பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் எங்களால் முடியும் இளைஞர் அமைப்பினால் சிரமதானப்பணி! - Karaitivu.org

Breaking

Friday, June 8, 2018

பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் எங்களால் முடியும் இளைஞர் அமைப்பினால் சிரமதானப்பணி!

எதிர்வர இருக்கின்ற காரைதீவு ஸ்ரீ பத்திரகாளிஅம்மன் ஆலய வருடார்ந்த உற்சபத்தை முன்னிட்டு, இவ் ஆலய வளாகம் மற்றும் அதனை அண்டிய சுற்றுப்புற சூழல் பகுதியானது எமது எங்களால் முடியும் இளைஞர் அமைப்பினால்(We Can Youth Association), சிரமதான பணிமூலம் சுத்தம் செய்யப்பட்டது. எமது அமைப்பின் மூத்த உறுப்பினரும், இவ்வாலய நிருவாக சபை உறுப்பினருமாகிய திரு.மு.காண்டீபன் அவர்களின் ஏற்பாட்டில் எமது அமைப்புடன் இணைந்து இன்றைய சிரமதானப்பணி சிறப்புற நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். No comments:

Post a Comment