றங்கள் வரும். அலுவலக சம்மந்தமான வழக்கில் வெற்றி பெறுவீர்கள். நிலுவைத் தொகை முழுவதும் கைக்கு வரும். பொது அமைப்பு, தொழிற்சங்கத்தில் கவுரவ பதவி, பொறுப்பு கிடைக்கும். கேது அமைப்பு காரணமாக சில பிரச்னைகள் வரலாம் அதனால் வேலையில் கவனம் தேவை, கோப்புக்கள், கடிதங்களை பத்திரமாக வைத்துக் கொள்வது அவசியம். உங்கள் வேலைகளை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். செப்டம்பர் மாதம் தற்காலிக இடமாற்றம் வருவதற்கு வாய்ப்புள்ளது.

அரசியல் - கலைத்துறை
ராகுவின் அருள் காரணமாக எதிர் பாராத பதவியில் அமரும் பாக்கியம் உண்டு. மறைமுக, நேர்முக எதிர்ப்புக்கள், கோஷ்டி பிரச்னைகள் எல்லாம் அடங்கும். கூட இருந்து குழி பறிப்பவர்களை அடையாளம் கண்டு ஒதுக்குவீர்கள். கட்சி தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். மேலிடம் அறிவிக்கும் போராட்டத்தை தலைமை தாங்கி வெற்றிகரமாக நடத்தி தொகுதியில் செல்வாக்கு பெறுவீர்கள். பிப்ரவரி வரை சுக்கிரன் உச்சமாக இருப்பதால் கலைத்துறையினருக்கு யோகமான நேரம். பாதியில் நின்ற பட பிடிப்புக்கள் மீண்டும் தொடங்கும். சின்னத் திரையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க  வாய்ப்பு கிடைக்கும். பட விநியோகஸ்தர்கள் நல்ல லாபம் பார்ப்பார்கள். வருமானம் கூடும். வரவேண்டிய தொகை வசூலாகும் அதிக வட்டிக்கு வாங்கிய கடனை அடைப்பீர்கள்.

தொழில்  - வியாபாரம் - விவசாயம்
தொழில், வியாபாரம் கை கொடுக்கும். குரு பார்வை காரணமாக கொடுக்கல் வாங்கலில் நின்று போன தொகை வசூலாகும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் சற்று விட்டுக் கொடுத்துப் போவது நலம் தரும். தெரியாத புதிய தொழிலில் இறங்க வேண்டாம். வங்கியில் கேட்டிருந்த கடனுதவி பிப்ரவரி மாதம் கிடைக்கும். கட்டிட சம்மந்தமான காண்ட்ராக்ட் வேலைகள் மின்சார சம்மந்தமான காண்ட்ராக்ட்களில் கணிசமான லாபம் கிடைக்கும். ஃபேன்ஸி ஸ்டோர், ரெடிமேட் துணிகள், பெண்கள் உள்ளாடைகள், வாசனை திரவியங்கள் வெள்ளி வியாபாரம் போன்றவற்றில் நல்ல லாபம் கிடைக்கும். விவசாயம் சீராக இருக்கும். காய்கறிகள் பயிரிடுபவர்கள் நல்ல லாபம் பார்ப்பார்கள். புதிய பம்ப்செட் அமைப்பதற்கு வங்கி கடன் கிடைக்கும். மரம் வெட்டும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பூக்கள் விவசாயம் நல்ல பலன் தரும். கரும்பு விவசாயம் பெரிய அளவில்  கை கொடுக்கும்.

பரிகாரம்: தினசரி 108 முறை ஸ்ரீ ரமணாய என்று தியானிக்கலாம். சனிக்கிழமை, புதன் ஹோரையில் நரசிம்மர், சக்கரத்தாழ்வாரை, தரிசிக்கலாம். ஏழை நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை வாங்கித் தரலாம்.


கன்னி

புதன் அம்சம் பெற்ற கன்னி ராசி அன்பர்களே! இந்த ஆண்டு நல்ல வளர்ச்சியும், வசதி வாய்ப்புக்களும் அமையும். அதே நேரத்தில் சில அதிருப்திகள், நெருக்கடிகளை சந்திக்க வேண்டியது இருக்கும். ஆகையால் எதிலும் நிதானம், கவனம் தேவை. சனி, கேது அமைப்பு காரணமாக அலைச்சல், ஒயாத பயணங்கள் இருக்கும். சொத்து பரிமாற்றம், வாங்குவது, விற்பது சம்மந்தமாக அவசர முடிவுகள் வேண்டாம். ஆடிட்டர் வழிக்கறிஞர்கள், அனுபவஸ்தர்களை கேட்டு செய்யயும். ராகு அமைப்பு காரணமாக ஏதாவது அரசாங்க, சட்ட பிரச்னைகள் வரவாய்ப்புள்ளது. சுக்கிரன் வருடஆரம்பத்தில் சாதகமான ராசிகளில் செல்வதால் சொந்த பந்தங்கள் கை கொடுத்து உதவுவார்கள். பெண்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.

பணம் - குடும்பம் - வாக்கு
பொருளாதாரம் ஏற்றம் அடையும். குரு பார்வை காரணமாக கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அதனால் பணப்புழக்கம் இருக்கும். வட்டிக்கு வாங்கிய கடனை அடைப்பீர்கள். குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏற்பட்டு வந்த உடல் நலக் கோளாறுகள் அதன் காரணமாக ஏற்பட்ட மருத்துவ செலவுகள் நீங்கும். நண்பர்கள் சேர்க்கையை தவிர்ப்பது நலம் தரும். சுக்கிரன் பிப்ரவரி மாதம் முழுவதும் உச்சமாக இருப்பதால் தடைபட்ட விஷயங்கள் கூடி வரும். செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு விரும்பிய கல்லூரியில் கேட்டபாட பிரிவில் இடம் கிடைக்கும். சகோதரியின் திருமணத்தை தலைமை ஏற்று நடத்துவீர்கள். அதனால் அலைச்சல், மொய் பணம் என்று செலவுகள் கூடும்.

ஆரோக்கியம் - சொத்து - சுகம்
சனி, கேது 4ல் இருப்பதால் எதாவது ஒரு வகையில் அலைச்சல், பயணங்கள் அதனால் உடல் நலம் சரியில்லாமல் போவது என்ற நிலை மாறும். குரு ஆட்சியாக இருப்பதால் உடல் நலம், மன நலம் சீராக இருக்கும். மருத்துவ செலவுகள் படிப்படியாக குறையும். சனி அமைப்பு காரணமாக நல்லமாற்றங்கள் வரும். தாய் வழி உறவுகளால் மகிழ்ச்சி, ஆதாயம் கிடைக்கும். மூட்டுவலி, ஒற்றைத் தலைவலி, முதுகு வலி காரணமாக முடங்கி இருந்தவர்கள் படிப்படியாக குணம் அடைவார்கள். சொத்து சம்மந்தமாக புறநகர் பகுதியில் இருக்கும் இடத்தைக் கட்டுவதற்கான வேலைகளை தொடங்குவீர்கள். பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஆரம்பிப்பது நல்லது ஏனென்றால் 4ல் உள்ள கேது சின்னச் சின்னப் பிரச்னைகளை தருவதற்கு வாய்ப்பு உள்ளது.

பெண்கள் குடும்பத்தில் ஏற்பட்ட இறுக்கமான சூழ்நிலைகள், கவலைகள், மனக்கசப்புகள் நீங்கும். இல்லறம் இனிக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். தாய் வீட்டில் இருந்து வரவேண்டிய பாகச் சொத்து, பணம், நகைகளை இந்த வரும் எதிர் பார்க்கலாம். ஏப்ரல் மாதத்திற்குள் கைக்கு வந்து சேரும். வளைகாப்பு, மஞ்சள் நீராட்டு விழா போன்ற விசேஷங்களுக்கான ஏற்பாடுகளை விமரிசையாக செய்வீர்கள். சொந்த பந்தங்கள்  கை கொடுத்து உதவுவார்கள். மாமனார் உடல் நலம் காரணமாக அலைச்சல் மருத்துவ செலவுகள் ஏற்பட்டு நீங்கும். கன்னிப் பெண்கள் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்படாமல் தாயாருக்கு ஒத்துழைப்புக் கொடுப்பது நலம் தரும். செவ்வாய் பார்வையால் மாதவிடாய் பிரச்னைகள்  கர்ப்பப்பை கோளாறுகள் வரலாம். உடனுக்குடன் மருத்துவரை பார்ப்பது நல்லது.

