கூகுள் நிறுவனம் பகிர்ந்துள்ள புதிய தகவல் ! - Karaitivu.org

Breaking

Tuesday, December 31, 2019

கூகுள் நிறுவனம் பகிர்ந்துள்ள புதிய தகவல் !


கூகுள் நிறுவனம் பகிர்ந்துள்ள புதிய தகவல்களின்படி 10 மில்லியன் மைல்கள் `ஸ்ட்ரீட் வியூ' படங்களையும், 36 மில்லியன் செட்டிலைட் புகைப்படங்களையும் கூகுள் மேப் மூலம் தற்போது காணமுடியும்.
உலகின் 98 சதவிகித மக்கள் வாழும் நிலப் பகுதியை `ஸ்ட்ரீட் வியூ' மூலம் படம்பிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது கூகுள். நாம் நேரில் காண முடியாத சில பகுதிகளைக்கூட கூகுள் மேப்ஸின் `ஸ்ட்ரீட் வியூ' மூலம் பார்க்க முடியும். கூகுள் நிறுவனம் பகிர்ந்துள்ள தகவல்களின்படி 10 மில்லியன் மைல்கள் `ஸ்ட்ரீட் வியூ' படங்களையும், 36 மில்லியன் சாட்டிலைட் புகைப்படங்களையும் கூகுள் மேப் மூலம் தற்போது காணமுடியும்.
இதற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட `ஸ்ட்ரீட் வியூ கார்கள்', உயர் தொழில்நுட்ப கெமராக்கள் மற்றும் ஸ்ட்ரீட் வியூ ட்ரெக்கர் என பல உபகரணங்களை பயன்படுத்தியுள்ளது.
ஒன்பது கெமராக்கள் பொருத்தப்பட்ட ஸ்ட்ரீட் வியூ கார்களின் மூலம் ஒவ்வோர் இடத்தையும் பல கோணங்களில் புகைப்படம் எடுத்து, அவை அனைத்தையும் Photogrammetry என்னும் தொழில்நுட்பம் மூலம் ஒரே புகைப்படமாக நமக்கு அளிக்கிறது. தூரத்தைக் கணக்கிடுவதற்கு Lidar sensor-யைப் பயன்படுத்தியுள்ளனர். கார்கள் செல்ல முடியாத பகுதிகளைப் புகைப்படமெடுக்க ட்ரெக்கர் என்னும் சாதனத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.
``2019-இல் மட்டும் கூகுள் மேப்ஸ் கம்யூனிட்டியைச் சேர்ந்தவர்கள் 7 மில்லியன் கட்டடங்கள் மற்றும் இடங்களை அடையாளம் காட்டி உதவியுள்ளனர். இதன்மூலம் இதற்கு முன் அடையாளப்படுத்தப்படாத அர்மேனியா, பெர்முடா, லெபனான், மியான்மர், டாங்கோ மற்றும் ஸிம்பாப்வே போன்ற பல நாடுகளைச் சேர்ந்த இடங்களும் தற்போது கூகுள் மேப்பில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன" என கூகுள் தரப்பில் அதன் வலைதளத்தில் தெரிவித்துள்ளது.
`உலகமே உங்கள் கையில்' என பல பேர் சொல்லக் கேட்டிருப்போம். இப்போது உண்மையிலேயே உலகை உங்கள் கையில் அளித்திருக்கிறது கூகுள்.

No comments:

Post a Comment