சுவாமி விபுலாநந்தரின் சமாதி அருங்காட்சியகத்திற்கான அடிக்கல் நாட்டிவைப்பு - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

சனி, 15 ஆகஸ்ட், 2020

சுவாமி விபுலாநந்தரின் சமாதி அருங்காட்சியகத்திற்கான அடிக்கல் நாட்டிவைப்பு

கல்லடியில்   இராமகிருஷ்ண மிஷன் வளாகத்தில் அமைந்துள்ள எமது மண்ணின் மைந்தர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் சமாதியை  அருங்காட்சியகமாக நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நடும் நிகழ்வு மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்தா ஜி , உதவி மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜி தலைமையில் வெள்ளிக்கிழமை(14) காலை இடம்பெற்றது.

பூஜை நிகழ்வுகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் இராமகிருஸ்மிசன் துறவிகள், மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபைத் தலைவர் திரு. க. பாஸ்கரன் (இளைப்பாறிய வலயக்கல்விப் பணிப்பாளர்) , காரைதீவு சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்தப் பணிமன்றத் தலைவர் திரு. வெ. ஜெயநாதன்  (இளைப்பாறிய கோட்டக்கல்விப் பணிப்பாளர்), சுவாமியின் அபிமானிகள், மிசன் பழைய மாணவர்களின் பங்குபற்றுதலுடன் அடிக்கல் நட்டுவைக்கப்பட்டது.


இந் நிகழ்வில் காரைதீவு சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்தப் பணிமன்ற செயலாளர் கு. ஜெயராஜ் அவர்களின் இணைப்பாக்கத்தில் காரைதீவைச் சேர்ந்த சுவாமி விபுலானந்தரின்  அபிமானிகள், இராமகிருஸ்மிசன் பழைய மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 80 பேர் கலந்துகொண்டனர்.

அடிக்கல் நடும் நிகழ்வு நிறைவடைந்ததும் சுவாமிகளின் சமாதிக்கு மலரஞ்சலி நிகழ்த்தப்பட்டதுடன் சுவாமி விபுலாநந்த மணி மண்டபத்தில் கூட்டம் இடம்பெற்றதுடன் லட்டு பிரசாதம், காலை உணவு என்பனவும் வழங்கப்பட்டன.











Post Bottom Ad

Responsive Ads Here

Pages