உத்யோகஸ்தர்கள்
பத்தாம் வீட்டில் ராகு தொடர்வதால் ஓய்வு இல்லாமல் உழைக்கவேண்டி இருக்கும். தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு அதிக வேலைச்சுமை இருக்கும். விடுப்பில் இருக்கும் ஊழியர்களின் வேலைகளை சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். நிலுவைத் தொகையுடன் ஊக்கத் தொகையும் கைக்கு வரும். அரசப் பணியில் இருப்பவர்களுக்கு திடீர் வெளியூர் மாற்றம் வர வாய்ப்புள்ளது.  கம்ப்யூட்டர் துறையில் இருப்பவர்களுக்கு வெளிமாநிலத்திற்கு மாற்றல் இருக்கும். சிலருக்கு சம்பளம் வகையில் பிரச்னைகள் வரலாம். பத்திரிகை துறையில் பணி புரிபவர்களுக்கு சாதகமான நிலை இருக்கும். பதவி உயர்வு எதிர் பார்க்கலாம். நிருபர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். வங்கிப் பணியில் சீரான நிலை இருக்கும். அரசுப் பணிக்கு தேர்வு எழுதியவர்கள், முயற்சித்தவர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கு மேல் நல்ல செய்தி வரும்.

அரசியல் - கலைத்துறை
சனி பகவானின் அமைப்பு காரணமாக உங்கள் திட்டங்கள் முழுமையாக வெற்றியடையும்.  வீரிய ஸ்தான பலம், குரு பார்வை காரணமாக தொகுதியில் உங்கள் செல்வாக்கு உயரும். கட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர் கோஷ்டியில் இருக்கும் முக்கிய பிரமுகர் உங்கள் ஆதரவாளராக மாறுவார். அக்டோபர் மாதத்திற்கு மேல் மாநில அளவில் பெரிய பொறுப்புகள் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான காற்று வீசும். நீங்கள் தயாரித்த, நடித்த, இயக்கிய படத்திற்கு மத்திய, மாநில அரசுகளின் விருது, பரிசுத் தொகை கிடைக்கும். கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் தேடி வரும். கலை நிகழ்ச்சிகள், நகைச்சுவை பேச்சாளர்கள், நாட்டுப்புற இசைக் கலைஞர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிகழ்ச்சி நடத்த அழைப்பு வரும்.

தொழில்- வியாபாரம் - விவசாயம்
தொழில், வியாபாரம் சீராக இருக்கும் . தொழில் வளர்ச்சிக்காக திட்டங்கள் தீட்டுவீர்கள். நெருங்கிய உறவினரிடமிருந்து குறைந்த வட்டிக்கு பணம் கிடைக்கும். சாதூர்யமாக பேசி புதிய ஆர்டர்கள் பெறுவீர்கள். பத்தில் ராகு இருப்பதால் காண்ட்ராக்ட்டில் எதிர் பாராத லாபம் கிடைக்கும். பங்குவர்த்தகத்தில் இருப்பவர்கள் பல மடங்கு வருமானம் பார்ப்பார்கள். குரு பார்வை காரணமாக கொடுக்கல், வாங்கல் சாதகமாக இருக்கும். பேப்பர், பிரிண்டிங் பிரஸ், ஏஜென்சி தொழில்கள் லாப கரமாக நடக்கும். மருந்துக் கடை பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே, ஸ்கேன் சென்டர்களில் நல்ல லாபம் வரும். விவசாயம் கை கொடுக்கும். துவரை, மொச்சை, கடலை வகை பயிர்களால் நல்ல ஆதாயம் அடைவீர்கள். காப்பி, ஆரஞ்சு போன்ற பழவகைகளை காண்ட்ராக்ட் பிடிப்பவர்கள் நல்ல லாபம் பார்ப்பார்கள். அரசாங்க வகையில் சில ஆதாயங்கள் கிடைக்கும். வங்கியில் இருந்து சலுகைகள் எதிர் பார்க்கலாம்.

பரிகாரம் : சங்கடஹர சதுர்த்தியன்று விநாயருக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்து வணங்கலாம். பசுமாட்டிற்கு கீரை, பழங்கள் வாங்கித் தரலாம். பக்தர்களுக்கு பக்தி, ஸ்லோக புத்தகங்கள் வாங்கி விநியோகிக்கலாம்.

துலாம்

சுக்கிர யோகத்தில் பிறந்த துலாம் ராசி அன்பர்களே! திட தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு ஆட்சி பெற்று இருப்பதால் உங்கள் எண்ணங்கள், விருப்பங்கள் தாமாக கூடி வரும். சொந்த பந்தங்கள், நட்பு வட்டங்களில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் தோல்வி அடைவார்கள். சனிபகவானின் அமைப்பு காரணமாக வாழ்க்கையில் முக்கிய மாற்றங்கள் வரும். தாய்வழி உறவுகளிடையே நெருக்கம் கூடும். அதனால் சில நல்ல விஷயங்கள் கூடிவரும். உயர் உச்ச பதவியில் இருப்பவர்களின் அறிமுகம், ஆதரவு கிடைக்கும். வயதான தாய், தந்தையின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். அவர்களின் விருப்பப்படி வடநாட்டில் உள்ள காசி உள்ளிட்ட புண்ணியஸ்தலங்களுக்கு அழைத்துச் செல்வீர்கள்.

பணம் - குடும்பம் - வாக்கு

தன, குடும்பஸ்தான சாதகமான மாற்றங்கள் வரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சுக்கிரன் உங்களுக்கு பொன், பொருள் சேர்க்கையை தருவார். பெண்களால் ஆதாயம் அடைவீர்கள். தாய், சகோதரியிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தைப் பிரிந்து வெளியூரில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் மாற்றல் பெற்று சொந்த ஊருக்குத் திரும்புவார்கள். வாடகை, குத்தகை பாக்கிகள் வசூலாகும். செவ்வாய் சாதகமாக இருப்பதால் வீண் வழக்குகளில் சிக்கி இருந்தவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். அதனால் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். மகன், மகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அதனால் மகிழ்ச்சி நிலவும். குடும்ப வருமானம் உயரும். உங்கள் வளர்ச்சியை விரும்பாத சிலர் பொறாமை அடைவார்கள். ஆகையால் குடும்ப விஷயங்களை ரகசியமாக வைப்பது நல்லது.

ஆரோக்கியம் - சொத்து - சுகம்

ஆரோக்கியம், உடல்நலம், மனநலம் சீராக இருக்கும். அவரவர்கள் வயதிற்கேற்ப சிறிய உபாதைகள், குறைபாடுகள் இருக்கும். ஆகஸ்ட் மாதத்திற்கு மேல் சில நெருக்கடிகள், வருத்தங்கள் வரலாம். ராகு, கேது மாற்றம் காரணமாக கண், காது, தொண்டை சம்பந்தமாக உபாதைகள் வரும். மருத்துவச் சிகிச்சைகள், செலவுகள் உண்டாகும். சனி, குரு மூன்றில் பலமாக இருப்பதால் சொத்து சம்பந்தமாக எல்லாம் சாதகமாக கூடிவரும். வாடகைக்கு இருப்பவர்கள் காலி செய்வது சம்பந்தமாக இருந்த பிரச்னைகள் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாக முடியும். சகோதர உறவுகளிடையே சொத்துக்களை பிரித்துக்கொள்வதில் இருந்த பிரச்னைகள், தடைகள் எல்லாம் நீங்கி ஒருமித்த கருத்து ஏற்படும்.

