மடத்தடிமீனாட்சி அம்மனாலய மகா கும்பாபிசேக முன்னோடி கலந்துரையாடல் ! - Karaitivu.org

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

வியாழன், 7 அக்டோபர், 2021

மடத்தடிமீனாட்சி அம்மனாலய மகா கும்பாபிசேக முன்னோடி கலந்துரையாடல் !

நிந்தவூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பளை மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வுக்கான கலந்துரையாடல் நிகழ்வு கடந்த ஆலயத்தில் நடைபெற்றது.

ஆலயத்தலைவர் கோ.கமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் முக்கிய பிரதானியாக கலந்துகொண்டார்.

மாவட்ட இந்துசமய கலாச்சார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில் ஆலயபோசகர் வி.ரி.சகாதேவராஜா ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இக் கலந்துரையாடல் நிகழ்வில் ஆலய எதிர்கால செயற்பாடுகள் மற்றும் ஆலய கும்பாபிஷேக நிகழ்வு நடத்துவதற்கான ஆரம்ப முன்னெடுப்புகள் தொடர்பாக கலந்துரையாடல் சுகாதார நடைமுறைகளுடன் இடம்பெற்றது.

சகல ஊர்களையும் இணைத்து முக்கியமான கும்பாபிசேகத்திற்கான ஒரு பொதுக்கூட்டமொன்றினை எதிர்வரும் சனிக்கிழமை காலை 9.30மணிக்கு நடாத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது.

( வி.ரி.சகாதேவராஜா) 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages