காரைதீவு பிரதேச செயலக சர்வதேச மகளீர் தின நிகழ்வுகள் ! - Karaitivu.org

Breaking

Friday, March 8, 2019

காரைதீவு பிரதேச செயலக சர்வதேச மகளீர் தின நிகழ்வுகள் !

"திறமையான பெண்ணொன்று அழகான உலகைப் படைக்கிறாள் " என்ற தொனிப் பொருளில் அமைந்த 108 ஆவது சர்வதேச மகளீர் தின நிகழ்வுகள் காரைதீவு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு.வேதநாயகம் ஜெகதீசன் அவர்களின் தலைமையில் இன்று (08) நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு அதிதிகளாக GAFSO நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜனாப்.ஐ.அப்துல் ஜப்பார் அவர்களும், நிந்தவூர் RDB வங்கி முகாமையாளர் ஜனாப் எஸ்.எச்.எம். இப்ராஹிம் அவர்களும், மனித வள அபிவிருத்தி தாபனத்தின் உதவி இணைப்பாளர் ஜனாப்.எம்.ஐ.ரியால் அவர்களும், MFCD நிறுவனத்தின் நிர்வாக உத்தியோகத்தர் ஜனாப் எம்.எஸ்.எம்.சமீர் அவர்களும், சமாதானமும் சமூகப்பணியும் (PCA) நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி.கே.ரோகிணி அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன்போது காரைதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மகளிர் அமைப்புகள் கௌரவிக்கப்பட்டதுடன், நிகழ்வில் நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிய பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மகளிர் அமைப்பு அங்கத்தவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வுகளுக்கு பரிசுப் பொருட்களை சரவணாஸ் நகை மாளிகை,RDB வங்கி மற்றும் GAFSO, HDO, MFCD போன்ற அமைப்புகள் வழங்கிவைத்தனர்.

No comments:

Post a Comment