பெண்கள்: குரு, கேது மூன்றாம் வீட்டில் இருப்பதால் ஸ்திரமாக முடிவு எடுப்பீர்கள். மகள் திருமண விஷயமாக நல்ல இடத்து சம்பந்தம் கூடிவரும். ஆவணி மாதம் திருமண யோகத்திற்கு அமைப்புள்ளது. நெருங்கிய உறவுகளுடன் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களுக்குச் சென்று தரிசிப்பீர்கள். சுக்கிரன் சாதகமான ராசிகளில் செல்வதால் பண வரவுகள் தாராளமாக இருக்கும். பணத்தை தங்க ஆபரணங்களில் முதலீடு செய்வீர்கள். கணவரின் தொழில் லாபகரமாக நடக்கும். ஒரு சொத்தை விற்று வேறொரு சொத்து வாங்கும் பாக்கியம் உள்ளது. அக்கா, தங்கைகளிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். நல்லுறவு மலரும். ஆகஸ்ட் மாதத்திற்கு மேல் கேது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆவதால் எதிலும் நிதானம் தேவை. பிறர் குடும்ப விஷயங்களில் கருத்து சொல்லாமல் இருப்பது நலம் தரும். எதிர்பாராத அவசர, அவசிய செலவுகள் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்கள்

செவ்வாய் ஆட்சி, உச்சம் என சாதகமான ராசிகளில் செல்வதால் உங்கள் பிரச்னைகள் தீரும். இடமாற்றம் காரணமாக வெளியூரில் இருந்தவர்களுக்கு சொந்த ஊருக்கு மாற்றல் கிடைக்கும். புதிய வேலையில் சேருவதற்கான முயற்சிகள் பலன் தரும். நல்ல சம்பளத்தில் தகுதியான வேலையில் சேருவீர்கள். குரு பாக்கியஸ்தானத்தை பார்ப்பதால் பதவி உயர்வுக்கு யோகம் உள்ளது. மூத்த அதிகாரிகளின் ஆதரவு, ஒத்துழைப்பு கிடைக்கும். அரசுத்துறை, வங்கியில் பணிபுரிபவர்களுக்கு சீரான நிலை இருக்கும். லோன் சம்பந்தமாக நல்ல செய்தி உண்டு. காண்ட்ராக்ட் ஒப்பந்த முறையில் வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.

அரசியல் - கலைத்துறை

குரு பார்வை, சனிப்பெயர்ச்சி அம்சங்கள் உங்களுக்கு முழுமையான வெற்றியைக் கொடுக்கும். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்களை அடையாளம் கண்டு ஒதுக்குவீர்கள். தொகுதியில் உங்கள் செல்வாக்கு உயரும். கோஷ்டி பூசல்கள் இருந்தாலும் உங்கள் கை ஓங்கும். மாவட்ட அளவில் பதவி கிடைக்கும் யோகம் உள்ளது. கட்சியில் அதிகார மட்டத்தில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினருக்கு படிப்படியான முன்னேற்றம் இருக்கும். பிப்ரவரி மாதம் முழுவதும் சுக்கிரன் உச்சமாக இருப்பதால் புதிய படவாய்ப்புக்கள் தேடி வரும். டைரக்‌ஷன், இசைத்துறையில் இருப்பவர்கள் புகழ் பெறுவார்கள். பெரிய நிறுவனங்களின் விளம்பர மாடலாக நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்படுவீர்கள்.

தொழில் - வியாபாரம் - விவசாயம்
வியாபாரம் லாபகரமாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். சுயதொழில் செய்பவர்களுக்கு நல்ல வருமானம் வரும். காண்ட்ராக்ட், சப்-காண்ட்ராக்ட் வகையில் தொழில் வாய்ப்புக்கள் அதிகரிக்கும். சமையல் கலைஞர்கள், கேட்டரிங் காண்ட்ராக்ட் எடுப்பவர்கள் நல்ல லாபம் பார்ப்பார்கள். குரு பார்வை  காரணமாக கொடுக்கல், வாங்கல் சாதகமாக நடக்கும். ஏலச்சீட்டு ஃபைனான்ஸ் தொழிலில் நிறை குறைகள் இருக்கும். பாதிப்புக்கள், பிரச்னைகள் வராது. தண்ணீர் சம்பந்தமான தொழில்கள், காய்கறி, கனி வகைகள், அழுகும் பொருட்கள் வியாபாரம் கை கொடுக்கும். விவசாயம் சீராக இருக்கும். கரும்பு, வாழை விவசாயம் கை கொடுக்கும். குத்தகை பாக்கிகள் வசூலாகும். சனி மாற்றம் காரணமாக சொத்து சேரும். புதிய தோட்டம், தோப்பு வாங்குவீர்கள். ராகி, கம்பு, சோளம், பருத்தி வகை விவசாயத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

பரிகாரம்: தினசரி அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் படிக்கலாம். பௌர்ணமியன்று அம்மன், அம்பாள் கோயில்களுக்குச் சென்று வணங்கலாம். உடல்நலம், மனநலம் குன்றிய குழந்தைகள் காப்பகத்திற்கு உதவலாம்.

விருச்சிகம்
செவ்வாய் ஆதிக்கம் பெற்ற விருச்சிக ராசி அன்பர்களே! உங்களுக்கு ஏற்றம், ஸ்திரம், இறக்கம், வரவு, செலவு என கலவையான பலன்கள் இருக்கும். ராசிநாதன் செவ்வாய் வருட ஆரம்பத்தில் ஆட்சி உச்சம் என யோகமாக சஞ்சரிப்பதால் எங்கும் எதிலும் வெற்றி பெறுவீர்கள். பிப்ரவரி மாதம் முழுக்க சுக்கிரன் உச்சமாக இருப்பதால் பெண்களால் மகிழ்ச்சி, ஆதாயம் உண்டு. வெளிநாட்டில் இருக்கும் மகனின் அழைப்பை ஏற்று அங்கு சென்று மாதக்கணக்கில் தங்குவீர்கள். சனி மூன்றாம் வீட்டில் ஆட்சி பெறுவதால் பல வகைகளில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமாக பலவிதமான மாற்றங்களை செய்வீர்கள். பிள்ளைகள் மூலம் பெருமை அடைவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும்.

பணம் - குடும்பம் - வாக்கு
பொருளாதாரம் சாதகமாக இருக்கும். பணம் புரளும். சனி மாற்றம், குரு அமைப்பு காரணமாக வராத கடன் வசூலாகும். வருமானத்தை அதிகரிக்கும் முயற்சிகள் பலன் தரும். சுபவிசேஷங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடரும். மகனுக்கு வெளிமாநிலம், வெளிநாட்டில் வேலை கிடைக்கும். அதன் காரணமாக அவர்களைப் பிரிய வேண்டிய கட்டாயம் உண்டு. அதிக வட்டிக்கு வாங்கிய கடனை அடைப்பீர்கள். நெருங்கிய உறவுகளிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். ஒருவரையொருவர் புரிந்துகொண்டு சந்தோஷமாக இணைவீர்கள். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். அதன்மூலம் நெருக்கம் கூடும். புதிய நட்பு காரணமாக நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும்.

ஆரோக்கியம் - சொத்து - சுகம்
உடல்நலம், மனநலம் நன்றாக இருக்கும். சனி பகவானின் அமைப்பு காரணமாக தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு குழப்பம் அடைந்தீர்கள். இனிவரும் நாட்களில் தெளிவடைவீர்கள். யோக காலகட்டம் ஆரம்பம். மருத்துவச் செலவுகள் படிப்படியாகக் குறையும். நீண்டநாள் தொடர் சிகிச்சையில் இருப்பவர்கள் படிப்படியாக நலம் அடைவார்கள். வசதி குறைவான வீட்டில் இருப்பவர்கள் நல்ல விசாலமான வீட்டிற்கு குடிபோவீர்கள். நான்கு சக்கர வண்டி வாங்க வேண்டும் என்ற நீண்டநாள் ஆசை நிறைவேறும். சொத்து சம்பந்தமாக இருந்த வழக்குகள் சாதகமாக முடியும். பூர்வீகச் சொத்தை முக்கிய பகுதியில் ஆடம்பரமான ஃபிளாட் வாங்குவீர்கள். குரு ஆறாம் வீட்டை பார்ப்பதால் அடமானத்தில் இருக்கும் நகைகளை மீட்பீர்கள்.

