அதி வேக பந்துவீச்சாளருக்கான தெரிவில் காரைதீவைச்சேர்ந்த அஜித்குமார் தெரிவு.. - Karaitivu.org

Breaking

Sunday, March 3, 2019

அதி வேக பந்துவீச்சாளருக்கான தெரிவில் காரைதீவைச்சேர்ந்த அஜித்குமார் தெரிவு..

கிழக்கு மாகாண‘Airtel fastest’ அதி வேக பந்துவீச்சாளருக்கான தெரிவில் காரைதீவைச்சேர்ந்த  செல்வன்.சிவகுமார் அஜித்குமார் அவர்கள் சர்வதேச தரம்வாய்ந்த ஆடுகளத்தில் வேகப் பந்து வீச்சு நிர்ணயிக்கும் நிபுணர்களின் முன்னிலையில் திறமைகளை வெளிப்படுத்தி தெரிவாகி தேசிய ரீதியில் கொழும்பில் இடம்பெற்றுள்ள தெரிவு செல்லவுள்ளார்.
இன்று 3-மார்ச் காலை 8மணி முதல் மட்டக்களப்பு, சிவானந்தா மைதானத்தில் நடைபெற்ற ‘Airtel fastest’ அதி வேக பந்துவீச்சாளருக்கான தெரவில் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பல நூற்றுக்கணக்கான வீரர்கள் கலந்துகொண்டனர்.
 அஜித்குமார் காரைதீவு விபுலாந்த மத்திய கல்லூரி உயர்தர பிரிவில் கல்வி கற்கும் மாணவரும் கிரிக்கட் வீரரும் காரைதீவு விளையாட்டு கழக வீரருமாவார்.
இவருக்கு வாழ்த்துக்கள்.
No comments:

Post a Comment