சொறிக்கல்முனையின் பெயர்ப்பதாகை திறப்பு விழா - Karaitivu.org

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

ஞாயிறு, 15 நவம்பர், 2020

சொறிக்கல்முனையின் பெயர்ப்பதாகை திறப்பு விழா

 வரலாற்றுச் சிறப்பும் , மிகவும் தொன்மை வாய்ந்த தமிழ் கிராமமாகிய சொறிக்கல்முனையின் பெயர்ப்பதாகையினை அதன் வடக்கு  எல்லையில் நிறுவி திறப்பு விழா செய்தனர், அக்கிராமத்து

"நாம் வளர - சமூக மேம்பாட்டுப் பேரவை , சொறிக்கல்முனை" அமைப்பினர்..


இந்நிகழ்வானது இன்று மாலை 15/11/2020 காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.. நிகழ்விற்கு கிராமத்து அருட்தந்தை லெஸ்லி ஜெயக்காந்தன் அடிகளாரும், இந்துமத தலைவர் தவபுதழ்வர் அவர்களும், பள்ளிநிர்வாக தலைவர் S.M. கணிப்பா அவர்களும் தமது பெறுமதி மிக்க வரவால் நிகழ்வை மெருகூட்டியதுடன்,


அர்ட்பணி லெஸ்லி ஜெயக்காந்தன் அடிகளாரின் ஆசிவாதத்துடன் கிராமத்து பெரியோர் மற்றும் நாம் வளர அமைப்பினர் இணைந்து பதாகையினை திறந்து வைத்தனர்...


பழமையான அக்கிராமத்திற்கு வரலாற்றுச் சாதனையெனவும், தற்போது தமிழ்க் கிராமங்களுக்கு எல்லையில் பெயர்ப்பதாகை முக்கியமென்பதையும், இதை முதற்தடவையாக முந்நின்று செய்த நாம் வளர இளைஞர்களையும் புகழாரம் சூடி, உற்சாகப்படுத்தி வாழ்த்து தெரிவித்தனர் அங்கு வந்த அதிதிகள்
Post Bottom Ad

Responsive Ads Here

Pages