தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் சாதனை - Karaitivu.org

Breaking

Wednesday, April 17, 2019

தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் சாதனைஇவ்வருடம் அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான தேசிய கணித ஒலிம்பியாட் போட்டியில் கமு/கமு/கார்மேல் பாத்திமா கல்லூரி தரம் 11 மாணவி செல்வி. திலோத்திகா சிவசுப்பிரமணியம் தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேற்படி போட்டியில் தேசிய மட்டத்தில் எட்டு வருடங்களிற்குப் பின்னர் கமு/கமு/கார்மேல் பாத்திமா கல்லூரியிலிருந்து இம் மாணவி தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேற்படி வகை 111 அடிப்படையில் தேசிய கணித ஒலிம்பியாட் குழுவிற்குத் தெரிவுசெய்யப்பட்டு சர்வதேச ரீதியில் இலங்கையைப் பிரதிநிதித்துவம்  காரைதீவு மண்ணைச் சேர்ந்த  முதல் மாணவியும் இவராவார். 

இம்மாணவி பொறியியலாளர்  தா. சிவசுப்பிரமணியம், வைத்திய அதிகாரி திருமதி . ஜீவராணி சிவசுப்பிரமணியம் ஆகியோரின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

 எமது மண்ணிற்குப் பெருமைசேர்த்த இம்மாணவிக்கு காரைதீவு.ஓர்க் இணைத்தளமானது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

No comments:

Post a Comment