காரைதீவில் பப்பாசிப்பழப்பயிர்ச்செய்கை அறுவடைவிழா! - Karaitivu.org

Breaking

Thursday, June 6, 2019

காரைதீவில் பப்பாசிப்பழப்பயிர்ச்செய்கை அறுவடைவிழா!

கிழக்கு மாகாண விவசாயத்திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பழப்பயிர்ச்செய்கைத்திட்டத்தின்கீழ் பப்பாசிப்பழப்பயிர்ச்செய்கை இம்முறை வெற்றிகரமான விளைச்சலைத்தந்துள்ளது.

அந்தவகையில் காரைதீவு விவசாயப்போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட பப்பாசிச்செய்கையின்போதான பப்பாசிப்பழஅறுவடைவிழா நேற்று விவசாயப்போதனாசிரியை ஜனாபா. ஏ.எல்.ரதீனாபேகம் தலைமையில் நடைபெற்றது.

பிரதமஅதிதியாக அம்பாறை மாவட்டத்திற்கான மாகாண பிரதி விவசாயப்பணிப்பாளர் டி.எம்.எஸ்.பி.திசாயநாயக்க உதவிவிவசாயப்பணிப்பாளர் திருமதி அழகுமலர் ரவீந்திரன் பிரதேசசெயலக பிரதி திட்டமிடல்பணிப்பாளர் ச.விவேகானந்தராஜா பாடவிதான உத்தியோகத்தர் எஸ்.பரமேஸ்வரன் விவசாயப்போதனாசிரியை திருமதி சஜிகலா ரகுநந்நதன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்தகொண்டனர்.

காரைதீவு.3இலுள்ள விவசாயி ஜ.செல்வராஜா என்பவரின் பப்பாசித்தோட்டத்திலேயே இவ் அறுவடைவிழா இடம்பெற்றது.

பப்பாசிப்பழப்பயிர்ச் செய்கை இம்முறை அமோக விளைச்சலைத்தந்துள்ளதாக விவசாயி செல்வராஜா தெரிவித்தார்.No comments:

Post a Comment