சுவாமி விபுலாநந்தஅடிகளின் 94வது துறவறதின நிகழ்வு காரைதீவில் சிறப்பு
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின 94வது துறவறதின நிகழ்வு அவர்பிறந்த காரைதீவு மண்ணில் 29/04/2018 ஞாயிற்றுக்கிழமை பணிமனற்த்தலைவர் வெ.ஜெயநாதன் தலைமையில் நடைடபெற்றது.
சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணி மன்றம் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாககாரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கலந்துசிறப்பித்தார்.நந்திக்கொடி யையும் ஏற்றிவைத்தார். ஏனைய உறுப்பினர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
காரைதீவு சுவாமியின் திருவுருவச்சிலைக்கு மலர்மலை அணிவித்து துறவறகீதம் இசைக்கும் நிகழ்வோடு ஆரம்பித்து கல்லடியிலுள்ள சுவாமியின் சமாதிக்கு சென்று வழிபட்டு ஆச்சிரமத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்துகொண்டனர். இன் நிகழ்விற்கு திரு. வெ.ஜெகநாதன்(ஒய்.பெ அதிபர்) தலைமை உரைநிகழ்த்த கலாநிதி .க.கணேசராசா அவர்களால் சிறப்புரை ஆற்றப்பட்டது இந்நிகழ்வை வெ.த. சகதேவராசா தொகுத்துவழங்கினார்
இதேபோன்றொரு சித்ரா பௌர்ணமி தினத்தில் தான் காரைதீவைச்சேர்ந்த பண்டிதர் மயில்வாகனன் சுவாமி விபுலாநந்தராகினார். 1924இல் சுவாமி சிவானந்தரை குருவாக்கொண்டு விபுலாநந்தர் என் நாமத்தைப்பெற்றார்.
மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்