தேசிய ஹொக்கிப்போட்டியில் கிழக்குமாகாணம் சார்பில் காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணி! - Karaitivu.org

Breaking

Saturday, September 29, 2018

தேசிய ஹொக்கிப்போட்டியில் கிழக்குமாகாணம் சார்பில் காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணி!


விளையாட்டுத்துறை அமைச்சு வருடாந்தம் நடாத்திவரும் மாகாணங்களுக்கிடையிலான
அகிலஇலங்கை மட்ட ஹொக்கி போட்டியில் கிழக்கு மாகாணஅணியாக காரைதீவு
ஹொக்கிலயன்ஸ் அணி முதன்முதலாகக் கலந்து கொண்டது.

இப்போட்டி கொழும்பு ரொறிங்ரன் மைதானத்தில் நடைபெற்றது. விளையாட்டுத்துறை
அமைச்சர் பைசர் முஸ்தபா இத்தேசிய போட்டியை அங்குரார்ப்பணம்
செய்துவைத்தார்.

காரைதீவு ஹொக்கிலயன்ஸ் அணி அதன் தலைவர் பொலிஸ் உததியோகத்தர் தவராசா லவன்
தலைமையில் அம்பாறை மாவட்டத்தில் தெரிவாகி பின்னர் கிழக்குமாகாணத்திலும்
தெரிவானது.

அதன்பலனாக கிழக்குமாகாண அணியாக இளம்வீரர்களைக்கொண்ட காரைதீவு
ஹொக்கிலயன்ஸ் அணி தேசியமட்டப்போட்டிக்கு வரலாற்றில் முதற்றடவையாகத்
தெரிவாகி பங்கேற்றது.

வடக்கு மாகாண அணியுடன் மோதியதில் இறுதிநேரத்தில் ஆக 3 கோல்
வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.


இலங்கையின் 9மாகாணங்களிலிருந்தும் 9 தெரிவான மாகாண ஹொக்கிஅணிகள்
பங்கேற்றன. முதலில் நொக்கவுட் முறையில் போட்டிகள் நடாத்தப்பட்டன.
இறுதிப்போட்டியில் மத்தியமாகாணஅணி முன்னிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment