முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல்முன்னணியின் அனர்த்தமுகாமைத்துவச் செயலமர்வு! - Karaitivu.org

Breaking

Tuesday, August 27, 2019

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல்முன்னணியின் அனர்த்தமுகாமைத்துவச் செயலமர்வு!

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல்முன்னணியின் ஏற்பாட்டில் மருதமுனை கலசார மண்டபத்தில் அனர்த்தமுகாமைத்துவச் செயலமர்வொன்று நேற்று முன்னணியின் கல்முனைப்பிராந்திய இணைப்பாளர் செல்வி எவ்.கபீலா தலைமையில் நடைபெற்றது.

அதிபர் ஆசிரியர்கள் சமுர்த்திஉத்தியோகத்தர்கள் கிராமசேவை உத்தியோகத்தர்கள் கலாசார உத்தியோகத்தர்கள் கிராமமட்டபெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் செயலமர்வில் கலந்தகொண்டனர்.

அனர்த்தம் மற்றும்  அனர்த்தமுகாமைத்துவம் பற்றி இத்தாலியில் பயிற்சிபெற்ற வளவாளர் வி.ரி.சகாதேவராஜா காணொளி உதவியுடன் விளக்கமளித்தார்.

தொடர்ந்து சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் படைப்பிரிவின் அம்பாறை மாவட்ட ஆணையாளர் நௌசாட் வாபி உதவி ஆணையாளர் எம்எஸ்.மிப்ராஸ்கான் ஆகியோர் அனர்த்தத்தில்பாதிக்கப்பட்டவர்களுக்கான முதலுதவி தொடர்பான செய்முறைப்பயிற்சியை வழங்கினார்கள்.

No comments:

Post a Comment