பெண்கள்:  குடும்பத்தில் இருந்துவந்த பல வகையான பிரச்னைகள் முடிவுக்கு வரும். பிள்ளைகள் உங்களைப் புரிந்துகொண்டு பாசம் காட்டுவார்கள். அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். தாய் வீட்டில் இருந்து எல்லா வகையிலும் ஆதரவு உதவி கிடைக்கும். நாத்தனார் உறவுகளிடையே இருந்துவந்த மனக்கசப்புக்கள் நீங்கும். இருவரும் சந்தோஷமாக சேருவீர்கள். மகள் பிரசவ சம்பந்தமாக அலைச்சல், மருத்துவச் செலவுகள் ஏற்படும். மாணவிகள் மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது. கணவர் வீட்டில் இருந்து வரவேண்டிய ெசாத்து  சம்பந்தமாக ஒருமித்த கருத்து உண்டாகும். சகோதர உறவுகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதால் சொத்து விற்பனை சாதகமாக முடியும். அரசு மற்றும் வங்கியில் பணிபுரிபவர்களுக்குச் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள்:
சனி மாற்றம் காரணமாக பல நல்ல மாற்றங்கள் உங்களுக்கு வரப்போகிறது. குடும்பத்தைப் பிரிந்து வெளியூரில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் சொந்த ஊருக்கு மாற்றல் பெற்று வருவார்கள். வேலைச்சுமை, அலைச்சல், பயணங்கள் படிப்படியாக நீங்கும். புதிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும் யோகம் உள்ளது. அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்குள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். தொழிற்சங்க வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். கம்ப்யூட்டர் துறையில் இருப்பவர்களுக்குச் சம்பள வகையில் பிரச்னைகள் வரலாம். வருட மத்தியில் நிலைமை சீராகும். குரு பார்வை காரணமாக ஆசிரியர்கள், வங்கி ஊழியர்களுக்கு சாதகமான நிலை இருக்கும். எதிர்பார்த்த லோன் பிப்ரவரி மாதம் கைக்கு வரும்.

அரசியல் - கலைத்துறை:
சனி மாற்றம், குரு ஆட்சி என சாதகமான கிரக அமைப்புக்கள் இருப்பதால் எதிர்ப்புக்கள், தடைகள் நீங்கி உங்கள் குறிக்கோள்கள் நிறைவேறும். பொதுக்கூட்டங்கள், மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி நன்மதிப்பை பெறுவீர்கள். தலைமையுடன் நெருக்கமாவீர்கள். கட்சி அமைக்கும் குழுவில் முக்கிய இடம் பிடிப்பீர்கள். கோஷ்டி பூசல்களை கடந்து வெற்றிநடை போடுவீர்கள். கலைத்துறையினருக்கு சாதகமான காற்று வீசும். சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் யோகம் உள்ளது. நகைச்சுவை காட்சிகளில் நடித்து அதிக பிரபலமடைவீர்கள். டைரக்‌ஷன் துறையில் இருப்பவர்களுக்கு பதக்கம், விருது கிடைக்கும். அரசியல், தொழில் அதிபர்கள் தொடர்பு காரணமாக சொந்தமாக படம் தயாரித்து வெளியிடுவீர்கள்.

தொழில் - வியாபாரம் - விவசாயம்
தொழில் சாதகமாக நடக்கும். சனி மாற்றம் காரணமாக தடைகள், போட்டிகள் நீங்கும். மொத்தமாக கொள்முதல் செய்து குறைந்த லாபத்தில் அதிக வியாபாரம் செய்வீர்கள். அதனால் பிரபலம் அடைவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் நிறைய வருவார்கள். குரு ஆட்சியாக இருப்பதால் செல்வாக்கு உயரும். வியாபாரிகள் மத்தியில் புகழ் பெறுவீர்கள். ஆங்கில மருந்துக்கடை, சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற மருந்துகள் விற்பனை செய்பவர்கள் நல்ல பயனடைவார்கள். ரெடிமேட் துணிகள், உள்ளாடைகள் போன்றவற்றில் அதிக லாபம் பார்க்கலாம். கேது 2-ல் இருப்பதால் பணம், கொடுக்கல், வாங்கலில் அதிக கவனம் தேவை. வங்கியில் பணம் கட்டும்போது நன்கு சரிபார்த்து கட்டவும். விவசாயம் சீராக இருக்கும். இயற்கை சீதோஷ்ண நிலை சாதகமாக இருக்கும். கிணற்றில் தண்ணீர் வற்றாமல் ஊற்று பெருக்கெடுக்கும். காய்கறிகள், கீரை வகைகளால் லாபம் அடைவீர்கள். குத்தகை, காண்ட்ராக்ட் எடுத்த வகையில் நல்ல விளைச்சலும் லாபமும் கிடைக்கும்.

பரிகாரம்: தினசரி தேவாரம், திருவாசகப் பாடல்களை படிக்கலாம், கேட்கலாம். தேய்பிறை அஷ்டமி அன்று பைரவருக்கு நெய் விளக்கேற்றி வழிபடலாம். கண் பார்வையற்றோர், தொழு நோயாளிகளுக்கு உதவலாம்.

தனுசு
குருவின் அம்சம் பெற்ற தனுசு ராசி அன்பர்களே! இந்த ஆண்டு உங்களுக்கு பல வகைகளில் நன்மைகள் நடக்கும், ராசிநாதன் ஆட்சி பலத்துடன் இருப்பதால் அது நடக்காதா, இது கிடைக்காதா என்று ஏங்கித்தவித்தவர்களின் ஏக்கங்கள் நிறைவேறும். ஜென்மச் சனி நீங்கி தனஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்று அமரப்போகும் சனிபகவான் சாதகமான மாற்றங்கள் தருவார். இதுவரை நீங்கள் பெற்ற அனுபவங்கள் உங்களுக்கு நல்ல வழிகாட்டியாக அமையும். தந்தையின் பேச்சை கேட்டு நடப்பது மிகவும் அவசியமாகும். பிப்ரவரி 9-ஆம் தேதி வரை செவ்வாய் ஆட்சியாகவும், சுக்கிரன் உச்சமாகவும் இருப்பதால் அடிப்படை வசதி வாய்ப்புக்கள் பெருகும். குடும்பத்தில் மனநிறைவு, சந்தோஷம் இருக்கும். செப்டம்பர் மாதம் ராகு, கேது பிடியில் இருந்து விடுபடுவீர்கள். அதன்பிறகு அதிர்ஷ்டக் காற்று உங்களுக்கு சாதகமாக வீசும்.

பணம் - குடும்பம் - வாக்கு
செவ்வாய், சனி அமைப்பு காரணமாக பொருளாதாரத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வரவேண்டிய வட்டி, வாடகை, குத்தகை பணம் கைக்கு வரும். பிள்ளைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். ஆட்சி பெற்ற சனி நல்ல வாய்ப்புக்கள், சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி தருவார். சொன்ன வாக்கை எப்படியும் நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தினர் உங்களைப் புரிந்துகொண்டு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். அவசர தேவைக்காக வாங்கிய கடனை அடைப்பீர்கள். வசதி படைத்த நண்பரின் உதவி கிடைக்கும். பகுதி நேர வேலை அல்லது தொழில் மூலம் உபரி வருமானம் வரும். சொந்த பந்தங்களின் குடும்ப விஷயங்களில் பட்டும் படாமலும் இருப்பது நல்லது. அதனால் சில சங்கடங்களைத் தவிர்க்க முடியும்.

