பேராதனை பல்கலைக்கழக மருத்துவபீட புதிய மாணவர் புகுமுக அங்குரார்ப்பண நிகழ்வு! - Karaitivu.org

Breaking

Wednesday, October 24, 2018

பேராதனை பல்கலைக்கழக மருத்துவபீட புதிய மாணவர் புகுமுக அங்குரார்ப்பண நிகழ்வு!

பேராதனை பல்கலைக்கழக மருத்துவபீட புதிய மாணவர் புகுமுக அங்குரார்ப்பண நிகழ்வு  22ஆம் திகதி திங்களன்று மருத்துவபீட பீடாதிபதி பேராசிரியர் ஆசிரி அபேகுணவர்த்தன தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் உபுல் பி திசாநாயக்க மருத்துவபீட பீடாதிபதி பேராசிரியர் ஆசிரி அபேகுணவர்த்தன ஆகியோர் உரையாற்றினர்.

தொடர்ந்து புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பேராதனை பல்கலைக்கழக உடற்றொழிலியல் விரிவுரை மண்டபத்தில் காலை 9.00  மணிக்கு  மருத்துவபீட பீடாதிபதி பேராசிரியர் ஆசிரி அபேகுணவர்த்தன வரவேற்புரையுரையுடன் ஆரம்பமானது. பல்கலைக்கழக  பீடங்களின் பீடாதிபதிகள் பதிவாளர் பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.


பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் உபுல் பி திசாநாயக்க பிரதான உரையாற்றினார். பேராதனைப்பல்கலைக்கழக மருத்துவபீடம் தொடர்பாக காணொளிப்படமொன்று காண்பக்கப்பட்டது. 

அங்குரார்ப்பண உரையை அதிதியான களனி பல்கலைக்கழக மருத்துவபீட பேராசிரியர் ஹரேந்திரா சில்வா காணொளி படங்களுடன் விரிவாக நிகழ்த்தினார்.நன்றியுரையை மாணவர் விவகார குழுத்தலைவி கலாநிதி மனோஜி பத்திரகே நிகழ்த்தினார். நிகழ்ச்சிநிரலில் குறிப்பிட்டபடி சரியாக  காலை 10.30க்கு அங்குரார்ப்பணநிகழ்வு நிறைவுபெற்றது.
No comments:

Post a Comment