'ரெப் மோன்ஸ்டர்' சொல்லிசையில் 'எழுந்திடு' பாடல் ! - Karaitivu.org

Breaking

Saturday, November 14, 2020

'ரெப் மோன்ஸ்டர்' சொல்லிசையில் 'எழுந்திடு' பாடல் !

"வா மச்சி" நிறுவனத்தின் தயாரிப்பில் "ரெப் மோன்ஸ்டர்" சொல்லிசை குழுவினால் உருவாக்கப்பட்ட 3 வது படைப்பான "எழுந்திடு" எனும் பாடல் தீபாவளியை முன்னிட்டு இன்று(14) காலை 9 மணியளவில் வா மச்சி யூடியுப் சனலில் வெளியிடப்பட்டு தற்பொழுது வெற்றி கரமாக சமூக வலைதளங்களில் உலா வருகிறது. 

இவர்களின் இதற்கு முதலாக வெளிவந்த "போ கொரோனா" மற்றும் "கலகமானிடா" ஆகிய பாடல்கள் இலங்கையின் மூத்த கலைஞர்களினாலும் ,இந்தியாவின் சில பிரபல்யங்களினாலும் பாராட்டு பெற்றது குறிப்பிடத்தக்கது.

இப்பாடல் மனம் உடைந்து போன இளைஞன் ஒருவனுக்கு
ஒரு வழிகாட்டலால்  வாழ்வில் வெற்றி பெற்றதை கூறும் சிறந்த கருவுள்ள பாடலாகும்.

புஷ்பகாந்−அனுசரனை
இயக்கம்−சஜீத்
இசை−டிலு வீட்ஸ் 
 மிக்க்ஷிங் மாஸ்ரரிங்−ஹூமாப்பிரியன்
பாடியவர்கள்−பர்விந்தன்,சதுஷன்,தசானந்த்,துவாரகன்
நடிகர்−தமிழ் செல்வன்,நிவானுஜன்,தனோஸ்,கபிலன்
கலை−பிரசாந்,கபிலன்

வாழ்த்துக்கள் நம் கலைஞர்களுக்கு.... 

No comments:

Post a Comment