ஆரோக்கியம் - சொத்து - சுகம்
அடிக்கடி உடல்நலக் கோளாறுகள் காரணமாக மருத்துவமனை, ஸ்கேன் சென்டர் என அலைந்து கொண்டிருப்பவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். படிப்படியாக உடல் ஆரோக்கியம், மனஅமைதி கிடைக்கும். சனி மாற்றம் காரணமாக வீண் செலவுகள் குறையும். கண் பார்வை சம்பந்தமாக கண்ணாடி அணிய வேண்டி வரும். கண் புரைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரலாம். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக சமாதான பேச்சுக்கள் அனுகூலமாக முடியும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பாகம் சொத்தாகவோ, பணமாகவோ கைக்கு வரும். ஒரு சொத்தை விற்று இன்னொரு சொத்து வாங்குவீர்கள். நிலம், ஃபிளாட் வாங்கும்போது அரசாங்க சட்ட திட்டங்களின்படி சரியாக இருக்கிறதா என்பதை தீர விசாரித்து வாங்கவும். ராகு 7-ல் இருப்பதால் நீங்கள் ஏமாற்றப்பட வாய்ப்பு உள்ளது.பெண்கள் அலைச்சல், மனஉளைச்சல், மறதி, வீண்பழி போன்றவை நீங்கும். ராசிநாதன் குரு ஆட்சி பெற்று யோகஸ்தானங்களை பார்ப்பதால் கன்னிப் பெண்களின் கல்யாண கனவுகள் நனவாகும். நல்ல கணவர் அமைவார். தாய், தந்தை நெருங்கிய உறவுகளின் பாச மழையில் நனைவீர்கள். மகன், மகளுக்கு எதிர்பார்த்த பள்ளி, கல்லூரியில் சிறிய முயற்சியின்பேரில் இடம் கிடைக்கும். இளம் பெண்களின் இருசக்கர வாகன ஆசை நிறைவேறும். கணவருக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு, சிறப்பு சலுகைகள் கிடைக்கும். தோழிகளுடன் உங்கள் நெருக்கத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. நகை இரவல் கொடுப்பது, கவர்ச்சித் திட்டங்கள், ஃபண்டு போன்றவற்றில் இருந்து விலகி இருப்பது நலம் தரும். கணவர் வகை உறவுகளிடையே இருந்த மனக்கசப்புக்கள் நீங்கும். நல்லுறவு மலரும்.

உத்தியோகஸ்தர்கள் உத்தியோக வகையில் இதுநாள்வரை இருந்து வந்த பிரச்னைகள் கொஞ்சம், கொஞ்சமாக விலகும். இடம் மாற்றம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு பிப்ரவரி மாதம் மாற்றல் கிடைக்கும். தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். முதலாளியுடன் நேரடி தொடர்பு ஏற்படும். வெளிமாநிலத்தில் வேலை தேடியவர்களுக்கு தகுதியான வேலை அமையும். அரசு ஊழியர்களுக்கு தள்ளிப்போய்க்கொண்டிருக்கும் பதவி உயர்வு பற்றி நல்ல செய்தி வரும். வெளியூர் மாற்றமும் இருக்கலாம். ராகு, கேது அமைப்பு காரணமாக சில பிரச்னைகள், நெருக்கடிகள் வரலாம். ஆகையால் பணியில் கவனமாக இருப்பது நல்லது. சக ஊழியர்களுடன் அலுவலக விஷயங்கள் மற்றும் உயர் அதிகாரிகளை பற்றி விமர்சனம் செய்யாதீர்கள்.

அரசியல் - கலைத்துறை:
அரசியல்வாதிகளுக்கு நல்ல வாய்ப்புக்கள் தேடி வரும். கோஷ்டிப்பூசலில் பல பிரச்னைகளை சந்தித்தவர்களுக்கு அதிலிருந்து நிவாரணம் கிடைக்கும். மேல் மட்டத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். செவ்வாய் சாதகமான ராசிகளில் செல்வதால் செல்வாக்கு உயரும். M.P., M.L.A.-க்களின் சிபாரிசு கிடைக்கும். தசாபுக்தி சாதகமாக இருப்பவர்களுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். கலைத்துறையினருக்கு சீரான முன்னேற்றம் உண்டு. மூத்த கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும். புதன் பலமாக இருப்பவர்களுக்கு படம் வாங்கி  வெளியிடுவதில் நல்ல லாபம் வரும். நகைச்சுவை பாத்திரத்தில் நடித்து புகழ் பெறும் யோகம் உள்ளது. நாட்டுப்புற இசைக்கலைஞர்கள், பரத நாட்டியக் கலைஞர்கள் வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி நல்ல புகழும், பணமும் பெறுவார்கள்.

தொழில் - வியாபாரம் - விவசாயம்
சுயதொழில் செய்பவர்கள், சிறிய அளவிலான காண்ட்ராக்ட் எடுப்பவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். கமிஷன் வியாபாரம் லாபகரமாக நடக்கும். வேலையாட்கள் விஷயத்தில் சில பிரச்னைகள் வரலாம். வெளிமாநிலத்தவரை வேலையில் சேர்க்கும்போது கவனம் தேவை. ராகு ஏழில் இருப்பதால் சில பஞ்சாயத்துக்கள், போலீஸ் என விவகாரங்கள் வரலாம். கூட்டுத்தொழில் செய்பவர்கள் விட்டுக்கொடுத்துப் போவது அவசியம். சனி, குரு அமைப்பு காரணமாக கூட்டுத்தொழிலில் இருந்து விலகி சொந்தமாக தனித் தொழில் தொடங்கும் யோகமுண்டு. பேப்பர், அட்டை, பிரிண்டிங்பிரஸ், புத்தகத்தொழில், பதிப்பகத்தொழில் ஆகியவற்றில் கூடுதல் வருமானம் வரும். விவசாயம் கை கொடுக்கும். வங்கிக்கடன் மூலம் புதிய டிராக்டர், ஜெனரேட்டர், பம்ப் செட் வாங்குவீர்கள். மரம் வெட்டும் காண்ட்ராக்ட்டில் லாபம் குவியும். ஊடுபயிர் விவசாயம் கூடுதல் வருமானத்தை தரும். கிழங்கு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிடுவதால் நல்ல லாபம் பார்க்கலாம்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை புற்றுள்ள அம்மன் தலங்களுக்குச் சென்று வழிபடலாம். அமாவாசையன்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். பாரம் சுமப்போர், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உதவலாம்.

மகரம்

சனி அம்சத்தில் பிறந்த மகர ராசி அன்பர்களே! இந்த ஆண்டு உங்களுக்கு அமோகமாகவும், அதிர்ஷ்டகரமாகவும் அமையும். எண்ணங்கள், ஏக்கங்கள் முழுமையாக நிறைவேறும். உங்கள் ராசிநாதன் சனி அருளால் சொத்து அமையவில்லையே, வீட்டை கட்ட முடியவில்லையே என்ற கவலை நீங்கும். முக்கியமான பகுதியில் பிரமாதமாக வீட்டை கட்டி கிரஹப்பிரவேசம் செய்வீர்கள். குரு 12-ல் ஆட்சி பெற்று இருப்பதால் அடுத்தடுத்து சுபவிசேஷங்களையும், சுபவிரயங்களையும் ஏற்படுத்துவார். ராகு 6-ல் தொடர்வதால் வரவேண்டிய பெரிய தொகை ஏப்ரல் மாதத்திற்குள் கைக்கு வரும். செல்வாக்கு உயரும், சொந்த பந்தங்கள் மத்தியில் புகழடைவீர்கள். குடும்பத்துடன் வெளிமாநிலத்தில் உள்ள மிக பிரசித்தி பெற்ற கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்வீர்கள்.

