காரைதீவு பிரதேச மட்ட விளையாட்டு விழாவில் KSC மாபெரும் வெற்றி. - Karaitivu.org

Breaking

Monday, March 11, 2019

காரைதீவு பிரதேச மட்ட விளையாட்டு விழாவில் KSC மாபெரும் வெற்றி.

2019 ஆம் ஆண்டிற்கான காரைதீவு பிரதேச மட்ட விளையாட்டு விழாவில் KSC மாபெரும் வெற்றி.

2019 ஆம் ஆண்டுக்கான காரைதீவு பிரதேச மட்ட விளையாட்டு விழாவின் இறுதிநாள் நிகழ்வுகள் காரைதீவு பிரதேச செயலாளர் திரு.வேதநாயகம் ஜெகதீசன் அவர்களின் தலைமையில் கமு/விபுலானந்தா மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று (10) இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக  பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு.டி.கமலநாதன் அவர்களும், சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஜனாப் எம்.எம்.அச்சு முஹம்மட் அவர்களும்,    மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஜனாப்.எம்.ஐ எம்.அமீர் அலி அவர்களும் இன்னும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

கடந்த 1மாத காலமாகநடைபெற்று வந்த பிரதேச மட்ட போட்டிகளின் இறுதி நாளான நேற்று மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றது இப்போட்டிகளின்  முடிவின் படி காரைதீவு விளையாட்டு கழகம் 29 தங்கம் 18 வெள்ளி 2 வெண்கலப்பதக்த்தினை பெற்று 2019ம் ஆண்டிற்கான சம்பியனாக தெரிவாகினர். 4 தங்கம்,6 வெள்ளி, 10 வெண்கலப்பதக்கத்தினை பெற்று ஜொலிகிங்ஸ் விளையாட்டுக்கழகம் 2 ம் இடத்தினையும் 3 தங்கம், 10வெள்ளி, 15 வெண்கலப்பதக்கத்தினை பெற்று விவேகானந்தா விளையாட்டுக் கழகம் 3ம் இடத்தினையும் 1 தங்கப்பதக்கத்தை பெற்று றிமைண்டர் விளையாட்டு கழகம் 4ம் இடத்தினையும் பெற்று கொண்டனர். சிறந்த மெய்வல்லுனர் விரராக காரைதீவு விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த  R. Vijaj மற்றும் சிறந்த மெய்வல்லுனர் வீராங்கனையாக காரைதீவு விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த V. Lakshika வும் தெரிவாகினர்.
இப் போட்டிகள் அனைத்தும் காரைதீவு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் திரு.P.Vasanth தலைமையில் இடம்பெற்றது.
No comments:

Post a Comment