புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்தப் பெறுபேறுகள் வௌியாகின ! - Karaitivu.org

Breaking

Wednesday, December 19, 2018

புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்தப் பெறுபேறுகள் வௌியாகின !

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறுகள் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
இந்தநிலையில், www.doenets.lk இணையத்தளத்தில் மீள்திருத்த பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீள்திருத்தத்தின்போது பெறுபேறுகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருப்பின் மாத்திரம் அந்த பெறுபேறுகள் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் மாற்றமில்லாத பெறுபேறுகள் பதிவேற்றப்படவில்லை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், பெறுபேறுகளை மீள்பரிசீலனைக்கு உட்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ள அனைத்து பரீட்சார்த்திகளினதும் பெறுபேறுகள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்படவுள்ளன.
இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் மீள்திருத்தத்தின் பொருட்டு 21,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதில் 200 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment