பாதயாத்திரீகர் குழுவினரை பாதநமஸ்காரம் செய்து வழியனுப்பிவைப்பு! - Karaitivu.org

Breaking

Thursday, June 20, 2019

பாதயாத்திரீகர் குழுவினரை பாதநமஸ்காரம் செய்து வழியனுப்பிவைப்பு!

பாதயாத்திரீகர் குழுவினரை பாதநமஸ்காரம் செய்து வழியனுப்பிவைப்பு!
பிரதேசசெயலாளர் தவிசாளர் பங்கேற்பு: சிறப்புநூலும் வெளியிட்டுவைப்பு.

(காரைதீவு  நிருபர் சகா)

வேல்சாமி தலைமையிலான கதிர்காம பாதயாத்திரைக்குழுவினர் விசேடபூஜை சிறப்பநூல் வெளியீடு மற்றும்  பாதநமஸ்காரம் செயிவிக்கப்பட்டு வழியனுப்பிவைக்கப்பட்டனர்.

வழியனுப்பிவைக்கும் இவ்வைபவம்  (20)  காலை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தில் ஆலயகுரு சிவஸ்ரீ அங்குசநாதக்குருக்கள் ஆசியுடன் நடைபெற்றது.
72யாத்தீகர்களுடன் நேற்றுமுன்தினம் காலை 9மணியளவில்  பாதயாத்திரையை ஆரம்பித்தது.

அதிதிகளாக திருக்கோவில் பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன்  காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் ஆகியோர் கலந்துசிறப்பித்தனர்.
ஆலயபரிபாலன சபைத்தலைவர் சு.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பழுகாமத்தைச்சேர்ந்த ஓய்வுநிலை அரச உத்தியோகத்தர் செல்லையா நற்குணம் எழுதிய முதல் நூலான 'கதிர்காமப் பாதயாத்திரையின் சிறப்பும் கந்தப்பெருமாளின் அருளும் ' என்ற தொகுப்பு நூல் வெளியீட்டுவிழா நடைபெற்றது. நூல் வெளியீட்டுரையை பாதயாத்திரைச்சங்க ஆலோசகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா நிகழ்த்தினார்.
தொடர்ந்து ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைமையில் ஆலயகுரு சிவஸ்ரீ அங்குசநாதக்குருக்கள் வழியனுப்புவதற்கான விசேட சிறப்புப்பூஜையினை நடாத்துவார்.
ஆலய பரிபாலனசபைத்தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் வண்ணக்கர் வ.ஜெயந்தன் செயலாளர் அ.செல்வராஜா உள்ளிட்ட ஆலயநிருவாகத்தினர் பங்கேற்றனர்.
நேற்றுமுன்தினம் திருக்கோவிலில் ஆரம்பித்து வினாயகபுரம் மாணிக்கப்பிள்ளையாhர் ஆலயத்தில் மதியம் தங்கி தாமரைக்குளம் சீரடிசாயி நிலையத்தில் தங்கி    24 ஆம் திகதி உகந்தைமலையை அடைவர்.
அங்கு தங்கியிருந்து காட்டுப்பாதை 27இல் திறந்ததும் முதல் நாள் கானகத்தினுள் காலடிஎடுத்துவைத்து யூலை3ஆம் திகதி கதிர்காமத்தைச் சென்றடைய திட்டமிட்டுள்ளது.
 கதிர்காம ஆடிவேல்விழா உற்சவம் இம்முறை எதிர்வரும் ஜூலைமாதம் 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 18ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

No comments:

Post a Comment