இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு! - Karaitivu.org

Breaking

Thursday, May 10, 2018

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு!

இன்று(10)  நள்ளிரவு முதல் அமுலுக்
கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு நேற்று நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டடதாக இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெற்றோலின். விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோலின் புதிய விலை 137 ரூபாவாகும்.
ஒக்டே 95 ரக பெற்றோலின் விலையும் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுளளது, அதன்படி அதன் புதிய விலை 148 ரூபாவாகும்.
லங்கா ஒட்டோ டீசலின் விலை 14 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது, சுப்பர் டீசலின் விலை 9 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்து.
ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யின் விலை 57 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை திருத்தத்திற்கு அமைய மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை புதிய விலை 101 ரூபாவாக அமைந்துள்ளது.
சமுர்த்தி பயனாளிகள் தொடர்ந்தும் பழைய விலைக்கு மண்ணெண்ணையை பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment