சுருதி மாறிய புல்லாங்குழல் நூல் வெளியீடு - Karaitivu.org

Breaking

Monday, July 2, 2018

சுருதி மாறிய புல்லாங்குழல் நூல் வெளியீடு

கந்தசாமி கெளசிகன் எழுதிய சுருதி மாறிய புல்லாங்குழல் நூல் வெளியீட்டு விழாவானது தேனூர்  தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் தேற்றாத்தீவு மகா வித்தியாலயத்தில் 30.06.2018 அன்று பாடசாலையில் மண்டபத்தில் இடம் பெற்றது.
அந்த வகையில் இவ் வெளியீட்டு விழாவாவிற்கு பிரதம அதிதியாக மேலதிக பணிப்பாளர் நாயகம் நிதியமைச்சு திறைசேரி கலாநிதி மூ.கோபாலரெட்ணம் கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக வைத்திய அத்தியட்சகர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வைத்திய கலாநிதி கு.சுகுணன் மற்றும் கோட்ட கல்வி பணிப்பாளர் மண்முனை வடக்கு த.அருள்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது தேனூர்  தமிழ் சங்கத்தின் இலட்சனையை கலாபூசணம் க.தருமரெத்திரன் (தேனூரன்) திறந்து வைத்துடன் இவ் நூல் வெளியீட்டின் முதல் பிரதியை நூலாசிரியர் கந்தசாமி கெளசிகனிடம் இருந்து கலாநிதி மூ.கோபாலரெட்ணமிருந்து பெற்றுக் கொண்டார்

No comments:

Post a Comment