நீங்கள் அஞ்சல் வாக்காளராக விண்ணப்பிக்கவுள்ளீர்களா? - Karaitivu.org

Breaking

Friday, March 6, 2020

நீங்கள் அஞ்சல் வாக்காளராக விண்ணப்பிக்கவுள்ளீர்களா?


நீங்கள் இவ்வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில்  அஞ்சல் வாக்காளராக விண்ணப்பிக்கவுள்ளீர்களா? அவ்வாறாயின் தேர்தல் திணைக்களத்தினால் வழங்கப்படும் பி.ஈ2.எஸ் எனும் படிவத்தில் கோரப்படும் நிருவாக மாவட்டம், தேர்தல் மாவட்டம், வாக்கெடுப்புப் பிரிவு, வாக்கெடுப்பு மாவட்ட இலக்கம்,  பெயருக்குரியதொடர் இலக்கம்,  கி. அ. பிரிவூ, கிராமம் /வீதி முதலான விபரங்களை தேர்தல் திணைக்கள இணையத்தளத்தில் பின்வரும் வழியில்இலகுவாக பெற்றுக்கொள்ளமுடியும்.

  •  முதலில் www.elections.gov.lk எனும் இணையத்தளத்திற்குச் செல்லவும்.
  • விரும்பிய மொழியைத் தெரிவுசெய்யவும்
  • வரும் திரையில்   வாக்களர் பதிவு 2019 இல் அணுகல் என்பதை தெரிவு செய்யவும்.   

  •  தொடர்ந்து வரும் திரையில் தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் மாவட்டத்தையும் தெரிவு செய்து, பாதுகாப்புக் காரணங்களுக்காக கோரப்படும் குறியீட்டினை Type செய்து காட்சிப்படுத்தவும் என்பதனை அழுத்தவும். 

  • பின்வரும் விடயங்கள் காட்சிப்படுத்தப்படும்No comments:

Post a Comment