கல்முனையில் போக்குவரத்து சமிங்ஞை விளக்கு தொகுதிகளை அமைக்க நடவடிக்கை! - Karaitivu.org

Breaking

Friday, August 31, 2018

கல்முனையில் போக்குவரத்து சமிங்ஞை விளக்கு தொகுதிகளை அமைக்க நடவடிக்கை!

(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனை மாநகர நெடுஞ்சாலையில் காணப்படுகின்ற வாகன நெரிசல்களையும் பாதசாரிகளின் நலன்களையும் கருத்தில் கொண்டு முக்கிய சில இடங்களில் வீதிப் போக்குவரத்து சமிங்ஞை விளக்கு தொகுதிகளை அமைப்பதற்கு கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை மற்றும் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை என்பவற்றுக்கு முன்பாகவும் கல்முனை ரவுண்டபோர்ட் சந்தியிலும் பஸ் டிப்போ வீதி சந்தியிலும் இவ்விளக்குத் தொகுதிகளை அமைப்பதற்குரிய இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றுள் முதற்கட்டமாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு முன்பாகவும் ரவுண்டபோர்ட் சந்தியிலும் இவற்றை அமைப்பதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment