காரைதீவில் CYBER CRIME பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு.. - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

புதன், 14 நவம்பர், 2018

காரைதீவில் CYBER CRIME பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு..

இன்றைய உலகில் இலத்திரனியல் சாதனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் CYBER CRIME பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்று காரைதீவில் நடைபெற்றுள்ளது.

இதனை மனித அபிவிருத்தி தாபனம் அம்பாறை மாவட்ட செயலக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தருடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.இலத்திரனியல் சாதனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும்  CYBER CRIME பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு மனித அபிவிருத்தி தாபனத்தின் உதவி இணைப்பாளர் எம்.ஐ.றியாழ்  தலைமையில் காரைதீவு பிரதேச செயலகத்தில்  நடைபெற்றது. 

இந் நிகழ்விற்கு வளவாளராக சட்டத்தரணி சுஹால்ஸ் பிர்தௌஸ் கலந்துகொண்டு விளக்கவுரையாற்றினார்.அதிதிகளாக காரைதீவு பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர்.எஸ்.விவேகானந்தராஜா தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர் யூ.எல். அசாருதீன்  ஆகியோரும் பங்கு பற்றுனர்களாக  பிரதேச செயலகங்களிலுள்ள சிறுவர் பெண்கள் பிரிவில் கடமையாற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மகளிர் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் முன் பிள்ளை பராய அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள்இ உளநல உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இக் கருத்தரங்கானது தற்போது அதிகரித்து காணப்படும் சிறுவர் பெண்களுக்கு எதிரான  துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்கும் இலத்திரனியல் சாதனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்கள் எவ்வாறு நடைபெறுகின்றது என்பது தொடர்பாகவும் அதனை கட்டுப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள்இ சட்ட பாதுகாப்பு அதற்கான ஆதாரங்களை எவ்வாறு எடுப்பது தொடர்பாக சட்டத்தரணி சுஹால்ஸ் பிர்தௌஸ் அவர்களால் விளக்கவுரை வழங்கப்பட்டது.




Post Bottom Ad

Responsive Ads Here

Pages