EDUEX-2018 கிழக்கின் மாபெரும் கல்விக் கண்காட்சி.. - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

EDUEX-2018 கிழக்கின் மாபெரும் கல்விக் கண்காட்சி..

EDUEX-2018 கிழக்கின் மாபெரும் கல்விக் கண்காட்சி..

EDUEX - 2018 கிழக்கின் மாபெரும் கல்விக் கண்காட்சி எதிர்வரும் செப்டம்பர் 22 மற்றும் 23ம் திகதிகளில் காலை 10.00 முதல் பிற்பகல் 6.00 வரை சாய்ந்தமருது  லீ-மெரிடியன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இக் கண்காட்சியானது பிரதனமான மூன்று அம்சங்களை உள்ளடக்கியதாக இரண்டு நாட்களும் திட்டமிடப்பட்டிருக்கின்றது.  

இலங்கையின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்கள் தமது கண்காட்சிக் கூடங்களை அமைத்து தங்களது கற்கை நெறிகள் தபற்றிய விபரங்களை காட்சிப்படுத்துவதோடு அவற்றின் பிரதிநிதிகள் மாணவர்களையும் பெற்றோரையும் நேரடியாக சந்தித்து மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புக்கள் குறித்தும் பொருத்தமான உயர்கல்வித் தெரிவுகள் குறித்தும் உரையாட இருக்கின்றனர். 

அதே போன்று இம்முறை க.பொ.த (உ/த) பரீட்சைக்குத் தோற்றிய மாணவ மாணவிகளுக்கான துறை சார் உயர் கல்வி வழிகாட்டல் கருத்தரங்குகளும் இடம்பெறவுள்ளன. இக் கருத்தரங்குகளில் கணித, விஞ்ஞான, வர்த்தக, கலை மற்றும் தொழிநுட்ப பிரிவு மாணவ, மாணவிகளுக்காக தனித்தனியான உயர்கல்வி வழிகாட்டலை இலங்கையின் மிகச் சிறந்த துறை சார் ஆளுமையாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் கல்வியியலாளர்கள் வளவாளர்களாக கலந்து ஒவ்வொரு துறைக்குமான வழிகாட்டல்களை வழங்கவிருக்கின்றனர்.  

அதே போல 23-09-2018 ஞாயிற்றுக் கிழமை காலை 11 மணிக்கு பெற்றோர்களுக்கான குழும உரையாடல் (Panel Discussion) அரங்கொன்றும் நிகழவிருக்கின்றது.  

இதில் மிகச் சிறந்த தொழிற்றுறை வல்லுனர்கள், ஆற்றுப்படுத்துனர்கள் உள்ளடங்கிய குழுவின் தலைமையில் இன்றைய நவீன சூழலில் மாணவர்கள் உயர்கல்வியிலும் அதற்கடுத்து தொழிற் சந்தையிலும் முகங்கொடுக்கும் சவால்கள் மற்றும் அதற்கான சரியான தெரிவுகளை மேற்கொள்ள பெற்றோருக்கு இருக்கின்ற பொறுப்புக்கள் என பல்வேறு விடயங்கள் அறிவுறுத்தப்படவிருக்கின்றன.  

இக்கருத்தரங்கில் துறை ரீதியாக உயர் கல்வி வாய்ப்புக்கள், தொழில் முறைக் கல்வி வாய்ப்புக்கள், எதிர்கால தொழில் சந்தைக்கு நாம் எவ்வாறு தயாராகுவது போன்ற விடயங்களில் விளக்கமான விரிவுரைகளும், வழிகாட்டல்களும் வழங்கப்படவுள்ளன. 

கருத்தரங்கு மற்றும் கலந்துரையால்கள் தொடர்பான நேர அட்டவணை விபரங்களை எதிர்வரும் செப்டம்பர் 22ம் திகதி சனிக்கிழமை  சாய்ந்தமருது  லீ-மெரிடியன் மண்டபத்தில் EDUEX கண்காட்சி வளாகத்தில் காலை 10.00 முதல் பெற்றுக்கொள்ள முடியும்.  

இந் நிகழ்வு தொடர்பான மேலதிக விபரங்களை 0762876678 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.


(றியாத் ஏ. மஜீத்)


Post Bottom Ad

Responsive Ads Here

Pages