காரைதீவு விபுலானந்தாவின் புதிய அதிபருக்கு வாழ்த்துக்கள் - Karaitivu.org

Breaking

Thursday, March 26, 2020

காரைதீவு விபுலானந்தாவின் புதிய அதிபருக்கு வாழ்த்துக்கள்காரைதீவு கமு/கமு/ விபுலானந்தா மத்திய கல்லூரியின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்ட எமது இணையத்தள ஆலோசகரும் காரைதீவு பிறீமியர் லீக் பிரதம இணைப்பாளருமான திரு. ம. சுந்தரராஜன் (SLPS)அவர்களுக்கு இணையக்குழுவின்  வாழ்த்துக்கள்.  

1993 ஆண்டு பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராக கல்விப் பணியில்  இணைந்துகொண்ட இவர், இலங்கை அதிபர் சேவைக்குத் தெரிவு செய்யப்பட்டு கமு/கமு/ விபுலானந்தா மத்திய கல்லூரியின் பிரதியதிபராகவும் பின்னர் கமு/கமு/ கண்ணகி இந்து வித்தியாலயத்தின் அதிபராகவும் கடமையாற்றி சமூகத்தின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் கமு/கமு/ விபுலானந்தா மத்திய கல்லூரியின் பிரதியதிபராக கடமையாற்றினார். கலைமானிப்பட்டம், பட்டப்பின் கல்வி டிப்ளோமா, பட்டப்பின் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா, கல்வி முதுமானி உட்பட பல்வேறு கல்வித் தகைமைகளையும், தொழில் தகைமைகளையும் கொண்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த கிறிக்கட் வீரராக  விளங்கிய இவர், மாவட்ட கிறிக்கட் பயிற்றுவிப்பாளர் குழாம் மற்றும் மாவட்ட கிறிக்கட் குழாம் என்பவற்றின் உறுப்பினராகவும் உள்ளார்.  TRAKS/SEDAK அமைப்பினூடாக பல்வேறு சமூகப் பணிகளையும் இவர் ஆற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

பல மாணவர்களை உருவாக்கிய சிறந்த ஆசிரியராகவும்  மாணவர்களின் ஒழுக்கத்தைப் பேணுவதில் முதன்மையானவராகவும் விளங்கும் இவரின் தலைமைத்துவத்தின் கீழ் சுவாமி விபுலாநந்தரின் திரு நாமத்தில் இயங்கும்    விபுலானந்தா மத்திய கல்லூரியி இன்னும் சாதனை படைக்க வாழ்த்துகிற்றோம்

காரைதீவு.ஓர்க் இணையக்குழு

No comments:

Post a Comment