கலாசார வளைவுக்கான (Gateway) அடிக்கல் நாட்டும் விழா - Karaitivu.org

Breaking

Friday, December 21, 2018

கலாசார வளைவுக்கான (Gateway) அடிக்கல் நாட்டும் விழா

தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் சமூக முன்னேற்ற மற்றும் இந்துவிவகார அமைச்சின் ரூபா 4 மில்லியன்  நிதி ஒதுக்கீட்டில் காரைதீவு வெட்டு வாய்க்கால் அருகில் அமையவிருக்கும் கலாசார வளைவுக்கான (Gateway) அடிக்கல் நாட்டும் விழா காரைதீவு பிரதேச சபை கௌரவ தவிசாளர் திரு.கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் அவர்களின் தலைமையில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக காரைதீவு பிரதேச செயலாளர் திரு.வேதநாயகம் ஜெகதீசன் அவர்களும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு. கே.பாக்கியராஜ் அவர்களும், கட்டடங்கள் திணைக்களத்தின் பிரதம நிறைவேற்று பொருளாளர் திரு.இளங்கோ அவர்களும் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு.S.விவேகானந்தராஜா அவர்களும் மற்றும் பிரதேச சபை கெளரவ உறுப்பினர்கள் மற்றும் ஆலய தர்மகஸ்தாக்கள் மற்றும் பலர் பங்குபற்றினார்கள்.
No comments:

Post a Comment