யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய திருக்குறள் தேர்வு - Karaitivu.org

Breaking

Tuesday, May 22, 2018

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய திருக்குறள் தேர்வு

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய திருக்குறள் தேர்வு - தமிழாசிரியையின் பிரிவுக்காக அமைதிப் பிரார்த்தனையுடன் ஆரம்பம்
......................................................................................
உயர்தரத்தில் தமிழ் கற்கும் மாணவர்களின் நலன் கருதி யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய திருக்குறள் தேர்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 20.05.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி தொடக்கம் 3 மணி வரை நடைபெற்றது.
.
740 மாணவர்கள் பங்கேற்பதற்காக விண்ணப்பித்து அதில் 650 பேர் தேர்வுக்குத் தோற்றினர்.
.
தேர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் அண்மையில் அகாலமரணமடைந்த தமிழாசிரியை கவிதா ஜெயசீலனின் ஆத்ம சாந்திக்காக அனைவரும் இரண்டு நிமிடங்கள் அமைதிப் பிராா்த்தனையில் ஈடுபட்டனர்.
.
தமிழ்ச்சங்க தேர்வு மேற்பார்வை அணியினருடன் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ஆசிரிய பயிலுநர்கள் 24 பேர் நோக்குநர்களாகப் பங்கேற்றனர்.
.
தேர்வு தொடர்பான மதிப்பீட்டுப் பணிகள் நடைபெறுவதாகவும் எதிர்வரும் 23.05.2018 புதன் கிழமைக்கு முன்னர் பெறுபேறுகள் தமிழ்ச்சங்கத்தின் இணையத்தளத்தில் (www.thamilsangam.org) வெளியிட்டு வைக்கப்படும் என்றும் தேர்வு இணைப்பாளர் கு.பாலஷண்முகன் அறிவித்துள்ளார்.
.
இத்தேர்வில் வெற்றியீட்டியோருக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் சிவகணேசன் புடைவையகமும் இணைந்து முன்னெடுக்கவுள்ள திருவள்ளுவர் விழாவின் போது வழங்கப்படவுள்ளன.

.


(படப்பதிவு நன்றி - “அறம்“ வரலாற்று ஆவணப்படுத்தல் அணி)

No comments:

Post a Comment