காரைதீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 73 வது சுதந்திர தின நிகழ்வு .... - Karaitivu.org

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

காரைதீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 73 வது சுதந்திர தின நிகழ்வு ....

 “வளமான எதிர்காலமும் சுபீட்சமான தாய்நாடும்" எனும் தொனிப்பொருளில் அமைந்த

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 73வது சுதந்திர தின நிகழ்வு காரைதீவு பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர்  திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் இன்று (4) மிகவும் சிறப்பாக  நடைபெற்றது.


இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் 

உரையாற்றூம் போது ஒவ்வொரு உத்தியோகத்தர்களும் எமது நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதுடன், நாட்டு மக்களுக்கு சிறந்த சேவையினை செய்ய உறுதி பூண  வேண்டுமென என கேட்டுக் கொண்டதுடன் “வளமான எதிர்காலமும் சுபீட்சமான தாய்நாடும்” என்கின்ற தொனிப்பொருளின் அடைவை உறுதி செய்வது எமது அர்ப்பணிப்புடனான சேவையிலே என்பதை உணர்ந்து சேவையாற்றவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.


 இதன் போது ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வளாகம் மற்றும் காரைதீவு சமுர்த்தி வங்கி தோணா அருகில் சிரமதான நிகழ்வும்,  மரக்கன்றுகள் நடும் நிகழ்வும்  நடைபெற்றது. நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், சமுர்த்தி பயனாளிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Responsive Ads Here

Pages