சுவாமி நடராஜானந்தா ஜீயின் 115வது ஜனனதினவிழாவில் - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

வெள்ளி, 30 நவம்பர், 2018

சுவாமி நடராஜானந்தா ஜீயின் 115வது ஜனனதினவிழாவில்

மானிடப்பிறவியை அர்த்தப்படுத்தியவர் சுவாமி நடராஜானந்தா ஜீ!
நேற்று 115வது ஜனனதினவிழாவில் பிரதேசசெயலாளர் ஜெகதீஸன் .
மானிடப்பிறவி கிடைத்தற்கரியது. அப்பிறவியை அர்த்தப்படுத்தியவர் சுவாமி நடராஜானந்தா ஜீ அவர்கள். அவரது ஜீவசேவையை தொடர்வதே நாம் அவருக்குச்செய்யும் நன்றிக்கடனாகும்.
இவ்வாறு இ.கி.மிசன் துறவி சேவையின் சின்னம் சுவாமி நடராஜானந்தா ஜீயின் 115வது ஜனனதினத்தில் உரையாற்றிய காரைதீவு பிரதேசசெயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் கூறினார்.
காரைதீவு பெற்றெடுத்த மற்றுமொரு இ.கி.மிசன் சுவாமி நடராஜானந்தா ஜீயின்   115வது  ஜனனதினவிழாவை காரைதீவில்  (29) வியாழக்கிழமை காலை காரைதீவு இந்துசமயவிருத்திச்சங்கம் அதன் தலைவர் எஸ்.மணிமாறன் தலைமையில் நடாத்தியது.
காரைதீவு பிரதேசசெயலக முன்றலில் சுவாமி நடராஜானந்தா நூற்றாண்டுவிழாச்சபையால் 2004இல் நிறுவப்பட்ட சுவாமி நடராஜானந்தரின் திருவுருவச்சிலையடியில் இவ் ஜனனதினவிழா கோலாகலமாக நடைபெற்றது.
திவுருவச்சிலைக்கு மலர்மாலையணிவித்தல் புஸ்பாஞ்சலி  வேதபாராயணம் பாடுதல் சிறப்புச்சொற்பொழிவு என்பன நடைபெற்றது.
அங்கு பிரதேசசெயலாளர் ஜெகதீசன் மேலும் உரையாற்றுகையில்:
ஆன்மீகத்துடன்கூடிய கல்வியை வழங்கிய சுவாமி விபுலாநந்தரின் வழித்தோன்றலான சுவாமி இறுதிவரை மக்கள்சேவை செய்து புகழுடம்பெய்தினார்.
எத்தனை மொழிகள் பயின்றும் தாய்மொழியாம் தமிழ்மொழியையும் பெற்றதாய்நாட்டையும் அவர்கள் மறக்கவில்லை.அவர்களது வாழ்க்கை எமக்கெல்லாம் சிறந்த ஒரு வழிகாட்டியாகும்.
இ.கி.மிசனின் 26 பாடசாலைகளின் முகாமையாளராக இருந்து அவர் ஆற்றிய பணிகள் இன்றும் போற்றுதற்குரியவை. என்றார்.







Post Bottom Ad

Responsive Ads Here

Pages