உகந்தை முருகன் ஆலயத்தில் காட்டுப் பாதை திறக்கும் நிகழ்வு. - Karaitivu.org

Breaking

Friday, June 28, 2019

உகந்தை முருகன் ஆலயத்தில் காட்டுப் பாதை திறக்கும் நிகழ்வு.

உகந்தை முருகன் ஆலயத்தில் காட்டுப் பாதை திறக்கும் நிகழ்வு.

 உகந்தை முருகன் ஆலயத்தில் ஆரம்பித்து கதிர்காமம் வரை செல்லும்  வருடாந்த பாத யாத்திரையின் இவ்வாண்டு காட்டுப் பாதை  வாயில் திறப்பும், ஆலய வளவிற்கான நுழைவாயில் பெயர் தாங்கி வளைவு திறப்பு விழாவும்  நேற்று நடைபெற்றன.

வரலாற்றில் முதல் தடவையாக இந்து சமய விவகார அமைச்சர் ஒருவர், ஆலய  பாத யாத்திரை காட்டுப்பாதை வாயில் திறப்பு விழாவில்  கலந்துக் கொண்டார் என ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.

ஆலய நுழைவாயில் வளைவை கோடீஸ்வரன் எம்பி பொறுப்பேற்று செய்து முடித்திருந்தார்.

அமைச்சர் மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினர்கள் கோடீஸ்வரன், வேலுகுமார், அம்பாறை மாவட்ட செயலாளர் பண்டாரநாயக்க, மாவட்ட இராணுவ கட்டளை  தளபதி மற்றும் நாடு முழுக்க இருந்து வந்திருந்த  பெருந்தொகையான பக்தர்கள்  இந்நிகழ்வுகளில் கலந்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment