இளைஞர்கழகத்திற்கிடையிலான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி றைடர் அணி வசமானது
இளைஞர்கழகத்திற்கிடையிலான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று மாலை இடம்பெற்றது இதில் இராமகிருஷ்ணா,விவேகானந்தா,நடராஜானந்த, றைடர் மற்றும் மாவடிப்பள்ளி இளைஞர்கழக அணியினர் பங்குபற்றிஇருந்தனர்.இறுதி போட்டிக்கு இராமகிருஷ்ணா மற்றும் றைடர் போட்டியிட்டனர் இதில் றைடர் அணி 2-0 என்ற ரீதியில் வெற்றிவாகை சூடியது