நாளை KUGA இனால் அரசியல் விஞ்ஞான பாட நிகழ்நிலை பரீட்சை நடாத்தப்படவுள்ளது - Karaitivu.org

Breaking

Tuesday, May 5, 2020

நாளை KUGA இனால் அரசியல் விஞ்ஞான பாட நிகழ்நிலை பரீட்சை நடாத்தப்படவுள்ளது

காரைதீவு  பல்கலைக் கழக மாணவர் சமூக சேவை ஒன்றியமானது வருடாவருடம் க.பொ.த (உயர்தர) மாணவர்களுக்கான கருத்தரங்குகளை நடாத்திவருகின்றது. தற்போதைய கொரோணா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக இம்முறை இக்கருத்தரங்கை பகுதி 1 பல்தேர்வு வினாக்களை  நிகழ்நிலை பரீட்சையாகவும், அமைப்புக் கட்டுரை வினாக்கள் மற்றும் கட்டுரை வினாக்களை மாணவர்கள் சுயமாக வீட்டில் செய்துபார்க்கும் வகையிலும் நடாத்தி பின் வளவாளர்கள் ஊடாக அவ்வினாக்களுக்கான விளக்கங்களை காணொளி ஊடாக வழங்கவுள்ளனர். 

மேற்படி விடயங்கள், காரைதீவு  பல்கலைக் கழக மாணவர் சமூக சேவை ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ முகநூல் கணக்கான Karaitivu Undergratuates Kuga  ஊடாக மாணவர்களுக்கு பகிரப்படவுள்ளன.

அந்தவகையில் நாளை மு.ப. 09.00 முதல் மு.ப. 10.00 வரை அரசியல் விஞ்ஞானம் 1 பகுதி A இற்கான பரீட்சை நடைபெறவுள்ளது.

பரீட்சையின் B பகுதி மற்றும் அரசியல் விஞ்ஞானம் 11 வினாத்தாள்கள் மற்றும் அவற்றிற்கான காணொளி விளக்கங்களை Karaitivu Undergratuates Kuga முகநூலூடாக வெளியிடப்படவுள்ளன
தகவல் - தலைவர்

No comments:

Post a Comment