கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற தேசிய அறநெறி விழிப்புணர்வு பேரணி! - Karaitivu.org

Breaking

Wednesday, July 4, 2018

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற தேசிய அறநெறி விழிப்புணர்வு பேரணி!

தேசிய அறநெறி விழிப்புணர்வு மாதத்தினை முன்னிட்டு கல்முனை தமிழ் பிரதேச செயலகமும், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய அறநெறி விழிப்புணர்வு பேரணியும், திருஞான சம்மந்தர் குருபூசை நிகழ்வும் சிறப்பாக  நடைபெற்றது.
அறநெறி கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் விழிப்புணர்வு பேரணி பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தில் இருந்து  ஆரம்பித்து நற்பிட்டிமுனை அம்பலத்தடி விநாயகர் ஆலயத்தை சென்றடைந்தது.
இந் நிகழ்வுகளில் பிரதேச செயலாளர் லவநாதன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அறநெறி பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், ஆலய தலைவர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் என பெருந்திறளானோர் கலந்து சிறப்பித்தனர்.
No comments:

Post a Comment