பணம் - குடும்பம் - வாக்கு
இரண்டாம் இடம், குரு, சனி, ராகு ஆகிய கிரகங்கள் உங்களுக்கு யோகங்களை வாரி வழங்குவார்கள்.  அவசிய, அநாவசிய, மருத்துவச் செலவுகள் பெருமளவு குறையும். பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருதி புதிய திட்டங்கள், முதலீடுகள் செய்வீர்கள். குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு உல்லாசப் பயணம் செய்கின்ற வாய்ப்பு அமையும். மகனுக்கு அங்கும் இங்கும் பெண் தேடி அலைந்தவர்களுக்கு எதிர்பாராத விதமாக சொந்தத்திலேயே பெண் அமையும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் தங்க, வைர நவரத்தின ஆபரணங்கள் வாங்குவீர்கள். வருமானத்தைப் பெருக்குவதற்கான முயற்சிகள் நல்லபடியாக கூடிவரும். குடும்ப விஷயங்களை ரகசியமாக வைப்பது அவசியம். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபடுவீர்கள். நேர்த்திக்கடன்கள், முடிந்து வைத்திருந்த காணிக்கையை செலுத்துவீர்கள்.

ஆரோக்கியம் - சொத்து - சுகம்
அலைச்சல், பயணங்கள், வீண் செலவுகள் காரணமாக மனஉளைச்சல், நிம்மதி இல்லாத நிலை இருந்தது, அதன் காரணமாக அடிக்கடி உடல்நலக்கோளாறுகள் ஏற்பட்டது. இனிமேல் அதிலிருந்து விடுபடுவீர்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்புவார்கள். சர்க்கரை ரத்த அழுத்தம், தைராய்டு போன்ற பரிசோதனைகளை செய்து சரிபார்த்துக்கொள்வது நல்லது. குரு பார்வை, ராசிநாதன் சனி ஆட்சி பலம் காரணமாக புதிய தெம்புடன் உத்வேகமாக செயல்படுவீர்கள். மனநலம் சிறப்பாக இருப்பதால் முகத்தில் தேஜஸ் கூடும். நிலம், தோட்டம் வாங்க இடம் பார்த்தவர்களுக்கு நல்ல இடம் அமையும். இழுபறியாக இழுத்தடித்துக் கொண்டிருக்கும் விஷயங்களுக்கெல்லாம் நல்ல விடிவு காலம் பிறக்கும்.

பெண்கள்: ராசிநாதன் சனி பலம் பெறுவதால் உற்சாகமாக செயல்படுவீர்கள். பிள்ளைகள் உங்களைப் புரிந்துகொண்டு பாசம் காட்டுவார்கள். வேலை விஷயமாக பிரிந்து வெளியூரில் பணியாற்றி வந்த கணவருக்கு பணி மாறுதல் கிடைக்கும். குடும்பத்துடன் ஒன்று சேருவார். இதனால் நிம்மதியும், மகிழ்ச்சியும் இருக்கும். தேவையற்ற பயணங்கள், அநாவசிய செலவுகள் நீங்கும். பேரன், பேத்திகளுக்கு முடி இறக்கி, காது குத்தும் விழாவை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மகளுக்கு எதிர்பார்த்த கல்லூரியில் சேருவதற்கு இடம் கிடைக்கும். மாமனார் உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. நெருங்கிய உறவுகளிடையே வட்டிக்கு பணம் கொடுப்பது, வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. சகோதரியின் திருமணத்தை முன்நின்று நடத்துவீர்கள். இதனால் அலைச்சல், மொய்ப்பணம், விருந்து, பரிசுகள் என செலவுகள் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான மாற்றங்கள் உண்டாகும். சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்வது நலம் தரும். வெளிநாட்டில் வேலை தேடியவர்களுக்கு நல்ல வேலை அமையும். கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் 6 மாதம் அல்லது 1 வருட காண்ட்ராக்ட்டில் அயல்நாடு சென்று பணிபுரிவார்கள். தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் வேறு பெரிய நிறுவனத்திற்கு மாறுவார்கள். அரசு ஊழியர்களுக்குச் சாதகமான நிலை இருக்கும். எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும். தொழிற்சங்கத்தில் பதவி கிடைக்கும். வேலை வாங்கித்தருகிறேன் என்று சொல்லும் இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுக்க வேண்டாம். ஏமாற்றப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

அரசியல் - கலைத்துறை
கட்சியில் உங்கள் கை ஓங்கும். உங்களுக்கு எதிராக சதி திட்டம் தீட்டியவர்கள் தோல்வி அடைவார்கள். மக்கள் பிரச்னைகளை முன்நின்று முடித்துக்கொடுப்பீர்கள். இதனால் தொகுதியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சனி, குரு அனுகூலமாக இருப்பதால் கௌரவ பதவிகள் கிடைக்கும். கோயில் நிர்வாகக்குழுவில் இடம் பிடிப்பீர்கள். வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் தேடி வரும். கர்நாடக இசைத்துறையில் இருப்பவர்களுக்கு வெளிநாட்டில் கச்சேரி செய்யும் வாய்ப்பு கிடைக்கும். தவில், நாதஸ்வர வித்வான்களுக்கு பாராட்டு, விருது, பட்டம் கிடைக்கும். சீரியல் தொடர்கள் தயாரிப்பாளர்கள் நல்ல புகழும், பணமும் பார்ப்பார்கள்.

தொழில் - வியாபாரம் - விவசாயம்
தொழில் லாபகரமாக நடக்கும். புதிய தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும் என்றாலும் முதலீடுகளில் கவனம் தேவை. வட்டிக்கு வாங்கி முதலீடுகள் செய்யும்போது கணக்கு போட்டு இறங்கவும். கேது 12-ல் இருப்பதால்  அலைச்சல், லாபத்தில் நஷ்டம் வரலாம். பங்குச்சந்தையில் சாதகமான நிலை இருக்கும். புதன், சுக்கிரன் உங்களுக்கு எதிர்பாராத ஏற்றத்தைக் கொடுப்பார்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த தேக்க நிலை நீங்கும். கடன், பாக்கிகள் வசூலாகும். சீட்டு பிடிப்பது, ஃபைனான்ஸ் கொடுக்கும் தொழில் சீராக இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வெள்ளி வியாபாரம், பித்தளை, எவர்சில்வர் பாத்திர வியாபாரம் கை கொடுக்கும். வியாபார நிமித்தமான பயணங்கள் லாபகரமாக அமையும். விவசாயம் சீராக இருக்கும். நெல், கரும்பு, வாழை இலை வகையில் நல்ல லாபம் கிடைக்கும். பூக்கள் விவசாயம் சாதகமாக இருக்கும். தென்னந்தோப்பு, மாந்தோப்பில் விளைச்சல் அதிகம் இருக்கும். அரசாங்கத்தில் இருந்து உதவிகள், கடன் தள்ளுபடி கிடைக்கும். வேலையாட்கள் பிரச்னை இருந்தாலும் பாதிப்பு இருக்காது.

பரிகாரம்: தினசரி கந்த சஷ்டி கவசம் படிக்கலாம். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசி மாலை, வடை மாலை அணிவித்து பிரார்த்திக்கலாம். பக்தர்களுக்கு வெண்பொங்கலை பிரசாதமாகத் தரலாம்.
கும்பம்
சனி அம்சத்தில் பிறந்த கும்ப ராசி அன்பர்களே! இந்த வருடம் பல ஏற்றங்கள், மாற்றங்கள், அலைச்சல், அதிக பயணங்கள் என கலவையான பலன்கள் உடைய ஆண்டாக அமையும். பல அனுபவங்கள் காரணமாக நல்ல பக்குவம் அடைவீர்கள். ராசிநாதன் சனி கேதுவின் சேர்க்கையில் இருந்து விலகி மகர ராசியில்  ஆட்சி பலம் பெறுவதால் உங்கள் எண்ணங்கள், விருப்பங்கள் நிறைவேறும். அவரவர்கள் வயதிற்கேற்ப பலன்கள் இருக்கும். உயர்கல்வி சம்பந்தமாக மாணவ, மாணவிகள் வெளிநாடு சென்று படிக்கும் யோகம் உண்டு. நடுத்தர வயதுடையவர்களுக்கு வாழ்க்கையில் பிற்கால யோகத்திற்கான அடித்தளம் அமையும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த குடியுரிமை சான்றிதழ் கைக்கு வரும்.

