திருக்கோவில் பிரதேச செயலக சத்தியப்பிரமாண , கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு! - Karaitivu.org

Breaking

Wednesday, January 1, 2020

திருக்கோவில் பிரதேச செயலக சத்தியப்பிரமாண , கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு!

அரச அலுவலகங்களில் 2020ஆம் ஆண்டு கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வுகள் இன்று காலை 9.30மணியளவில் நடைபெற்றன.
அம்பாரை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலகத்திலும் பிரதேச செயலாளர் T. கஜேந்திரன் தலைமையில் கடமைகளை ஆரம்பித்தல், மற்றும் சத்தியப்பிரமாண நிகழ்வுகள் பூஜை வழிபாடுகள் என பல்வேறு பட்ட கடமைகளும் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்வின் ஆரம்பத்தில் தேசிய கொடியினை பிரதேச செயலாளர் ஏற்றி வைத்துடன்  தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.

தொடர்ந்து நாட்டிற்காக உயிர்நீத்த அனைவரின் நினைவாக இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்
உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வும் நடைபெற்றதன் பின்னர் பிரதேச செயலாளரினால் விசேட உரையும் வழங்கப்பட்டது.

உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.No comments:

Post a Comment