மருதம் அணியின் வெற்றியுடன் ஆரம்பமான விபுலாநந்தா மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் - Karaitivu.org

Breaking

Thursday, January 17, 2019

மருதம் அணியின் வெற்றியுடன் ஆரம்பமான விபுலாநந்தா மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிகள்

மருதம் அணியின் வெற்றியுடன் ஆரம்பமான விபுலாநந்தா மத்திய கல்லூரியின் இல்ல விளைட்டுப் போட்டிகள்..
2019 ஆண்டிற்கான விபுலாநந்தா மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டியின் போட்டிகள் இன்று காலை விபுலாநந்தா மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது இன்றய போட்டிகளை ஆரம்பித்து வைப்பதற்காக கல்முனை வலய பிரதிக் கல்வி பணிப்பாளர் S.புவனேந்திரன் கலந்து சிறப்பித்தார் இதில் வழமை போன்று மருதம்,குறிஞ்சி, முல்லை என மூன்று இல்லங்கள் மோதுகின்றன இன்று முதலாவது போட்டியாக வலைப்பந்தாடப்போட்டி இடம்பெற்றது இதில் மருதம் அணி முதலாம் இடத்தையும் முல்லை இரண்டாம் இடத்தையும் குறிஞ்சி மூண்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது அதனைத்தொடந்து இடம்பெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியில் குறுஞ்சி அணி முதலாம் இடத்தையும், மருதம் அணி இரண்டாம் இடத்தையும் முல்லை மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்
இன்றய போட்டிகளின் முடிவின் அடிப்படையில் மூன்று இல்லங்களும் சமனிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது...No comments:

Post a Comment