அம்பாறை மாவட்டத்தில் சமூக நல்லிணக்கத்திற்கான ஏற்பாடுகள் தொடர்பான செயலமர்வு! - Karaitivu.org

Breaking

Tuesday, August 27, 2019

அம்பாறை மாவட்டத்தில் சமூக நல்லிணக்கத்திற்கான ஏற்பாடுகள் தொடர்பான செயலமர்வு!


மனித அபிவிருத்தி தாபனம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை பிராந்திய காரியாலயமும் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் பல்லின மக்களுக்கிடையிலான நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு பொலிஸ், சிவில் அமைப்புக்களின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் எனும் தொனிப்பொருளிலான செயலமர்வு நடைபெற்றது.

மனித அபிவிருத்தி தாபனத்தின் வட,கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந்  தலைமையில் நடைபெற்ற இச் செயலமர்வில் பிரதான வளவாளராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸடின் லத்திப் கலந்து கொண்டு விளக்கவுரை வழங்கினார்.

இச் செயலமர்வுக்கு  அம்பாறை கரையோர பிரதேசத்திலுள்ள 8 பொலிஸ் நிலையங்களிலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சின் மாவட்ட உத்தியோகத்தர் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

இச் செயலமர்வில் பின்வரும் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் குண்டு தாங்குதல் காரணமான சமூகங்களுக்கிடையிலான முரண்பாடு அதிகரித்து காணப்படுகின்றது. 
இதனால் கடந்த காலங்களில் சமூக நல்லிணக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இக்காரணத்தால் ஒரு தனிநபர் உரிமையும் பாதிக்கப்படாது பாதுகாக்கப்பட வேண்டும். 

அதே போன்று அரச அதிகாரிகள் தங்களது செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது எந்த சமூகத்தினையும் பாதிக்காதவண்ணம் செயற்பட வேண்டும். இது நல்லுறவுடன் கூடிய சமூகத்தினை கட்டியேழுப்ப உறுதுணையாக இருக்கும். 

அதே போன்று அரச மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கிராமமட்ட மக்கள், பெண்கள், இளைஞர்கள், அரச அதிகாரிகள், சிவில் அமைப்புக்கள் என்ற அடிப்படையில் நல்லிணக்கம் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்த ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.No comments:

Post a Comment