காரைதீவு ஆனந்தா முன்பாடசாலைச் சிறார்களின் Family Day (குடும்பவிழா) !!! - Karaitivu.org

Breaking

Friday, August 10, 2018

காரைதீவு ஆனந்தா முன்பாடசாலைச் சிறார்களின் Family Day (குடும்பவிழா) !!!

காரைதீவு ஆனந்தா முன்பாடசாலைச் சிறார்களின் 2018ம் ஆண்டிற்கான இரண்டாம் தவணை நிறைவு விழாவாக Family Day (குடும்பவிழா) நிகழ்வு பணிப்பாளர் சத்தியா-தழிழ்ச்செல்வன் தலைமையில் 06.08.2018 திங்கட்கிழமை  மாலை 03.30 க்கு  காரைதீவு கலாச்சார மண்டபத்தில் வெகு விமர்சையாக  இடம்பெற்றது. 

இந்நிகழ்விற்கு சித்த ஆயுர்வேத வைத்திய கலாநிதி திருமதி. மோகனசுந்தரி பத்மநாதன்  பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன மேலும் பல கௌரவ அதிதிகளுமஇ; சிறப்பு அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

முதலில் சிறார்களின் BAND வாத்திய இசை அணிவகுப்புடன் அதிதிகள் வரவேற்கப்பட்டுஇ மங்களச்சுடர் ஏற்றப்பட்டு மாணவர்களால் இறைவணக்கமும்இ பாடசாலைக்கீதமும் இசைக்கப்பட்டு சிறார்களின் வரவேற்பு நடனமும் கலைநிகழ்வின் சிறந்த ஆரம்பமாக இருந்தது. 

பணிப்பாளர் தலைமையுரையில் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புஇ  முன்பாடசாலைக்கான கற்றல் அனுபவங்களை சிறார்களுக்கு சிறப்பாக வழங்குதல்இ அதனால் பெற்றோர்கள் இப்பாடசாலையில் காட்டும் கூடிய அக்கறைஇ ஒத்துழைப்பு என்பன குறுகிய காலத்தில் இப் பாடசாலை வளர்ச்சியடைய காரணமாக அமைந்ததுடன் பாடசாலையை சிறப்பாக நடாத்திச்செல்ல அடிப்படையாக அமைந்ததாகவும். பிள்ளைகளின் வளர்ச்சியில் குடும்பம் எவ்வளவு முக்கியத்துவம் உடையதுஎன்றும் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு முக்கியத்துவமுடையவர்களாக அமைகிறார்கள் என்பதனை பெரியவர்களாகிய நாம்  அறியும்; வகையில் இந்நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார். மேலும் இவ்விழா சிறார்களின் பேச்சாற்றலுக்கு வழிசமைத்துக்கொடுக்கும் களமாக அமையும் என்றும் ஒரு  இந்துக்குடும்பத்தின் அடிப்படையோகாசனமான சூரிய நமஸ்காரமும் காணப்படுகின்றது என்பது இறுதியில் சிறப்பாக சிறார்களால் வெளிப்படுத்தப்பட இருக்கின்றது. இதற்கு பயிற்சிளளித்த ஆசிரியர்களை மனதார பாராட்கிறேன் எனவும் சின்னஞ் சிறார்களுக்கு பாடசாலைக் கல்விக்கலைத்திட்டத்திற்கு தேவையான முன் ஆயத்த செயன்முறைகளை எதிர்காலத்தில் மேலும் சிறந்த முறையில்  வழங்க இப்பாடசாலை தம்மை அர்ப்பணிக்கும் என்பதையும் குறிப்பிட்டார்.

இங்கு உரையாற்றிய அதிதிகள் யாவரும் மாணவர்களின் அனைத்துக் கலை நிகழ்வுகளும் மிகச்சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு சிறந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு இத்தனை ஆற்றல்கள் இருக்கின்றனவா? என வியப்படையக்கூடிய வகையில் இருந்ததாகவும்;இ நிகழ்வுகளை ஒழுங்குசெய்துள்ள விதம.; அனைத்தும் மிகப்பிரமாதமாக இருப்பதாக பாராட்டினார்கள்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக எமது ஊரில் முன்பாடசாலைகளுக்கான கலைத்திட்டத்தை விழிப்படையசெய்த பெருமையுடைய பாடசாலையாக இந்த ஆனந்தா மிளிர்கின்றது. புதுமைகள் படைப்பதையும்இ புத்ஆக்க சிந்தனையுடன் செயற்படுவதையும் எவருமே மறுதலிக்கமுடியாது. இதற்கு பல ஆதாரங்களை கூறிக்கொள்ளமுடியும் என்றும்,

ஆன்மீகரீதியான நிகழ்வுகளாக இருக்கட்டும் கலை கலாசார நிகழ்வுகளாக இருக்கட்டும் ஏன் ஒழுக்கவிழுமியங்களிலும் இங்கு கற்கின்ற சிறார்கள் முன்னிலையிலே காணப்படுகின்றார்கள். BAND வாத்திய இசை அணிநடை முன் அனுபவத்தையும்  முன்பாடசாலைகளில் எமது  சிறார்களுக்கு  வழங்கவேண்டும் என்று முதலில் செயற்பட்ட ஒரு பாடசாலையாக இப்பாடசாலை காணப்படுகின்றது.

இங்குமட்டுமல்ல வெளி இடங்களிலும் இப்பாடசாலையின் வளர்ச்சியை பலரும் பாராட்டுவதாகவும் மிக நீண்ட தூரத்திலிருந்து கூட பிள்ளைகள் இங்கு வந்து கற்பதுடன் உண்மையிலே இப்பாடசாலையில் பிள்ளைகளை சேர்ப்பதற்கு முடிவு செய்த பெற்றோர்கள்இ தமது  பிள்ளைகளுக்காக சிறந்த திட்டமிடலை செய்திருப்பதாகவுமஇ; அப்பிள்ளைகளும்இ பெற்றோரும் பெரும் பாக்கியசாலிகளாகவே தாம் கருதுவதாக அதிதிகள் ஆனந்தாவை பாராட்டினார்கள்.

இறுதியாக நன்றியுரையினை பெற்றோர்சார்பில் ஆசிரியரான திரு.க.மோகனராஜ் நிகழ்த்தினார. நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற ஒத்துளைத்த அனைவருக்கும் நன்றி பாராட்டியதுடன் சிறார்களுக்கு பல்வேறுபட்ட பல மேடைக்களங்களை ஆனந்தா அமைத்துக்கொடுப்பதை இட்டு நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் ஆனந்தாவின் புகழ் பற்றி தாம் கூறவேண்டிய அவசியம் இல்லை என்றும் அதற்கு இங்கு இடம்பெற்ற நிகழ்வுகள் அனைத்தும் சான்று பகிரும் எனவும் கூறினார் இறுதியாக மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நினைவு பரிசும் வழங்கிவைக்கப்பட்டு நிறைவடைந்நது.       


No comments:

Post a Comment