பணம் - குடும்பம் - வாக்கு
தனம், குடும்பம், வாக்கு ஸ்தானாதிபதி குரு ஆட்சி பெற்று இருப்பதால் தடைகள் நீங்கும். கொடுக்கல், வாங்கல் மூலம் நின்றுபோன பெரிய தொகை அசல் வட்டியுடன் வசூலாகும். வருமானத்தை உயர்த்தும் முயற்சிகள் வெற்றியடையும். மாமன் வகை உறவுகளால் மகிழ்ச்சி, ஆதாயம் வரும். சுக்கிரன் சாதகமான ஸ்தானங்களில் செல்வதால் இல்லறம் இனிக்கும். மனைவிக்கு தங்க நகைகள் வாங்கி பரிசளிப்பீர்கள். ஏப்ரல் மாதத்திற்கு மேல் வெளிநாட்டில் இருக்கும் மகள் வீட்டிற்குச் சென்று வருவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். புதனின் அமைப்பு காரணமாக போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். மகனுக்கு பெரிய நிறுவனத்தில் நல்ல சம்பளம் மற்றும் சலுகைகளுடன் வேலை கிடைக்கும்.

ஆரோக்கியம் - சொத்து - சுகம்
சனி பகவான் பூரண பலத்துடன் இருப்பதால்  உடல்நலம், மனநலம் நன்றாக இருக்கும். புதிய உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். மூட்டுவலி, கழுத்து வலி, நீர்க்கட்டு போன்றவற்றால் அவதிப்பட்டவர்கள் படிப்படியாகக் குணம் அடைவார்கள். கண் பார்வைக் குறைபாடுகள் வரும். கண்ணாடி அணிய வேண்டி இருக்கும். கண்புரைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். சொத்து சம்பந்தமான வழக்கில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். காலியாக இருக்கும் பிளாட்டிற்கு புதிய வாடகைதாரர்கள் வருவார்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். அதனால் அடமானத்தில் இருக்கும் நிலம் அல்லது வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். ஆகஸ்ட் மாதத்திற்குமேல் ராகு நான்காம் வீட்டிற்கு பெயர்ச்சி அடையவதால் திடீர் இடமாற்றம் வரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

பெண்கள்: மனக்குறைகள், மறதி, சோர்வு நீங்கி சந்தோஷமாக இருப்பீர்கள். கணவருக்கு எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும். சம்பளம், சலுகைகள் அதிகரிக்கும். பழைய டிசைன் நகைகளை மாற்றி புது டிசைன் நகைகள் வாங்குவீர்கள். மாமியாரின் உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. சிறிய கோளாறுகளை அலட்சியம் செய்யாமல் உடனுக்குடன் மருத்துவரைப் பார்ப்பது நல்லது. கன்னிப்பெண்களுக்கு தோஷங்கள், தடைகள் நீங்கி வசதியான மாப்பிள்ளை அமைவார். தாய் வீட்டில் இருந்து வரவேண்டிய பங்கு பணம், நகைகள் ஏப்ரல் மாதத்திற்குள் கைக்கு வரும். மருமகள் கர்ப்பம் அடைந்த இனிக்கும் செய்தி வரும். அதனால் குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். சமையலறைக்குத் தேவையான மிக்ஸி, கிரைண்டர் போன்ற மின்சாதனங்கள் வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள்:
உத்தியோகத்தில் சாதகமான சூழ்நிலைகள் இருக்கும். வேலைச்சுமை படிப்படியாக குறையும். ஊக்கத்தொகை, நிலுவைத் தொகைகள் கைக்கு வரும். பகுதி நேர வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு நல்ல மாற்றங்கள் இருக்கும். உங்களுக்கு ஒத்து வராத உயர் அதிகாரி மாற்றல் ஆகிச் செல்வார். அதனால் உங்களுக்கு மனநிம்மதி கிடைக்கும். வங்கியில் பணிபுரிபவர்களுக்கு திடீர் பதவி உயர்வுக்கு யோகமுண்டு. கம்ப்யூட்டர் துறையில் இருப்பவர்களுக்கு வெளிமாநிலத்தில் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வேலை சம்பந்தமான மேல் முறையீட்டு வழக்கில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும். அதனால் பிடித்தம் செயப்பட்ட பணம் முழுவதும் கைக்கு வரும்.

அரசியல் - கலைத்துறை:
குரு, சனி அமைப்பு காரணமாக புதிய உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் கூடவே இருந்து குழி பறிப்பவர்களை அடையாளம் கண்டு ஒதுக்குவீர்கள். தொழிற்சங்கப் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்படுவீர்கள். கட்சியில் செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்படுவீர்கள். அதனால் தலைமையிடம் நெருக்கம் அதிகரிக்கும். பொதுக்கூட்டங்கள் நடத்தி மக்கள்நலத் திட்ட உதவிகளை வழங்குவீர்கள். அதனால் செல்வாக்கு, புகழ் அதிகரிக்கும். சினிமா, சின்னத்திரை கலைஞர்களுக்கு சாதகமான காற்று வீசும். படநிறுவனத்தில் இருந்து வரவேண்டிய சம்பள பாக்கி கைவந்து சேரும். விளம்பரப் படங்களில் நடிப்பதற்காகத் தேர்வு செய்யப்படுவீர்கள். நகைச்சுவை கலைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று நிகழ்ச்சிகள் நடத்தி நல்ல பணம் பார்ப்பார்கள்.

தொழில் - வியாபாரம் - விவசாயம்
வியாபாரம் கை கொடுக்கும். புதிய ஏஜென்சிகள் எடுத்து வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். மொத்த வியாபாரம் செய்யும் பெரிய நிறுவனங்களின் ஆதரவு கிடைக்கும். நல்ல அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். புதிய கிளைகள் தொடங்கும் பாக்கியம் உள்ளது. வங்கியிலிருந்து எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். மின்சார சம்பந்தமான காண்ட்ராக்ட் வேலைகளில் நல்ல ஆதாயம் வரும். செங்கல், மணல், சிமென்ட், ஜல்லி போன்ற வியாபாரங்கள் லாபகரமாக நடக்கும். பெரிய கட்டுமான நிறுவனத்திடம் இருந்து பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். பங்கு மார்க்கெட் தொழிலில் திடீர் தனயோகத்திற்கு வாய்ப்புள்ளது. விவசாயம் சீராக இருக்கும். காய்கறிகள், கீரை, கிழங்கு வகை விவசாயம் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பருத்தி,  சூரியகாந்தி, மக்காச்சோளம் பயிர் வகைகள் கை கொடுக்கும். தினை, கேழ்வரகு, சாமை, வரகு போன்ற தானியங்கள் சாகுபடியில் நல்ல ஆதாயம் வரும். நோய்த்தொற்று, பூச்சித்தாக்குதல் காரணமாக மருந்து அடிக்க வேண்டி வரும். அதனால் செலவுகள் கூடும்.

பரிகாரம்: தினமும் விஷ்ணு ஸஹஸ்ர நாமம் படிக்கலாம், கேட்கலாம். புதன்கிழமை பெருமாள், தாயாரை தரிசித்து பிரார்த்திக்கலாம். உடல் ஊனமுற்றோர், வாய் பேசாதோர், இயலாதோருக்கு ஆடை, போர்வை தானம் தரலாம்.

 மீனம்
குரு ஆதிக்கம் பெற்ற மீன ராசி அன்பர்களே! இந்த ஆண்டு உங்களுக்கு ஓர் வரப்பிரசாதமாகும். செல்வாக்கு, பெயர், புகழ் அடைவீர்கள். ராசிநாதன் குரு ஆட்சி பெற்று இருப்பதால் உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் தயவு, உதவி நாடி வருவார்கள். தடைபட்ட விஷயங்கள் எல்லாம் தானாக கூடிவரும். ராசிநாதன் சனி லாபஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்வதால் உயர் உச்ச பதவியில் இருப்பவர்களின் அறிமுகமும், ஆதரவும் கிடைக்கும். குழப்பம், தடுமாற்றம், அவநம்பிக்கை நீங்கும். ஆன்மிக விஷயத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சொந்த ஊரில் உள்ள கோயில் திருப்பணிகளை தலைமை ஏற்றுச் செய்வீர்கள். விளையாட்டுத் துறையில் இருப்பவர்கள் எதிர்பாராத சாதனைகள் செய்வார்கள். எல்லா மட்டத்திலும் பெயர், புகழ் அடைவீர்கள்.

பணம் - குடும்பம் - வாக்கு
குரு, செவ்வாய், சனி அமைப்பு காரணமாக குடும்பத்தில் அமைதி, ஆனந்தம் இருக்கும். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு பாசம், பரிவு காட்டுவீர்கள். கடனாகவும், கைமாத்தாகவும் கொடுத்த பணம் வசூலாகும். அவசரத்தேவைக்காக வாங்கிய கடனை அடைப்பீர்கள். ராகு 4-ல் தொடர்வதால் தாய்வழி உறவுகளால் சில சங்கடங்கள், வருத்தங்கள் இருக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் திடீர் அவசிய காரணங்களுக்காக சொந்த ஊர் திரும்புவார்கள். மகள், மாப்பிள்ளை இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அதனால் மனநிம்மதி அடைவீர்கள். தசா புக்தி சாதகமாக இருப்பவர்கள் சொந்தமாக ஃபிளாட் வாங்கி பால் காய்ச்சும் பாக்கியம் உள்ளது.

ஆரோக்கியம் - சொத்து - சுகம்
உடல்நலம், மனநலம் காரணமாக விரக்தி, சிந்தனை என இருப்பவர்கள் நல்ல குணமடைவார்கள். சுகஸ்தானத்தில் ராகு இருப்பதும் சில கிரகங்களின் பார்வை காரணமாகவும் அலைச்சலும், மருத்துவச் செலவுகளும் ஏற்பட்டது. இனி அதில் இருந்து மீள்வீர்கள். குரு பார்வை காரணமாக எல்லாம் சரியாகும். கர்ப்பமாக இருப்பவர்கள் உரிய கவனத்துடன் இருப்பது அவசியமாகும். சொத்து சம்பந்தமாக இதுவரை தொடர்ந்துகொண்டிருக்கும் பிரச்னைகள் முடிவுக்கு வரும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக பங்குதாரர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படும். சொத்துக்களை மாற்றி அமைப்பீர்கள். சொந்த ஊரில் இருக்கும் நிலத்தை விற்று வீடு கட்டுவீர்கள். ஆகஸ்ட் மாதத்திற்குமேல் உயில் சொத்து, தான சொத்து, உழைப்பில்லாத செல்வம் சேரும்.

பெண்கள்: பெண்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கும். கன்னிப்பெண்களுக்கு கல்யாண ராசி உள்ளது. வசதியான மாப்பிள்ளை அமைவார். மாமியார், நாத்தனார் வகையில் இருந்துவந்த பனிப்போர் நீங்கும். குடும்ப விசேஷம் காரணமாக சந்தோஷமாக ஒன்றுகூடி மகிழ்வீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள் விருப்ப ஓய்வு பெறுவது பற்றி சிந்திப்பீர்கள். தாய் வீட்டில் இருந்து உங்கள் பங்காக பணம், நகை கிடைக்கும். அதனால் மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவியிடையே நெருக்கம் கூடும். இல்லறம் இனிக்கும். வைரத்தோடு, மூக்குத்தி, நவரத்தின மோதிரம் வாங்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறும். பிள்ளைகள் எதிர்காலம் கருதி அவர்கள் பெயரில் புறநகரில் ஃபிளாட், நிலம் வாங்கிப் போடுவீர்கள். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களுக்கு இறைவனருளால் கர்ப்பம் அடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள்
சனி, ராகு, கேது அமைப்பு காரணமாக அலுவலகத்தில் வேலைச்சுமை, பயணங்கள், அலைச்சல் என பல வகைகளில் அல்லல்பட்டீர்கள். இனி படிப்படியாக பிரச்னைகள் நீங்கும். புதிய வேலையில் சேருவதற்கான நேரம் காலம் கூடிவந்துள்ளது. அயல் நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் தகுதியான வேலை கிடைக்கும். அரசாங்க ஊழியர்கள் சாதகமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம். நீங்கள் கேட்ட இடத்திற்கு இட மாற்றம் கிடைக்கும். லோன் சம்பந்தமாக ஆர்டர் கைக்கு வரும். பணி இடை நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வேலையில் சேருவீர்கள். அதிகாரிகள், சக ஊழியர்கள் பற்றித் தேவையில்லாத விமர்சனங்கள் செய்யாதீர்கள்.

அரசியல் - கலைத்துறை:
குரு பார்வை காரணமாக செல்வாக்கு உயரும். கோஷ்டிப் பூசல்களைக் கடந்து வெற்றிநடை போடுவீர்கள். அரசுஉயர்மட்டக்குழுவில் இடம் பிடிப்பீர்கள். வாரியத்தலைவர் பதவி கிடைப்பதற்கான யோகம் உள்ளது. வெற்றிஸ்தானத்தில் உள்ள சனிபகவான் உங்களுக்கு அந்த பாக்கியத்தை அருள்வார். தொண்டர்களை அனுசரித்துச் செல்வதால் மதிப்பு கூடும். தொகுதிக்குத் தேவையான அரசாங்கத் திட்டங்களை திறமையாகப் பேசி செயல்படுத்துவீர்கள். கலைத்துறையினருக்கு சாதகமான நிலை இருக்கும். புதிய வாய்ப்புக்கள் பெறுவீர்கள். கர்நாடக இசைக்கலைஞர்களுக்கு வானொலி, தொலைக்காட்சியில் உங்கள் தகுதிக்கேற்ப வாய்ப்புக்கள் கிடைக்கும். நகைச்சுவை, மிமிக்ரி கலைஞர்களுக்கு தனியார் டி.வி. சேனல்களில் தொடர் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஒப்பந்தம் செய்யப்படுவீர்கள்.

தொழில் - வியாபாரம் - விவசாயம்
வியாபாரம் லாபகரமாக நடக்கும். வேலையாட்கள் விசுவாசமாக வேலை செய்வார்கள். ரியல் எஸ்டேட், கமிஷன், காண்ட்ராக்ட் வகையில் நல்ல வருமானம் வரும். ஃபிளாட் கட்டி விற்கும் பில்டர்கள் தேக்க நிலை நீங்கும். தொழில் சூடு பிடிக்கும். கையில் பணம் புரளும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனை அடைப்பீர்கள். ஓட்டல் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. கேட்டரிங், காண்ட்ராக்ட் எடுத்து செய்பவர்கள் ஆதாயம் அடைவார்கள். டெக்ஸ்டைல்ஸ், ரெடிமேட் ஆடைகள், தொழில் கை கொடுக்கும். தங்கம், வெள்ளி வியாபாரத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும். வாங்கி விற்பவர்கள் நிதானமாக செயல்படுவது நலம் தரும். விவசாயம் சாதகமாக இருக்கும். புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்குவீர்கள். புதிய போர் பம்ப் செட் மற்றும் லாரி, டிராக்டர் வாங்குவதால் செலவுகள் கூடும். மரம் வெட்டும் காண்ட்ராக்ட்டில் லாபம் அதிகரிக்கும். சிறுதானிய வகைகளில் நல்ல லாபம் வரும்.

பரிகாரம்: வியாழக்கிழமை வாராகி அம்மனுக்கு மஞ்சள் ஆடை அணிவித்து வழிபடலாம். பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல்களை பிரசாதமாகத் தரலாம். இதனால் தடைகள் நீங்கி திருமண பிராப்தம் கிடைக்கும்.

No comments:

Post a Comment